இந்திய - மாலத்தீவுக்கு மத்தியிலான பிரச்சனை பெரியதாக வெடித்திருக்கும் வேளையில், இந்திய அரசு லத்தீவுகளை உலகின் சுற்றுலா தளமாக மேம்படுத்த சுமார் 4500 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் மாலத்தீவு அரசு சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது.
மாலத்தீவின் நிதிக் கொள்கைகளை விரைவில் மறுபரிசீலனை செய்யாவிட்டால், மாலத்தீவு பெரும் கடன் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

மாலத்தீவு ஆட்சி மாற்றத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி சீனாவிடமிருந்து தொடர்ந்து அதிகப்படியான கடன்களைப் பெற்று வருகிறது. சீனாவின் கடன் வலையில் ஏற்கனவே இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை ஆகியவை மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் தற்போது மாலத்தீவும் மாட்டிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
IMF எனப்படும் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் சீனாவிடமிருந்து தொடர்ந்து கடன் வாங்கி வரும் வேளையில் அந்நாட்டின் நிதிக் கொள்கைகளை விரைவில் மறுபரிசீலனை செய்யாவிட்டால் மாலத்தீவின் வெளிப்புற மற்றும் ஒட்டுமொத்த கடன் அளவுகள் அதிகப்படியான ஆபத்துக்குச் சென்றுவிடும் எனக் கணித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் மாலத்தீவின் வெளிநாட்டுக் கடன் பற்றிய முழுமையான விவரங்களைத் தெரிவிக்கவில்லை, ஆனால் அவசரக் கொள்கை சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
2013 முதல் 2018 வரை மாலத்தீவு அதிபராக இருந்த அப்துல்லா யாமீன், கட்டுமான திட்டங்களுக்காகச் சீனாவிடம் இருந்து அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார். இந்தக் கடனுடன் மாலத்தீவின் மொத்த வெளிநாட்டுக் கடன் இருப்பில் சுமார் 42 சதவீதம் சீனா நாட்டுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. தற்போதைய அதிபரான முய்ஸுவின் வழிகாட்டி தான் முன்னாள் அதிபர் யாமீன்.
மாலத்தீவின் அதிபராக மொஹமட் முய்ஸு அதிபராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், சீனா மாலத்தீவுக்கு அதிக நிதியுதவி வழங்க உறுதியளித்துள்ளது. இந்த நிலையில் IMF மாலத்தீவு தேசத்தைக் கடுமையான கடன் நெருக்கடியில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது.


Click it and Unblock the Notifications