IPL 2026 ஏலம்: யாருப்பா இந்த மல்லிகா.. ஊரே இவரை பத்தி தான் பேசுது..!!

IPL 2026 போட்டிக்கான விளையாட்டு வீரர்கள் மெகா ஏலம் இன்று செவ்வாய்கிழமை அபுதாபியின் எத்திஹாட் அரங்கில் நடைபெற உள்ள வேளையில் மொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கண்களும் இதன் மீது தான் உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்குத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஏலத்திற்கு முதலில் 350 வீரர்கள் பட்டியலிடப்பட்ட நிலையில், கடைசியாக 19 பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஏலத்தில் ரூ.2 கோடி என்ற அடிப்படை விலை பட்டியலில் சுமார் 40 வீரர்கள் உள்ளனர். இதில் இந்திய வீரர்கள் பலர் உள்ளனர், இதில் முக்கியமாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரவி பிஷ்னோய் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஏலம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது பலரின் கவனம் இந்த ஏலத்தை நடத்துவோர் மீது திரும்பியுள்ளது. ஆம் யார் இந்த மல்லிகா..?

IPL 2026 ஏலம்: யாருப்பா இந்த மல்லிகா.. ஊரே இவரை பத்தி தான் பேசுது..!!

மல்லிகா சாகர்:
ஐபிஎல் 2026 போடிக்கான ஏலத்தை மல்லிகா சாகர் நடத்த உள்ளார். கடந்த மாதம் WPL 2026 ஏலத்தை வெற்றிகரமாக நடத்திய அவர், மீண்டும் ஆண்களுக்கான IPL ஏலப் பொறுப்பை ஏற்கிறார். 2023இல் துபாயில் நடந்த மினி ஏலத்தில் முதல் முறையாக ஒரு பெண் ஏலத்தை முன்னெடுத்தி வரலாறு படைத்தவர் மல்லிகா சாகர்.

அதன் பிறகு கடந்த ஆண்டு சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்த மெகா ஏலத்தையும் நடத்தினார். 2021இல் புரோ கபடி லீக் ஏலத்தை நடத்தி இந்திய விளையாட்டு ஏலத்தில் முதல் பெண் ஏலதாரர் என்ற பெருமையைப் பெற்ற அவர், தற்போது ஐபிஎல் போட்டியின் ஆஸ்தான ஏலதாரர் ஆகும் அளவுக்கு பிரபலம் அடைந்துள்ளார்.

மல்லிகா சாகரின் பின்னணி:
மும்பையை சேர்ந்த ஒரு வணிக குடும்பத்தில் பிறந்த மல்லிகா சாகர், அமெரிக்காவின் பிரின் மார் கல்லூரியில் கலை வரலாறு படித்தார். 2001இல் நியூயார்க்கின் கிறிஸ்டீஸ் (Christie's) என்ற ஏல நிறுவனத்தில் பணியைத் தொடங்கினார். 26 வயதில் இந்தியாவின் முதல் பெண் ஏலதாரராக அங்கு பணியாற்றினார். இதன் பின்னர் இந்தியாவுக்கு திரும்பி மும்பையின் புண்டோல்ஸ் ஆர்ட் கேலரியுடன் இணைந்து தற்போது IPL ஏலத்தை நடத்துகிறார்.

ஐபிஎல் ஏலம்:
ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒருமுறை மெகா ஏலம் நடைபெறும், மற்ற ஆண்டுகளில் மினி-ஏலம் நடைபெறும். 2025 ஐபிஎல் ஏலம் ஒரு மெகா ஏலமாக இருந்த நிலையில், இன்று துவங்கும் ஏலம் மினி ஏலமாக உள்ளது. இந்த ஐபிஎல் ஏலத்தில் கலந்துக்கொள்ளும் 10 அணிகளும் மொத்தம் 77 இடங்களை நிரப்ப வேண்டும், இதில் குறைந்தபட்சம் 31 வெளிநாட்டு வீரர்கள் இருக்கலாம்.

யாரிடம் அதிக பட்ஜெட் இருக்கு..?:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியிடம் அதிகபட்சமாக ரூ.64.30 கோடி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் (MI) அணியிடம் மிகக் குறைவாக ரூ.2.75 கோடி உள்ளது. IPL 2026 ஏலம் புதிய வீரர்கள், புதிய அணி கலவைகளை உருவாக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+