அதிகரிக்கும் மால் கலாச்சாரம்.. சேலம், திருச்சி-க்கு படையெடுக்கும் ரியல் எஸ்டேட் தலைகள்..!

சென்னை: பிரம்மாண்ட கட்டிடம், பெரியவர்களுக்கு தியேட்டர், சிறியவர்களுக்கு கேமிங் தளம், பிரபலமான பிராண்ட் கடைகள், கட்டிடம் முழுவதும் ஏசி, சுத்தமான சுற்றுப்புறம், கார் - பைக் பார்க்கிங் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இது அனைத்தும் இருக்கும் ஒரு இடம் தான் மால்.

பொதுவாக மால் பெரு நகரங்களில் மட்டுமே இருக்கும் ஒரு விஷயம், இதற்குப் பொருளாதாரமும் ஒரு முக்கியமான விஷயமாக இருக்கிறது. இன்று இந்தியா முழுவதும் இருக்கும் 2ஆம் தர நகரங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைய துவங்கியுள்ளதால் புதிது புதிதாக மால்கள் கட்டுமான பணிகளைத் துவங்கியுள்ளது.

அதிகரிக்கும் மால் கலாச்சாரம்.. சேலம், திருச்சி-க்கு படையெடுக்கும் ரியல் எஸ்டேட் தலைகள்..!

உதாரணமாக திருப்பூரில் பல்லடம் பகுதியில் Arnothaya Mall விரைவில் திறக்கப்பட உள்ளது, இதேபோல் தஞ்சாவூரில் லாங்வால் மால் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த நிலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல நாட்டின் பல 2ஆம் தர நகரங்களில் மால் கலாச்சாரம் துவங்கியுள்ளது. இதுபோக பெரிய மற்றும் பிரபலமான மால் கட்டுமான நிறுவனங்களும் 2ஆம் தர நகரங்களை டார்கெட் செய்யத் துவங்கியுள்ளது.

இந்தியாவில் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தின் வாங்கும் திறன் அதிகரித்து வருவதால், முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் தற்போது 2ஆம் தர நகரங்களில் ஷாப்பிங் மால்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் மூலம், உள்நாட்டு மற்றும் உலகளாவிய பிராண்டுகளுக்கு சிறிய நகரங்களில் கடைகளைத் திறந்து புதிய வர்த்தக வாய்ப்புகளைப் பெற உதவுகிறது.

சிறிய நகரங்களில் பிரபல பிராண்டுகள்: ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான சி.பி.ஆர்.இ.யின் தரவுகளின்படி, ஹெச்&எம், மார்க்ஸ் & ஸ்பென்சர், GAP மற்றும் தஸவ போன்ற பிரபல பிராண்டுகள் இந்தூர் Indore), மங்களூர் (Mangalore), பாட்னா (Patna), ராஞ்சி (Ranchi), மைசூர் (Mysore) மற்றும் கோயம்புத்தூர் (Coimbatore) போன்ற நகரங்களில் ரீடைல் கடைகளை திறந்துள்ளன.

மாறிவரும் வர்த்தக முறை: 2ஆம் தர நகரங்களில் உள்ள பிரபல பிராண்டுகளின் ரீடைல் விற்பனை பகுதி 29 மில்லியன் சதுர அடிக்கு மேல் இருப்பதாகவும், அடுத்த சில வருடத்தில் திறக்கப்படும் மால்கள் மூலம் இந்த ரீடைல் விற்பனை கடைகளை மாற்றுவதற்கு உதவும் என தெரிவிக்கின்றன.

நகரமயமாக்கல் மற்றும் ரியல் எஸ்டேட் வளர்ச்சி: இந்தியா எப்போதும் இல்லாத வகையில் வேகமான நகரமயமாக்கலுக்குத் தயாராகி வருவதை யாராலும் மறுக்க முடியாது. 2 மற்றும் 3-ம் நிலை நகரங்கள் ரியல் எஸ்டேட் துறையில் பெரும் மாற்றத்தைச் சந்தித்து வருகிறது.

இதேபோல் சிறு நகரங்களுக்கு ஐடி நிறுவனம் முதல் பிரபலமான உற்பத்தி நிறுவனங்கள் வரையில் தற்போது முதலீடு செய்து வர்த்தகத்தைத் துவங்கி வரும் காரணத்தாலேயே பல ஆடம்பர பிரண்டுகள் தற்போது சிறு நகரங்களுக்குப் படையெடுக்கிறார்கள். இந்த வகையில் தற்போது மால் கட்டுமான நிறுவனங்களும் களத்தில் இறங்குகிறது.

இதன் மூலம் அடுத்த சில வருடத்தில் சென்னை, கோவை தாண்டி குறைந்தது 15 மாவட்டத்தின் தலைநகரில் குறிப்பிடத்தக்க அளவிலான மால்கள் வர வாய்ப்பு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+