இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் எப்போதும் இல்லாத மாற்றங்கள் தற்போது நடந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும் ஐடி சேவை நிறுவனங்கள் தற்போது வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது, எப்போதாவது அதிக ஊழியர்களை பணியில் சேர்க்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் தற்போது அதிகளவில் ஊழியர்களை சேர்த்து வருகிறது.
வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுடைய செலவுகளை குறைப்பதற்காக இந்தியாவில் பேக் ஆஃபீஸ் அமைப்பது வழக்கம், ஆனால் தற்போது இந்தியாவில் கிளை அலுவலகத்தை துவங்குவதில் அதிகப்படியான ஆர்வத்தை காட்டி வருகிறது.

கடந்த 3 மாதத்தில் ஜேபி மோர்கன் சேஸ், சிட்டி, லாய்ட்ஸ் பேங்கிங் குரூப், நேட்வெஸ்ட் மற்றும் டச்சஸ் வங்கி ஆகியவை இந்தியாவில் புதிய அலுவலகத்தை திறப்பது குறித்தோ அல்லது இந்தியாவில் இருக்கும் அலுவலகத்தை விரிவாக்கம் செய்வதாகவோ அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக ஜேபி மோர்கன் சேஸ் மும்பை மற்றும் பெங்களூரில் புதிய கிளை அலுவலகங்களை திறக்க உள்ளதாக கடந்த வாரம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களின் இந்திய கிளை அலுவலகங்களை Global Capability Centres (GCC) அல்லது captives என அழைக்கப்படுகிறது. நாஸ்காம் ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் 1580 ஜிசிசி-களில் தற்போது 16 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த எண்ணிக்கை 2026-27 ஆம் ஆண்டுக்குள் 2000 ஜிசிசி ஆக உயர உள்ளது.
மேலும் இந்திய ஜிசிசி-களில் பணியாற்றுவோர் எண்ணிக்கை 2030க்குள் 45 லட்சம் என்ற அளவீட்டை தாண்டும் என EY மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கிளை அலுவலகங்களை திறக்க, குறிப்பாக திடீரென அதிகமாக திறக்க என்ன காரணம்..?
இந்தியாவில் அலுவலகத்தை துவங்கி உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு தன்னுடைய சேவைகளை மேம்படுத்த திறமையான அதேபோல் பல தொழில்நுட்பம், சேவை பிரிவில் அதிகப்படியான ஊழியர்கள் உள்ளனர். இதை விட முக்கியமாக இந்தியாவில் அலுவலகம் அமைப்பது மூலம் சம்பளம் முதல் அலுவலகம் வாடகை வரையில் அனைத்தும் குறைவு இது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.
இது அடிப்படை காரணமாக இருந்தாலும் திடிரென இந்த வருடம் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கிளை அலுவலகங்களை திறக்க அதிக ஆர்வம் காட்ட முக்கியமான காரணம் உண்டு. தற்போது அனைத்து துறையிலும், அனைத்து சேவை பிரிவிலும் டிஜிட்டல் சேவைகள் அதிகமாகியுள்ளது.

இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை மொத்தமாக மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது, அனைத்திற்கும் கான்டிராக்ட் ஊழியர்களையும், நிறுவனங்களை பெறுவதை விடவும் நிரந்தரமாக ஊழியர்களை இணைத்து விட்டால் அனைத்து விதிமான சேவை மேம்பாடுகளையும் திறம்பட, குறைந்த செலவில், வேகமாகவும் செய்ய முடியும்.
கொரோனா தொற்று காலத்தில் உருவான டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன் மற்றும் ஆட்டோமேஷன் டிமாண்ட் வெளிநாட்டு நிறுவனங்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதோடு AI, கிளவுட் சேவைகள் சர்வதேச நிறுவனங்களுக்கு முக்கியமானதாக மாறிய காரணத்தால், இந்திய ஊழியர்களின் தேவை தற்போது வெளிநாட்டு நிறுவனங்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்திய சந்தையில் இருக்கும் திறமைகளை வேகமாக ஈர்க்க வேண்டும் என்பதற்காக தற்போது அதிகப்படியான வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தனது கிளை அலுவலகங்களை வேகமாக திறந்து வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications