உலகின் மிகப்பெரிய வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் படியாக, இந்திய அரசாங்கம் 2014 ஆம் ஆண்டு "மேக் இன் இந்தியா" என்ற திட்டத்தை அறிவித்தது. இதில் இந்தியாவை தொழில்துறையில் முன்னேற்றும் நோக்கத்துடன், உலகம் முழுவதும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த திட்டம் வெற்றியடைந்ததா? அல்லது தோல்வியுற்றதா? இதை மீண்டும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு விவாதம் உருவானது.
ஸ்டார்ட்அப் உலகில் சிக்கல்கள் - ஃப்ளூயன்சர் கருத்து:பிரபல ஃப்ளூயன்சர் மற்றும் தொழில்முனைவோர் ஆக்ஷத் ஸ்ரீவாஸ்தவா தனது சமூக வலைத்தளத்தில் (X, முந்தைய Twitter) வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் கூறியது, "இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப்கள் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில் உருவான வணிக முறைகளை இந்தியா பின்பற்றி பயன்படுத்துகிறது."உதாரணமாக, ஓலா என்பது ஊபரின் Copy; Zomato என்பது Yelp இன் copy; பேடிஎம் என்பது சீனாவின் Alipay மாடலை பின்பற்றியது.

அதுமட்டுமல்லாமல் அவர் மேலும் கூறியது, "Make In India" என்பது தோல்வியடைந்த இயக்கம். உண்மையில் இப்போது இந்தியாவில் மிக அதிகமாக நடைபெறுவது 'அசெம்பிள் இன் இந்தியா' தான். புது கண்டுபிடிப்புகள் இல்லாமல் வெளிநாட்டு மாதிரிகளை மாற்றியமைத்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுவிட்டது."
இதற்கு எதிரான கருத்துகள்:அவரது இந்தக் கருத்து இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. சிலர் இதை ஆதரித்தாலும், பலர் எதிர்க்கத் தொடங்கினர். குறிப்பாக Groww நிறுவனம் அவரது கருத்துக்கு எதிராக பதிலளித்தது. Groww நிறுவனம் கூறியது, "2015 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் பல ஸ்டார்ட்அப்கள் உண்மையில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்துள்ளன. பேடிஎம், Zomato, ஓலா ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்துள்ளன.
IT மற்றும் உற்பத்தித் துறையில் இந்திய MSMEகள் 2025ம் ஆண்டுக்குள் 46% ஏற்றுமதியை மேற்கொள்ளும் என கணிக்கப்படுகிறது." அதேபோல், இந்தியாவின் ஸ்டார்ட்அப் சூழல் பணம் அனுப்புதல், உணவு டெலிவரி, ஃபின்டெக் போன்ற துறைகளில் முன்னேறி வருகின்றது என்றும் அவர்கள் கூறினர்.
சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்து: இந்த விவாதம் இணையத்தில் பல்வேறு கருத்துகளை உருவாக்கியது. சிலர் ஃப்ளூயன்சரின் கருத்தை ஆதரிக்க, சிலர் Groww-வின் கருத்தை ஏற்கும் நிலையில் இருந்தனர். ஒரு பயனர் எழுதிய கருத்து, "வெற்றிகரமான வணிக மாடல்களை copy செய்தாலும், இந்திய சந்தைக்கு அதனை மாற்றி அமைப்பது சிறந்த வணிக அறிவு. ஆனால் புது மதிப்பை உருவாக்காமல் சத்தமாக மார்க்கெட்டிங் செய்வது தவறு."
மற்றொரு பயனர் கூறியது: "இந்திய தொலைக்காட்சிப் படைப்புகளும் கூட copy தான். Big Boss, Shark Tank, The Kapil Sharma Show ஆகியவை எல்லாம் மேற்கத்திய நிகழ்ச்சிகளின் copyகள்." அதே சமயம் மற்றொரு பயனர் விவாதத்தில் கூறியது, "உலகிலேயே பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள யோசனைகளை எடுத்துத்தான் வெற்றி அடைந்துள்ளன. முக்கியமானது உள்ளூர் சந்தைக்கேற்ப மாற்றுதல் மற்றும் புதுமை சேர்ப்பதே."
இந்திய ஸ்டார்ட்அப்புகளின் உண்மை நிலை: தொடக்க நிறுவன உலகில் வெற்றிகரமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்திய ஸ்டார்ட்அப்புகள் புது கண்டுபிடிப்புகளை உருவாக்கி உலக சந்தையில் தனித்தன்மை பெற்றிருக்கின்றன என்றாலும், சில புலனாய்வுகள் மற்றும் விமர்சனங்கள் உண்மையான சவால்களை வெளிக்கொண்டு வந்துள்ளன.
இந்த விவாதம் இந்திய ஸ்டார்ட்அப் உலகிற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. வெறும் மாற்றியமைத்த மாடல்கள் மூலம் மட்டும் நீண்ட கால வெற்றியை பெற முடியாது. உண்மையான வளர்ச்சி என்பது உள்ளூர் சந்தையின் தேவைகளை புரிந்து, புதிய மதிப்பை உருவாக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகளை உருவாக்குவதில்தான் இருக்கிறது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் எதிர்கால வெற்றி, புது கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதிலும், இந்தியாவை உலக தொழில்நுட்ப முன்னேற்ற நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய நிலைக்குக் கொண்டு வருவதிலும் உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications