இந்தியா டெக்ஸ்டைல் மற்றும் ஆடைகள், உணவுப் பொருட்கள், இரும்பு மற்றும் ஸ்டீல், போக்குவரத்து ஆகியவற்றில் ஆத்மநிர்பர் என்ற நிலையை அடைந்துள்ளது என்றும், இயந்திரங்கள், மின்னணுவியல் மற்றும் பிளாஸ்டிக் துறைகளில் தொடர்ந்து பின்தங்கியுள்ளது என்று இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மற்றும் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் (PwC) இணைந்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.
2022 ஆம் நிதியாண்டுக்கான AatmaNirbhar Index 0.69 ஆக உள்ளது. இந்தியாவின் self-reliance அளவீட்டைக் கணக்கிடும் நடவடிக்கையாக, தொழில்துறை அமைப்பான CII மற்றும் கணக்கியல் நிறுவனமான PwC ஆகியவை இணைந்து 'AatmaNirbhar Index' உருவாக்கியுள்ளன.
ஆனால் உண்மையில் இந்தியாவின் ஏற்றுமதி, உற்பத்தி, உள்நாட்டுத் தேவை அளவுகள் ஆகியவை எப்படி உள்ளது.
உற்பத்தித் துறை
இந்தியாவின் உற்பத்தித் துறை வலுவாக இருக்கும் நிலையிலும், புதிய வணிகம் மற்றும் அதிகரித்து வரும் உற்பத்தி அளவுகளின் மூலம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டின் உற்பத்தி வளர்ச்சி 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
PMI குறியீடு
இதன் மூலம் S&P குளோபல் இந்தியா மேனுஃபேக்ச்சரிங் பர்சேசிங் மேனேஜர்ஸ் இன்டெக்ஸ் (PMI) டிசம்பரில் 57.8 ஆக உயர்ந்துள்ளது. இது நவம்பர் மாதத்தில் 55.7 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய உற்பத்தித் துறை அக்டோபர் 2020 முதல் சிறப்பாகவும் வலுவான முன்னேற்றத்தையும் அடைந்து வருகிறது.
3வது காலாண்டு அளவு 56.3 புள்ளிகள்
நடப்பு நிதியாண்டில் 3வது காலாண்டிற்கான பிஎம்ஐ குறியீட்டின் சராசரி அளவு 56.3 புள்ளிகள் உடன் ஒரு வருட உச்சத்தை அடைந்துள்ளது. பொதுவாக PMI குறியீடு 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் வளர்ச்சி பாதையில் உள்ளது என்பது பொருள்.
ஏற்றுமதி ஆர்டர்கள்
ஆனால் இதே காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் ஏற்றுமதி ஆர்டர்கள், ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. மேலும் இந்தியப் பொருட்களுக்கான உலகளாவிய தேவையும் மேம்பட்டு இருந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் வந்தாலும் நவம்பர் மாதத்தில் குறைவான ஏற்றுமதி அளவுகளே பதிவாகியுள்ளது.
புதிய ஆர்டர்கள்
வெளிநாடுகளில் இருந்து புதிய ஆர்டர்கள் கடந்த ஐந்து மாதங்களில் மெல்ல மெல்ல உயர்ந்தாலும், பல நிறுவனங்கள், பல துறைகள் முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் இருந்து புதிய ஆர்டர்களைப் பெறுவதில் கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வருகிறது.
உள்நாட்டு தேவை
உள்நாட்டு தேவை என்பது பிப்ரவரி 2021ல் இருந்து உயர்ந்து வந்தாலும் பொருளாதாரச் சூழ்நிலைகள் சிறப்பாக இருக்கும் காரணத்தாலும், பண்டிகை, மக்கள் கையில் கூடுதல் வருமானம் ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து உயிர்ப்புடன் உள்ளது.
முக்கியத் துறை
உதாரணமாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதிகக் கார்களை 2022ல் விற்பனை செய்தாலும், டெக்ஸ்டைல் துறை தீபாவளி பண்டிகையின் போது கூடப் புதிய ஆர்டர் அளவும், மதிப்பும் குறைவு என்பது தான் உண்மை. இப்படி ஒவ்வொரு துறைக்கும் ஒரு கதை உள்ளது.
இறக்குமதி
ஆனால் இந்திய உற்பத்தி சந்தையில் மொத்த உற்பத்தி அளவுகளையும் உள்நாட்டு சந்தை ஈர்க்கும் அளவுக்கு இல்லை, அதேபோல் பல துறையில் தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்டுத் தான் வருகிறது.
2023 போராட்டம்
2023 ஆம் ஆண்டில் பொருளாதார மந்தநிலை உலகின் 3ல் ஒரு பகுதி நாடுகளில் உருவாகும் என ஐபிஎம் தலைவர் கூறியிருக்கும் நிலையில் இந்திய உள்நாட்டு தேவை பெரிய அளவில் உயராத நேரத்தில் உற்பத்தி நிறுவனங்கள் வெளிநாட்டுக்கு எப்படி ஏற்றுமதி செய்யும் என்பது பெரும் கேள்வி தான்.


Click it and Unblock the Notifications