பிஎஃப் பணம் முதல் சிலிண்டர் விலை வரை.. ஒரே நாள் தான் இருக்கு.. கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!

ஜூலை 1, 2025 முதல் இந்தியாவில் பல புதிய விதிகள் அமல்படுத்தப்பட உள்ளன. இவை இந்திய குடிமக்களும் வணிகங்களும் பயன்படுத்தும் ரயில் டிக்கெட் முன்பதிவு, ஆதார் - பான் இணைப்பு, சிலிண்டர் விலை, யுபிஐ பணப்பரிவர்த்தனை, ஏடிஎம் பரிவர்த்தனைகள் போன்ற பல விதிகள் மாற்றப்பட்டுள்ளன.

ஏடிஎம் மூலம் பிஎஃப் பணம் : ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஜூலை மாதத்தில் EPFO 3.0 என்ற புதிய பதிப்பை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் மூலம், ATM மற்றும் UPI மூலம் உடனடியாக PF பணம் எடுக்க முடியும். மேலும், UPI செயலிகள் மூலம் இருப்புச் சரிபார்ப்பு மற்றும் விரைவான கோரிக்கை செயலாக்கமும் இப்போது சாத்தியமாகும். முதலில் EPFO 3.0 ஐ ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தும், இதுவரை மாற்றம் நேர்ந்ததில்லை. எனவே, இந்த புதிய வசதிகள் ஜூலை மாதம் அமலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஃப் பணம் முதல் சிலிண்டர் விலை வரை.. ஒரே நாள் தான் இருக்கு.. கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!

ரயில் டிக்கெட் முன்பதிவு : IRCTC இணையதளம் மற்றும் செயலி வழியாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. ஜூலை 15 முதல், IRCTC கணக்குடன் ஆதார் எண் இணைத்து சரிபார்த்திருப்பது அவசியமாகும். மேலும், ரயில்வே முகவர்கள் மற்றும் ரயில் நிலைய கவுன்டர்களில் தட்கல் டிக்கெட் வாங்கும் பயணிகளும் ஆதார் எண் மற்றும் OTP மூலம் சரிபார்ப்பு செய்து மட்டுமே டிக்கெட் பெற முடியும். இந்த புதிய விதிகள் பயணிகளின் பாதுகாப்பையும் டிக்கெட் முறையின் நம்பகத்தன்மையையும் உயர்த்தும் நோக்கத்துடன் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது அவசியம் : மத்திய நேரடி வரி வாரியத்தின் (CBDT) புதிய விதிகளின்படி, ஜூலை 1, 2025 முதல் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை ஒன்றாக இணைப்பது கட்டாயமாகும். இதற்காக டிசம்பர் 31, 2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ.-யில் அதிரடி மாற்றம்: SBI, அதன் கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. ஜூலை 15, 2025 முதல் அமல் அடையும் இந்த மாற்றங்களில் குறைந்தபட்ச டியூ கணக்கீடு, பணம் செலுத்தும் முறைகள் மற்றும் இலவச ஏர் ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ் நிறுத்தம் போன்ற அம்சங்கள் அடங்கும். பயனாளர்கள் இந்த புதிய விதிகளுக்கு ஏற்ப தங்கள் கணக்குகளை கவனமாக பராமரிக்க வேண்டும் என்று வங்கி அறிவுறுத்தியுள்ளது.

யுபிஐ பணப்பரிவர்த்தனைகளில் மாற்றம் : இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) ஜூன் 30, 2025 முதல் UPI (யுனிஃபைடு பேமென்ட் இன்டர்ஃபேஸ்) முறையில் புதிய விதிகளை செயல்படுத்தவுள்ளது. இதன் படி, கூகுள் பே, ஃபோன்பே, பேடிஎம் போன்ற அனைத்து UPI-ஆதாரப்பெற்ற ஆப்ஸ்களும் பரிவர்த்தனைகள் செய்யும் பொழுது பெறுநரின் அதிகாரப்பூர்வ வங்கி கணக்கு பெயரை மட்டுமே காட்டும். இதுவரை, UPI செயலிகள் பெறுநரின் பெயருடன் அனுப்புநரின் தொலைபேசி எண்ணையும் காட்டியிருப்பதால், மோசடி அதிகரித்தது. புதிய விதி மோசடிகளை குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

HDFC கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம் :HDFC வங்கி தனது கிரெடிட் கார்டு விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. ஜூலை 1, 2025 முதல் அமல்படுத்தப்படும் இந்த புதிய விதிகளின் படி, கேமிங் செயலிகளில் ரூ.10,000 வரை செலவிடும்போது 1% கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல், பேடிஎம், ஃப்ரீசார்ஜ் போன்ற பணம் செலுத்தும் செயலிகள் வழியாக கிரெடிட் கார்டு மூலம் பணம் பரிமாற்றம் செய்தால் 1% கட்டணம் பிடிக்கப்படும்.

ICICI ஏடிஎம் பரிவர்த்தனைக்கு புதிய கட்டணம் : ICICI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் பரிவர்த்தனைகளில் புதிய கட்டண விதிகளை அறிவித்துள்ளது. இனிமேல், வேறு வங்கிகளின் ஏடிஎம் மூலம் மாதத்திற்கு மூன்று பரிவர்த்தனைகளைத் தாண்டி பணம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கு ₹23 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ₹8.50 கட்டணம் விதிக்கப்படும்.

சிலிண்டர் விலை : எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் LPG சிலிண்டர் விலையை திருத்தும் வழக்கம் உள்ளது. இதனையடுத்து, ஜூலை மாதத்திலும் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+