டெல்லி: 2024 ஆம் ஆண்டு முடிந்து புதிய ஆண்டு தொடங்க இருக்கிறது ,நடப்பு ஆண்டில் இந்திய டெலிகாம் துறை என்னென்ன சவால்களை சந்தித்தது எவ்வாறெல்லாம் மேம்பட்டது என்பது குறித்து நாம் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.
2024ஆம் ஆண்டில் தொலைதொடர்பு சேவை துறையில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் தங்களுடைய ரீசார்ஜ் கட்டணங்களை கணிசமான அளவு உயர்த்தின. இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் இந்தியா ஆகிய மூன்று முதன்மையான தனியார் டெலிகாம் சேவை நிறுவனங்களும் தங்களுடைய ரீசார்ஜ் கட்டணங்களை 15 சதவீதம் வரை உயர்த்தின. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பின்னர் வாடிக்கையாளர்கள் பலரும் தனியார் தொலைதொடர்பு சேவை நிறுவனங்களை விடுத்து பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறினர். இது ஒரு வகையில் அரசு தொலைதொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இதனிடையே மோசடி அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் வாயிலாக லிங்க் மற்றும் ஓடிபிகளை அனுப்பி மக்களின் பணத்தை பறிக்கும் மோசடிகள் அதிகரித்தன.
இது தொலைத்தொடர்பு சேவை வழங்கக்கூடிய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஸ்பேம் கால்கள் மற்றும் மெசேஜ்களால் ஏராளமான மக்கள் தங்களுடைய பணத்தை பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டது. ஆக்ராவில் ஒரு பெண் இந்த மோசடி அழைப்புகளால் பணத்தை இழந்து தன்னுடைய உயிரையே மாய்த்து கொண்டார்.
இதனை அடுத்து மத்திய அரசு செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தின் உதவியோடு ஸ்பேம் கால்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை கையில் எடுத்தது. இதனை அடுத்து லட்சக்கணக்கான மோசடி அழைப்புகள் தடை செய்யப்பட்டன.
இந்த ஒழுங்குமுறையின் ஒரு பகுதியாக டிசம்பர் மாதத்தில் இருந்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஓடிபி மெசேஜ்கள் மற்றும் லிங்குகளை அனுப்புவதற்கான விதிமுறைகளையும் கடுமையாக்கியது. இதன்படி தொலைதொடர்பு சேவை வழங்கக்கூடிய நிறுவனங்கள் ஓடிபி மற்றும் லிங்க் உள்ளிட்டவை வரும்போது அது அங்கீகரிக்கப்பட்ட எண்களில் இருந்து தான் வருகிறதா என்பதை ஆய்வு செய்து அதன் பிறகே வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது .
2024 ஆம் ஆண்டில் பெருமளவிலான நிறுவனங்கள் சேட்டிலைட் அடிப்படையிலான இன்டர்நெட் சேவைகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளன. குறிப்பாக இதற்கான அனுமதியையும் இந்திய ஒழுங்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வழங்குவதற்கு முன் வந்துள்ளது எனவே ஜனவரி மாதத்தில் இருந்து இந்தியாவில் சேட்டிலைட் அடிப்படையான இன்டர்நெட் சேவைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications