அமெரிக்க ஃபெடரல் அப்பீல் நீதிமன்றம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பெரும் பின்னடைவை அளித்துள்ளது. டிரம்ப் இந்தியா மீது 50 சதவீத வரிகளை விதித்துள்ளது உலக நாடுகள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது, அமெரிக்கா - இந்தியா மத்தியில் நீண்ட காலமாக நட்புறவு இருந்தும் இத்தகைய சூழ்நிலை உருவாகியுள்ளது கூடுதல் அதிர்ச்சியளிக்கும் விஷயமாக உள்ளது.
டிரம்ப் இந்தியா மீது மட்டும் அல்லாமல் அமெரிக்காவின் கிட்டத்தட்ட அனைத்து வர்த்தக நாடுகளுக்கும் விதித்த வரிகளை அமல்படுத்தியிருக்கும் வேளையில் இந்த வரியை விதிக்க டிரம்ப்-க்கு சட்ட ரீதியாக உரிமை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனினும், இந்த வரிகளை தற்போது அமலில் வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, இதனால் டிரம்ப் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்ய நேரம் கிடைத்துள்ளது மட்டும் அல்லாமல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்த தீர்ப்பு, நியூயார்க்கில் உள்ள சிறப்பு வர்த்தக நீதிமன்றத்தின் மே மாத தீர்ப்பை ஃபெடரல் அப்பீல் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே இது டிரம்ப்-ன் வரி விதிப்புக்கு 2வது பெரும் தோல்வியாக பார்க்கபடுகிறது.
டிரம்பின் இந்த மோசமான வர்த்தக கொள்கைகள் நிதி சந்தைகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளன, அமெரிக்க நிறுவனங்களின் தொழில்களுக்கு நிச்சயமின்மையை ஏற்படுத்தியுள்ளன, விலை உயர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சி குறைவு போன்ற அச்சங்களை தோற்றுவித்துள்ளன.
நீதிமன்றம் தீர்ப்பு சொல்வது என்ன..?
டிரம்ப் ஏப்ரல் 2ஆம் தேதி 2ஐ விடுதலை தினமாக அறிவித்து அமெரிக்காவுடன் வர்த்தக பற்றாக்குறை கொண்ட நாடுகளுக்கு 50 சதவீதம் வரை ரெசிப்ரோக்கல் வரிகளை விதித்தார், இதை தொடர்ந்து மற்ற நாடுகளுக்கு 10 சதவீதம் அடிப்படை வரி அறிவித்தார்.
இது உலக நாடுகள் மத்தியில் பெரும் வர்த்தக எதிர்ப்பு நிலவிய நிலையில், 90 நாட்களுக்கு இந்த வரிகளை நடைமுறைப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தினார். இந்த இடைப்பட்ட காலத்தில் அமெரிக்க அரசு யுகே, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் போன்ற சில நாடுகள் ஒருதலைப்பட்ச ஒப்பந்தங்களை செய்யப்பட்டு வரி விதிப்பில் சில தளர்வுகளை மட்டும் விதிக்கப்பட்ட.
இப்படி டிரம்ப் விதித்த அனைத்து வரிகளும் சட்டத்திட்டங்களுக்கு எதிரானவை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதேபோல் இந்த வரியை தற்போது நிறுத்தவோ, திரும்ப பெறவோ நீதிமன்றம் உத்தரவிடவில்லை. எனவே இந்த வரி தொடர்ந்து நடைமுறையில் இருக்கும், மேலும் டிரம்ப் மேல்முறையீடு செய்து இந்த வரி நியாயமானது, அவசியமானது, சட்டத்தை மீறி எதுவும் செய்யப்படவில்லை என்பதை நிரூபணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
டிரம்பின் வரி விதிப்பு விளக்கம்
டிரம்ப் அரசு, காங்கிரஸ் ஒப்புதல் இல்லாமல் செயல்படும் அசாதாரண அதிகாரத்தை இருப்பதாக கூறுகிறார். அமெரிக்காவின் நீண்டகால வர்த்தக பற்றாக்குறையை "தேசிய அவசரநிலை" என அறிவித்து, 1977 சர்வதேச அவசர பொருளாதார அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் இந்த வரிகளை தனது வர்த்தக நாடுகள் மீது விதிப்பது சரி என நியாயப்படுத்துகிறார்.
நீதிமன்றம் ஏன் டிரம்புக்கு எதிராக தீர்ப்பளித்தது
நீதிமன்றம், டிரம்ப் நடவடிக்கையை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் அவசர வரி பயன்பாட்டை ஒப்பிட்டு பேசியது.
நிக்சன், அமெரிக்க டாலரை தங்க விலையுடன் இணைக்கும் கொள்கையை நிறுத்த வேண்டும் என முடிவு செய்த போது பொருளாதார குழப்பம் ஏற்பட்டது. அப்போது 1917 எதிரி வர்த்தக சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட International Emergency Economic Powers Act 1977 சட்டத்தில் சில வாய்ப்புகளை வழங்கியது, இதன் மூலம் நிக்சன் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது நீதிமன்றம் டிரம்பின் நடவடிக்கையை சட்டவிரோதமாகக் கண்டது.
டிரம்புக்கு அடுத்த கட்டம் என்ன
நீதிமன்றத்தில் டிரம்ப் அரசின் மேல்முறையீட்டில் தோல்வி அடைந்தால் வரிகள் ரத்து செய்யப்படும். இதன் மூலம் அமெரிக்கா புதிய வரி விதிப்பு மூலம் வசூலிக்கப்பட்ட இறக்குமதி வரிகளை திருப்பி அளிக்க வேண்டியிருக்கும். இது அமெரிக்க கருவூலத்துக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
இந்த ஏப்ரல் 2ஆம் தேதி முதல் விதிக்கப்பட்ட வரிகள் மூலம் ஜூலை வரை அமெரிக்க அரசு 159 பில்லியன் டாலர் அளவிலான தொகையை வசூலித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் இருமடங்கு அதிகமாகும். டிரம்ப் அரசின் மேல்முறையீட்டில் தோல்வி அடைந்தால் வரிகளை திருப்பி செலுத்த வேண்டியிருக்கும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications