மோடி அரசு என்ன செய்தது..? குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பட்டியலிடும் முக்கிய திட்டங்கள்!!

பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெற்றிகரமாகத் துவக்கப்பட்டு, எக்னாமிக் சர்வே அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

நாடாளுமன்றத்தில் இரு அவைகள் முன்னிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் பட்ஜெட் தொடருக்கான கூட்டத்தொடர் துவங்கியுள்ளது. ராம்நாத் கோவிந்த் 2020ஆம் ஆண்டில் மத்திய அரசு செய்த பல முக்கிய அறிவிப்புகளையும், அதனால் மக்கள் அடைந்த நன்மைகளைப் பற்றியும் பேசினார்.

ஏழை மக்களுக்கு வீடு

ஏழை மக்களுக்கு வீடு

இந்திய கிராமங்களின் மக்களின் வாழ்வின் தரத்தை உயர்த்துவது அரசின் முக்கிய பணியாக உள்ளது. 2014 முதல் இந்தியாவின் பல பகுதிகளில் ஏழை மக்களுக்கு சுமார் 2 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளது மோடி தலைமையிலான அரசு.

தண்ணீர் விநியோகம்

தண்ணீர் விநியோகம்

இந்தியாவில் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் விநியோகம் செய்யும் ஜல் ஜீவன் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது மத்திய அரசு. இந்த திட்டத்தின் கீழ் சுமார் 3 கோடி குடும்பங்கள் தங்களது வீட்டிற்கே தண்ணீரைப் பெற துவங்கியுள்ளனர்.

சாலை விரிவாக்கம்

சாலை விரிவாக்கம்

பிரதான் மந்திரி கரம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 6.42 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலான சாலை இந்தியா கிரமங்களில் போடப்பட்டு உள்ளது.

இதனால் போக்குவரத்து பெரிய அளவில் மேம்பட்டு உள்ளதாகக் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்தார்.

கிராமங்களுக்கு இண்டர்நெட்

கிராமங்களுக்கு இண்டர்நெட்

சாலை திட்டத்தைப் போலவே இந்திய கிராமங்களுக்கு இண்டர்நெட் சேவையும் அளிக்கப்பட்டு வருகிறது, இந்திய கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டதை அடுத்து தற்போது 6 லட்ச கிராமங்களுக்கு ஆப்டிக் பைபர் திட்டத்தின் மூலம் இண்டர்நெட் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

தொழிற்துறை வளர்ச்சி

தொழிற்துறை வளர்ச்சி

நாட்டின் தொழிற்துறையை மேம்படுத்த அவசர கடன் உறுதி திட்டத்தின் கீழ் டுமாக் 3,00,000 கோடி ரூபாயும், வர்த்தக பாதிப்பு மற்றும் சரிவில் இருக்கும் MSME நிறுவனங்களுக்கு 20,000 கோடி ரூபாயும் நிதி உதவி செய்யப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட பொருளாதார ஊக்கத் திட்டத்தின் போது அறிவிக்கப்பட்டவை. மோடி சொல்லும் மினி பட்ஜெட் இதுதான்.

7 கோடி பெண்கள்

7 கோடி பெண்கள்

Deendayal Antyodaya Yojana-Rashtriya Grameen Ajeevika திட்டத்தின் கீழ் 66 சுய உதவிக் குழு மூலம் நாட்டில் சுமார் 7 கோடி பெண்கள் சொந்தமாகத் தொழில் செய்ய துவங்கியுள்ளனர். இந்த பெண்கள் சுய உதவி குழுவிற்கு கடந்த 6 வருடத்தில் சுமார் 3,40,000 கோடி ரூபாய் அளவிலான நிதி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.

சானிட்டரி நாப்கின்

சானிட்டரி நாப்கின்

இந்திய கிராமங்களில் இருக்கும் பெண்களின் உடள் நலத்தை மேம்படுத்துவதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் சுவிதா திட்டத்தின் கீழ் வெறும் 1 ரூபாயில் சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. இந்து கிராமங்களில் இருக்கும் பெண்களுக்கு, குறிப்பாக வேலைக்குச் செல்லும் கிராமத்துப் பெண்களுக்குப் பெரிய அளவில் உதவும்.

ஜன் தன் கணக்குகள்

ஜன் தன் கணக்குகள்

ஜன் தன் கணக்குகள் மற்றும் நேரடி மானிய விநியோகம் மூலம் சுமார் 1,80,000 கோடி ரூபாய் அளவிலான நிதியைச் சேமிக்கப்பட்டு உள்ளது என்றும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+