இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீனா-வை போலவே ஏற்றுமதி மற்றும் உற்பத்தித் துறையைச் சார்ந்து மாற்ற வேண்டும் என மத்திய அரசு தீவிரமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க மேக் இன் இந்தியா, PLI எனப் பல திட்டங்களையும், சலுகைகளையும் மத்திய மாநில அரசு அறிவித்து வருகிறது.
இதில் மேக் இந்தியா திட்டம் மூலம் இந்தியாவின் மொபைல் உற்பத்தியில் புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
மொபைல் போன் ஏற்றுமதி
செப்டம்பர் மாதம் முதல் முறையாக இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதியின் மதிப்பு முதல் முறையாக 1 பில்லியன் டாலர் அதாவது 8200 கோடி ரூபாய் அளவீட்டை எட்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது மட்டும் அல்லாமல் புதிய பென்ச்மார்க் அளவும் உருவாக்கப்பட்டு உள்ளது.
உற்பத்தி - ஏற்றுமதி
இந்தியாவில் தற்போது பல நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து வெளிநாட்டு உற்பத்தி சந்தைக்குக் கொண்டு சென்று வருகிறது. இதன் அடிப்படையில் சமீபத்தில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்த அனைத்து ஸ்மார்ட்போன்களையும் இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
1 பில்லியன் டாலர்
இதனால் இனி வரும் ஒவ்வொரு மாதமும் 1 பில்லியன் டாலர் அளவீட்டை தாண்டுகிறதா என்பது தான் ஸ்மார்ட்போன் தயாரிப்பு துறையின் முக்கிய இலக்காக இருக்கப் போகிறது. ஏப்ரல் - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி அளவு 4.2 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் வெறும் 1.7 பில்லியன் டாலராக இருந்தது.
ஸ்மார்ட்போன் ஏற்றுமதி
இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி அதிகரிக்க மிக முக்கியமான காரணம் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி கான்டிராக்ட் நிறுவனங்களான பாக்ஸ்கான், விஸ்திரான், பெகாட்ரான் ஆகியவையும், சாம்சங் நிறுவனம் தான். இந்த நிறுவனங்கள் 40,995 கோடி ரூபாய் PLI திட்டத்தில் பலன் அடைந்துள்ளது.
பியூஷ் கோயல்
அரசின் Production Linked Incentive திட்டம் மூலம் நாட்டின் உற்பத்தி, வேலைவாய்ப்புகளை அதிகரித்து இந்தியாவைச் சர்வதேச உற்பத்தி ஹாப் ஆக மாற்றும் முயற்சிக்கு செப்டம்பர் மாத 1 பில்லியன் டாலர் மதிப்பிலான மொபைல் போன் ஏற்றுமதி பெரும் வெற்றி என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications