புதுப்புது யுக்திகளை பயன்படுத்தி கொள்ளையடித்து வந்த கும்பல் தற்போது டேட்டிங் மோசடியிலும் ஈடுபட தொடங்கியுள்ளனர். பிறரின் உணர்வுகளோடு விளையாடி அதன் மூலம் பணம் பறிக்கும் சம்பவம் ஒன்று தற்போது நடந்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த 67 வயதான பெண்மணி ஒருவர் துரதிஷ்டவசமாக ஆன்லைன் டேட்டிங் மோசடியில் சிக்கி 7 ஆண்டுகளில் சுமார் 4.2 கோடி இழந்துள்ளார்.
மோசடி எப்படி நடந்தது?: பாதிக்கப்பட்ட பெண் மோசடி செய்பவரை பேஸ்புக்கில் சந்தித்துள்ளார். 2017-ஆம் ஆண்டு அக்டோபரில் சிங்கப்பூரில் பணிபுரியும் அமெரிக்க தொழில் அதிபர் என்று கூறிக்கொண்டு ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேசத் தொடங்கியுள்ளார். ஒரு மாத சாட்டிங்கிற்கு பிறகு அவர்களின் ஆன்லைன் உறவு வலுக்கத் தொடங்கியது. மேலும் மலேசியாவிற்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கு கையில் பணம் இல்லை என்றும் மோசடி செய்த நபர் அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். அவர் கூறிய வார்த்தைகளை நம்பி பாதிக்கப்பட்ட பெண் உதவ முன்வந்துள்ளார்.

இதனால் முதன்முதலாக இந்திய மதிப்புக்கு தோராயமாக 95,000 ரூபாயை அந்த நபருக்கு அனுப்பியுள்ளார். அப்போதிலிருந்து தொடர்ந்து மோசடிக்காரர் இந்த பெண்ணிடம் பணம் கேட்கத் தொடங்கியுள்ளார். நிதி உதவியை கேட்பதற்காக பல்வேறு காரணங்களை கூறியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் கிட்டத்தட்ட 4.2 கோடி ரூபாயை வெவ்வேறு காலகட்டங்களில் அனுப்பியுள்ளார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இருவருமே நேரில் சந்தித்ததில்லை.
ஆன்லைன் மூலமாக மட்டுமே பேசியுள்ளனர் .மேலும் வீடியோ கால்களிலும் பேசியதில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து குரல் அழைப்புகளை மட்டுமே பயன்படுத்தி இந்த மோசடி சம்பவம் அரங்கேறியுள்ளது. என்றாவது நேரில் சந்திக்கலாம் என்று அந்தப் பெண் கூறினாலும் அதை தவிர்ப்பதற்காக மோசடி செய்த நபர் சாக்குப் போக்குகளை கூறியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து 7 ஆண்டுகளாக தான் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் மோசடிக்காரரிடம் பாதிக்கப்பட்ட பெண் பேசியுள்ளார். இந்நிலையில் 2024-ஆம் ஆண்டின் நவம்பர் மாதம், தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அந்த பெண் உணர்ந்தார்.
மலேசியாவில் நீண்ட காலமாக நடந்த காதல் மோசடிகளில் ஒன்றாக இந்த மோசடி பார்க்கப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வணிக குற்றப்பிரிவு புலனாய்வுத் துறையின் இயக்குனரான டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப், இந்த மோசடி சுமார் 10 ஆண்டுகளாக நடந்ததாக கூறியுள்ளார்.
ஆன்லைனில் சந்தித்து, பார்க்காமலேயே காதலித்து, திருமணத்தில் முடிந்த எத்தனையோ கதைகள் இருந்தாலும் இன்னமும் இதை பயன்படுத்தி ஏமாற்றும் கும்பலும் இருக்கத்தான் செய்கிறது. பிறரின் உணர்வுகளோடு விளையாடி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளன. டேட்டிங் அப்ளிகேஷன்கள் மூலமாகவும் சிலர் ஏமாற்றப்படுகின்றனர். இதுபோன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்துவோர் உஷராக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்தப் பதிவு எடுத்துக்காட்டுகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications