பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணான மலாய்க்கா ராஜா என்பவரை ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஒரு மில்லியனர் திருமணம் செய்து கொண்டுள்ளார். பெரும்பாலான அமீரக பணக்காரர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எண்ணெய், எரிவாயு துறையில் தங்களுடைய வர்த்தகத்தை வைத்துள்ளதால் செல்வத்தில் திளைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மலாய்க்கா ராஜாவை திருமணம் செய்த UAE மில்லியனர் அவருக்கு மாதாமாதம் 1.86 கோடி ரூபாயை செலவு செய்வதற்காக தருகிறார். அந்தப் பணத்தை முழுவதும் தனது ஷாப்பிங்குக்காக மலாய்க்கா ராஜா செலவு செய்கிறார்.

தன்னை ஒரு பணக்கார இல்லத்தரசி என்று பெருமிதத்துடன் அழைத்துக் கொள்ளும் மலாய்க்கா ராஜா அவ்வப்போது தனது ஆடம்பரமான வாழ்க்கையை விடியோக்கள் மூலம் டிக் டாக்கில் பகிர்ந்து கொள்கிறார். அவர் தனது கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
தி சன் இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், மலாய்க்கா ராஜா ரம்ஜானை ஒட்டி தனது கணவரிடம் கூடுதல் அலவன்ஸைத் தருமாறு கேட்டுள்ளது பற்றிய விடியோவை பகிர்ந்துள்ளார்.
இது பற்றி நெட்டிசன்கள் அவரிடம், ஒருவேளை அவரது திருமணம் முறிந்து விட்டாலோ அல்லது மாத அலவன்ஸ் ஏதோ ஒரு காரணத்துக்காக நிறுத்தப்பட்டாலோ என்ன செய்வார் என்று கேட்டு துளைத்து விட்டனர். சிலர் தங்களுக்கும் இதே போன்ற வாழ்க்கை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கமெண்ட் அடித்திருந்தனர்.

இதனிடையே அண்மையில் மலாய்க்கா ராஜா தனது ரசிகர்களுக்காக வெளியிட்ட டிக் டாக் விடியோவில் தனது சொகுசான வாழ்க்கை பற்றி பதிவிட்டிருந்தார். தனது கணவரிடமிருந்து வரும் அபரிமிதமான அலவன்ஸை வைத்து துபாயில் உள்ள மிகப் பெரிய மாலில் பிரபல டிசைனரின் பொருளை வாங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த விடியோவில் ஷாப்பிங் செய்வதுதான் தனது வொர்க்அவுட் என்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்த முறை நான் 10,000 ஸ்டெப்ஸ் நடந்தேன், இந்த முறை நான் 5000 அடிகள் தான் எடுத்து வைத்தேன். பிரேஸ்லெட்கள் மீது பைத்தியமாக இருக்கும் அந்த இல்லத்தரசி ஆக்ஸசரிஸ் மற்றும் ஹேண்டு பேக்குகளை வாங்குவதற்காக ஏகப்பட்ட பணத்தை செலவு செய்துள்ளார்.
இந்த முறை வான் கிளீப் அண்டு ஆர்பெல்சின் (Van Cleef & Arpels) பிரேஸ்லெட்களை ரூ.4.15 லட்சம் ரூபாய்க்கு வாங்கித் தீர்த்துள்ளார். ஒரு மாதம் பொறுத்திருந்து அலவன்ஸை வாங்கிய பின்னர் இந்த பிரேஸ்லெட்டை வாங்கியிருப்பதாகவும் தனது ரசிகர்கள் இந்த நீண்ட காலதாமதத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இறுதியாக தனது ஃபாலோயர்களுக்கு கூறிய பதிவில் தனது அடுத்த மாத அலவன்ஸில் வாங்கப் போகும் ஐட்டங்களைப் பட்டியல் இட்டுள்ளார்.
மலாய்க்கா ராஜா பெயரில் வெளியான இந்த விடியோவுக்கு 30 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளன.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications