லட்சங்களில் சம்பாதிக்க அசத்தலான தொழில்.. அதுவும் நீங்க விவசாயினா? உங்களுக்கு கண்டிப்பா உதவும்!

இன்றெல்லாம் வேலை பார்க்கும் பலர் தங்கள் வேலையை விட்டுவிட்டு லாபகரமான தொழில் தொடங்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். நீங்களும் அப்படிப்பட்டவராக இருந்தால் உங்களுக்கு தான் இந்த பதிவு. வீட்டில் அமர்ந்தபடியே நீங்கள் மக்கானா தொழிலை செய்யலாம். சத்தான மக்கானா ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் தனி இடம் பிடித்து வருகிறது. இந்த தொழிலை எப்படி செய்வது? அதற்கு எவ்வளவு முதலீடு தேவை என்ற விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

பீகார் போன்ற மாநிலங்களில் தான் மக்கானா அதிகளவில் வளர்க்கப்படுகிறது. மக்கானாவுக்கு உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைகளில் தேவை அதிகரித்துள்ள காரணத்தினால் அதன் சாகுபடி விவசாயிகளுக்கு லாபகரமான ஒன்றாக மாறியுள்ளது.

லட்சங்களில் சம்பாதிக்க அசத்தலான தொழில்.. அதுவும் நீங்க விவசாயினா? உங்களுக்கு கண்டிப்பா உதவும்!

மக்கானாவில் புரதம், ஆன்டிஆக்சிடென்ட்கள், நார்ச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இதனால் தான் ஆரோக்கியமான காலை உணவாக அனைவராலும் விரும்பப்படுகிறது. குறிப்பாக சைவ உணவுப் பிரியர்களுக்கு மக்கானா பிடித்த உணவாக இருக்கிறது.

மக்கானா எங்கு விளைவிக்கப்படுகிறது? மக்கானா குளங்கள், ஏரிகள், ஈர நிலங்களில் பயிரிடப்படுகிறது. இது வளர்வதற்கு வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலை தேவைப்படும். வெப்பநிலை 20 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்க வேண்டும். மண் களிமண்ணாகவும், நீரைத் தேக்கி வைக்கும் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் செடி நன்றாக வளரும்.

மக்கானா என்றால் என்ன?: மக்கானா என்பது யூரியேல் ஃபெராக்ஸ் என்ற தாவரத்தின் விதையின் மூலம் கிடைக்கிறது. இதை தாமரை, அல்லி அல்லது முள் அல்லி என்றும் கூறுவார்கள். இந்த தாவரம் தேங்கி இருக்கும் நீர் நிலைகளில் தான் அதிகம் வளரும். உதாரணமாக குளங்கள், ஏரிகள், சதுப்பு நிலங்கள் போன்றவற்றை கூறலாம். விதைகள் சேகரிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, வறுக்கப்பட்டு அதன் பிறகு உண்ணக்கூடிய ஒன்றாக மாற்றப்படுகிறது.

மக்கானா விவசாயத்தை தொடங்க என்னென்ன செய்ய வேண்டும்?:

நிலம்: முதலில் தண்ணீர் இருக்கும் இடத்தை பார்த்து தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக குளம், ஈரநிலம் போன்றவற்றை தேர்ந்தெடுக்கலாம். இதன் ஆழம் 1.5 அடி முதல் 2.5 அடி வரையில் இருக்க வேண்டும்.

விதைகள்: ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் விதைகள் நடப்பட வேண்டும். அதோடு செடி வளர்வதற்கு போதிய இடைவெளி இருக்கிறதா? என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

கண்காணிப்பு: அவ்வப்போது களைகள் முளைத்து விட்டால், அவற்றை அகற்ற வேண்டும். நீரின் தரம் எப்படி இருக்கிறது? என்பதையும் கவனிக்க வேண்டும். தேவைப்பட்டால் இயற்கை உரங்கள், பூச்சி கட்டுப்படுத்துவதற்கான உரங்கள் போன்றவற்றை போட்டு பராமரிக்க வேண்டும். விதைகள் நடப்பட்ட பிறகு 6 மாதங்களுக்குள் மக்கானா அறுவடைக்கு தயாராகிவிடும்.

அறுவடை: மக்கானா செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். விதைகளை கையால் எடுத்து, அவற்றை வெயிலில் உலர்த்தி, வறுத்து சந்தையில் விற்பனை செய்ய வேண்டும். நீங்கள் அறுவடை செய்த மக்கானாவின் சுவை மற்றும் தரத்திற்கு ஏற்ப விலை இருக்கும். இதில் சுவை மற்றும் தரத்திற்கு வறுக்கும் முறை முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எவ்வளவு முதலீடு தேவை?: மக்கானா விவசாயத்தில் அதிகமான செலவு இல்லை. உங்கள் பெயரில் குளம் இருந்தால் பிரச்சனை இல்லை. அப்படி இல்லை என்றால் குளத்தை குத்தகைக்கு எடுக்க வேண்டும். விதைகள் வாங்க வேண்டும். அதற்கு சற்று செலவாகலாம். வேலை செய்வதற்கு வேலையாட்களுக்கான சம்பளம் வழங்க வேண்டும். ஒரு ஏக்கரில் 15 முதல் 20 குவிண்டால் வரை மக்கானா விளைச்சல் பெற முடியும்.

பதப்படுத்திய பிறகு சந்தையில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்யலாம். தற்போது ஒரு கிலோ மக்கானா 1,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயத்துடன் சேர்த்து நல்ல தொழில் செய்ய வேண்டும் என்று விரும்புவோர் மக்கானா விவசாயம் குறித்து பரிசீலிக்கலாம். ஆனால் இதற்கு கிடைக்கும் லாபம் எவ்வளவு இருக்கும் என்பதை சரியாக கூறிவிட முடியாது. ஏனெனில் எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் சரி வாடிக்கையாளர், சந்தை போக்கு என பலவற்றையும் பொறுத்து தான் வருமானம் இருக்கும். அதே போல தான் இந்த மக்கானா விவசாயத்திற்கும். ஆனால் சந்தையில் அதிக டிமாண்ட் உள்ள பொருட்களில் மக்கானாகவும் ஒன்று.

தொடர்ந்து சில வணிக யோசனைகள் குறித்து பார்த்து வருகிறோம். அதற்காகத் தான் இந்த பதிவு. உங்களுக்கு ஏதேனும் தொழில் தொடங்க விருப்பம் இருந்தால் ஐடியாக்களை எல்லாம் சேகரித்த பிறகு உங்களுக்கு ஏற்ற தொழிலை, நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பெயரில் தொடங்குங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+