மாலத்தீவு: இந்தியாவின் தேசிய கட்டண கழகமான என்பிசிஐ (NPCI) வங்கி அட்டைகளின் கட்டண வலையமைப்பாக ரூபே( Rupay) சேவைகளை அறிமுகம் செய்தது. இதற்கு முன்பு விசா போன்ற வெளிநாட்டு சேவைகளையே நாம் பயன்படுத்தி வந்தோம். ஆனால் தற்போது நாடு முழுவதும் பரவலாக ரூபே கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இனி மாலத்தீவு நாட்டிலும் ரூபே கார்டுகள் செல்லுபடியாக இருக்கின்றன.
இந்தியாவின் ரூபே சேவையை அறிமுகம் செய்ய இருப்பதாக மாலத்தீவு அரசு அறிவித்துள்ளது . மாலத்தீவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முகமது சயீத் இந்த தகவலை வெளியிட்டார். இந்தியா மற்றும் சீனா ஆகிய தேசங்கள் மாலத்தீவின் உள்ளூர் நாணயத்தை பயன்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன என தெரிவித்தார். அப்போது, இந்தியாவின் ரூபே கார்டுகள் மாலத்தீவிலும் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவித்தார்.

இந்த நடவடிக்கை மாலத்தீவின் ரூஃபியாவை (rufiyaa) மென்மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கிறோம் என சயீத் நம்பிக்கை தெரிவித்தார். இருப்பினும் எந்த தேதியில் இருந்து ரூபே கார்டுகள் மாலத்தீவில் செல்லுபடியாகும் என்ற அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
அமெரிக்க டாலர் மீதான சார்பின்மையை குறைத்து பிராந்திய நிதி ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் இனி மாலத்தீவு, இந்தியா மற்றும் சீனாவுடன் நெருக்கமாக செயல்பட முடிவெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் ரூபே கார்டுகள் மாலத்தீவில் அறிமுகம் செய்யப்படுகின்றன என அவர் கூறியுள்ளார்.
என்பிசிஐ உருவாக்கிய ரூபே தற்போது இந்தியாவின் முதன்மையான அட்டை கட்டண வலையமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஏடிஎம்கள், விற்பனை நிலையங்கள் மற்றும் ஈ காமர்ஸ் தளங்களில் ரூபே கார்டுகள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
தற்போது பூடான், நேபாளம், மொரிசியஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ரூபே கார்டுகள் ஏற்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது மாலத்தீவும் இந்த பட்டியலில் சேர உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே மாலத்தீவு அரசாங்கம் சீனாவுடன் நெருக்கமான உறவில் இருந்து வருகிறது. இதனால் மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் சற்றே விரிசல் ஏற்பட்டது. மாலத்தீவுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்வது கூட குறைந்தது. ஆனால் தற்போது மாலத்தீவு மீண்டும் இந்தியாவுடன் நெருங்கி வருகிறது. இதன் ஒரு முக்கிய மைல்கல்லாக தான் ரூபே அறிமுகமும் பார்க்கப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications