முன்பெல்லாம் திருமணம் என்றால் கோயில்களில், மண்டபங்களில் நடத்தப்படும். ஆனால் அண்மை காலமாக திருமண நிகழ்வுகள் என்பது பெரிய அளவில் மாறிவிட்டன. டெஸ்டினேஷன் வெட்டிங் என்பதெல்லாம் தற்போது மிக சாதாரணமாக மாறிவிட்டது. இதில் புகழ்பெற்றதாக இருக்கிறது பீச் வெட்டிங். அதாவது கடற்கரையில் மேடை அமைத்து திருமணங்களை நடத்துவது.
தங்களுடைய வாழ்நாளின் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கக்கூடிய திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த வேண்டும் என பலரும் விரும்புகின்றனர். அதில் டாப் சாய்ஸாக இருக்கிறது பீச் வெட்டிங். கடற்கரையில் திருமணம் செய்வது அல்லது திருமண வரவேற்பு நிகழ்வுகளை நடத்துவது சாதாரண விஷயம் கிடையாது.இதற்கு பல லட்சங்களை செலவிட வேண்டும். இதற்காக தனியார் ரிசார்ட்டுகளில் பல லட்சம் கொடுத்து முன்பதிவு செய்ய வேண்டும்.

பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் இதுபோல பீச் வெட்டிங் நடத்தி புகைப்படங்களை வெளியிடும் போது சாமானிய மக்களுக்கு அது ஒரு வித ஏக்கத்தை தருகிறது. ஆனால் இனி அந்த பிரச்சனை கிடையாது. தமிழ்நாடு அரசு நடுத்தர மக்களும் கடற்கரைகளில் தங்களுடைய திருமண நிகழ்ச்சிகளை நடத்தக்கூடிய வகையில் பீச் வெட்டிங் என்ற திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.
தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன்படி பத்தாயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினால் சென்னை ஈசிஆர் கடற்கரையில் பீச் வெட்டிங் முறையில் உங்களுடைய திருமணத்தை நடத்திக் கொள்ளலாம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் கொண்டு வந்திருக்கும் இந்த திட்டத்தின் கீழ் திருமண நிகழ்வுகளை கடற்கரையில் நடத்த விரும்பும் நபர்கள் பத்தாயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இதனை அடுத்து உங்களுக்கு என குறிப்பிட்ட கடற்கரை பகுதி ஒதுக்கப்படும். இங்கே நாம் மேடை, அலங்காரம் உள்ளிட்டவற்றை நம் விருப்பத்திற்கேற்ப செய்து கொள்ளலாம். இந்த பகுதியை 22 மணி நேரம் பயன்படுத்துவதற்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் சைவ உணவு என்றால் ஒரு நபருக்கு 700 ரூபாயும், அசைவ உணவு பரிமாறப்படுவது என்றால் 1100 ரூபாயும் என கட்டணம் செலுத்த வேண்டும்.
திருமணத்திற்கான மேடை ,அலங்காரம், விளக்குகள் போன்ற ஏற்பாடுகளை திருமண வீட்டினரே செய்து கொள்ள வேண்டும். தமிழக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தற்போது கடற்கரை திருமணம் என்ற முறையை பலரும் எதிர்பார்ப்பதால் இந்த திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். தனியார் ரிசார்ட்டுகளை விட பல மடங்கு குறைந்த கட்டணத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதால் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்டமாக மகாபலிபுரம் தமிழ்நாடு ஹோட்டல்ஸ் ரிசார்டில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. விரைவில் இதனை பல இடங்களுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டத்தில் இணைந்து பீச் வெட்டிங் முறையில் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் www.ttdconline.com இணையதளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.குறைந்த செலவில் நிறைவாக திருமணத்தை நடத்தி முடிக்க இது வழிவகை செய்கிறது, மண்டபங்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைப்பதற்கு பதிலாக இந்த மாற்று வழியை பரிசீலனை செய்து பார்க்கலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications