2030 தான் இலக்கே!! மாஸாக ஸ்கெட்ச் போட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!! அடுத்தடுத்த அதிரடி!!

தமிழ்நாட்டில் கூடிய விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஒரு புறம் தேர்தல் ஆணையம் அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கிவிட்டது, மறுபுறம் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை தொடங்கிவிட்டன.

இந்த சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் 2.0 மாடலின் கீழ் 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு எப்படி மாறும் என்பதற்கான முக்கியமான 14 துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற உங்கள் கனவை சொல்லுங்க திட்டத்தின் நிறைவாக கனவுகள் மெய்ப்படும் என்ற தலைப்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

2030 தான் இலக்கே!! மாஸாக ஸ்கெட்ச் போட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!! அடுத்தடுத்த அதிரடி!!

மக்கள் சொன்ன கருத்துக்களை அடிப்படையாக வைத்து அவற்றையெல்லாம் முன்னுரிமைப்படுத்தி தமிழ்நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை அதாவது தமிழ்நாடு 2030 என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு 14 முக்கிய அம்சங்களை அறிவிக்கிறேன் என கூறினார்.

இதன்படி தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு முகவரி இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 2030 ஆம் ஆண்டிற்குள் கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 5 லட்சம் வீடுகளும் நகர்ப்புறங்களில் 2 லட்சம் வீடுகளும் கட்டி , தேவைப்படும் ஒவ்வொரு குடும்பத்தின் கைகளிலும் சாவியை ஒப்படைப்போம் என தெரிவித்திருக்கிறார்.

அடுத்ததாக நலமுடன் தமிழ்நாடு 2030 என்ற திட்டத்தின் கீழ் அனைவருக்கும் போதிய மருத்துவ காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றை கண்டறிய ஆரம்ப நிலையிலேயே சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் , தாய், சேய் நலனில் கவனம் செலுத்தப்படும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 2030ஆம் ஆண்டுக்குள் நூறு விழுக்காடு ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு பள்ளியிலும் உடல் நலத்திற்காக விளையாட்டையும் , உளவியல் பாதுகாப்பையும், வாழ்க்கை திறன் கல்வியும் உறுதிப்படுத்துவோம் என தெரிவித்தார்.

2030 தான் இலக்கே!! மாஸாக ஸ்கெட்ச் போட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!! அடுத்தடுத்த அதிரடி!!

பிற்படுத்தப்பட்ட மக்கள் வணிகம் தொடங்க நிறுவன கடன் வசதி அதிகரிக்கப்படும் என கூறினார். ஆதிதிராவிட நலத்துறை பொறுத்தவரை பனிரெண்டாம் வகுப்புக்கு பிறகு இந்த பிரிவை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்ய அரசு துணை நிற்கும் என கூறினார். ஆதி திராவிட மற்றும் பழங்குடிய பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை பெருக்குவதற்கான திட்டங்களும் விரிவுபடுத்தப்படும் என்றார். அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடும்பங்களுக்கு 2030-ம் ஆண்டுக்குள் வீட்டுமனை பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகளை வழங்குவது என்ற அடிப்படையில் கிராமங்கள் மேம்படுத்தப்படும் இதற்கு உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம் என பெயரிடப்படுவதாக தெரிவித்தார். தமிழ்நாடு இந்தியாவின் பொருளாதார வல்லரசாக இருக்கிறது அதற்கு எங்களுடைய இலக்கு 18 லட்சம் கோடி ரூபாய் முதலீடு என கூறினார்.

2030ஆம் ஆண்டுக்குள் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள், தமிழ்நாட்டில் ஏற்றுமதியை 120 மில்லியன் டாலராக உயர்ந்து உலக வணிக வரைபடத்தில் இடம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேக் இன் இந்தியா போல மேக் இன் தமிழ்நாடு என்ற திட்டம் கொண்டு வரப்படும் என்றார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் நவீன தொழில் பூங்கா ,ஒரு சிறப்பு தொழில் தொகுப்பு, பொது வசதி மையம் ஆகியவை அமைக்கப்படும் என அறிவித்தார். மின்னணுவியல் துறையில் மதிப்பு கூட்டல் ஐந்து மடங்காக அதிகரிக்கப்படும் என கூறிய அவர் ஐடி ஏற்றுமதி 2.5 லட்சம் கோடியில் இருந்து 6 லட்சம் கோடி ரூபாயாக இரண்டு மடங்காக உயர்த்தப்படும் எனதெரிவித்தார்.

ஜவுளி தொழிலும் நவீனமயமாக்கப்பட்டு திருப்பூர், கரூரில் 35 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்தார். தமிழ் மொழிக்கு என ஒரு லார்ஜ் லாங்குவேஜ் மாடல் உருவாக்கப்படும் என கூறினார். தமிழ்நாட்டில் மீன் வளர்ப்பு ஊக்குவிக்கப்படும் என்றும் பால் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

ஆண்டுதோறும் எம்எஸ்எம்ஈ நிறுவனங்கள் சார்பாக ஒரு மாபெரும் பன்னாட்டு தொழில் கண்காட்சி நடத்தப்படும் என உறுதி தந்த அவர் 2030-ம் ஆண்டில் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்ந்திருக்கும் என்றார். இவை அனைத்தும் செயல் வடிவம் பெற மாவட்ட வாரியாக தனித்தனி செயல் திட்டங்கள் வகுக்கப்படும் என அறிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+