இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் தனது வர்த்தகத்தை அனைத்து வகையிலும் விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கதிற்கு மத்தியில், இத்தொழில்நுட்பத்தில் கிடைக்கும் வர்த்தகம் பெரும்பாலும், குறுகிய காலம், குறைவான ஒப்பந்த மதிப்புடன் வரும் காரணத்தால் நீண்ட கால அடிப்படையிலான பெரிய திட்டங்கள் சந்தையில் கிடைப்பது குறைந்துள்ளது.
இதன் வாயிலாக டிசிஎஸ் டேட்டா சென்டர் அமைப்பது முதல் ஜிசிசி நிறுவனங்களுக்கு உதவுவது வரையில் அனைத்து பிரிவுகளிலும் தனது வர்த்தகத்தையும், வருமானத்தையும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை நிறுவனமான Best Buy, இந்தியாவில் வைத்திருக்கும் அதன் ஜிசிசி அலுவலகம் மற்றும் அதன் நிரிவாகத்தை 5 ஆண்டுகளுக்கு 3ஆம் தரப்பு நிறுவனத்திற்கு அளிக்க முடிவு செய்தது Request For Proposal கோரியது.
இந்த டெக்னாலஜி சேவை ஒப்பந்ததை கைப்பற்ற டிசிஎஸ், விப்ரோ, அக்செனசர் போட்டிப்போட்ட நிலையில், டிசிஎஸ் மற்றும் அக்சென்சர் தான் இறுதிக்கட்டத்தை எட்டியது.
இந்த நிலையில் Best Buy நிறுவனத்துடன் ஏற்கனவே டிசிஎஸ் பணியாற்றி வரும் நிலையிலும், தற்போது வருடம் 75 - 100 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டக்கூட்டிய வர்த்தகத்தை இரு நிறுவனங்களும் கொண்டுள்ளது. இந்த நட்பு தற்போது 2000 கோடி ரூபாய் மதிப்பிலான மாபெரும் திட்டத்தை மொத்தமாக கைப்பற்ற உதவியுள்ளது என தெரிகிறது.
2024ஆம் ஆண்டில் பெஸ்ட் பை பெங்களூரில் சுமார் 70000 சதுரடி கொண்ட அலுவலகத்தை டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் பணிக்காக அமைத்தது. தற்போது பெங்களூர் அலுவலகம் Best Buy நிறுவனத்தின் ஏஐ மற்றும் டிஜிட்டல் காமர்ஸ் பிரிவின் மையப்புள்ளியாக உள்ளது.
சுமார் 600 ஊழியர்கள் கொண்ட இந்த ஜிசிசி ஆப்ரேஷனை டிசிஎஸ் கைப்பற்றுவது மூலம் டேட்டா, அனலிட்டிக்ஸ் மற்றும் ஏஐ சேவைகளை கொடுக்க உள்ளது. இது 5 வருட ஒப்பந்தம் என்பதால் இதற்கான நீண்ட சேவை ஒப்பந்தங்களையும் கைப்பற்றியுள்ளது, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
ஆகஸ்ட் மாத இறுதியில் டிசிஎஸ் ஜெர்மனி கார் நிறுவனமான Porsche-வின் தடுமாறும் ஐடி சேவை பிரவான MHP Management- und IT-Beratung Gmb நிறுவனத்தை சுமார் 320 மில்லியன் யூரோ தொகைக்கு மொத்தமாக கைப்பற்றி தனது முழு கட்டுப்பாட்டில் எடுத்தது.
MHP Management ஆட்டோமோட்டிவ் துறையில் மிகப்பெரிய கன்சல்டிங் நிறுவனமாக உள்ளது, ஐடி சேவையில் துவங்கி, ஏஐ, SAP, உற்பத்தியில் டிஜிட்டல் சேவை அளிப்பது வரையில் பல முக்கியமான சேவைகளை தொழிற்துறைக்கு வழங்கி வருகிறது. சுமார் 4500 ஊழியர்கள் பணியாற்றும் இந்த நிறுவனத்தின் மூலம் ஜெர்மனி நாட்டின் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறைக்கும், தொழிற்துறைக்கும் சேவை அளிக்கும் வாய்ப்பை டிசிஎஸ் பெறும்.


Click it and Unblock the Notifications

