இந்திய தொழிலதிபர்களில் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை வாழும் நீதா அம்பானியின் ஒவ்வொரு ஆடை, ஹேண்ட்பேக், நகைகள், கார் என ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகிறது. ஆனால் இவருடைய தங்கை மம்தா பற்றி எத்தனை பேருக்கு தெரியும்..?
நீதா அம்பானி இன்று வர்த்தக உலகில் முக்கிய நபராக உயர்ந்து நிற்கிறார், பல வருடங்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக குழுவில் சமீபத்தில் விலகினாலும், ரிலையன்ஸ் - டிஸ்னி இந்தியா கூட்டணி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இதன் மூலம் மீண்டும் வர்த்தக துறையில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார்.

திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூலின் நிறுவனரான நீதா அம்பானி இந்தியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக உள்ளார். இருப்பினும், திரைக்குப் பின்னால், முகேஷ் அம்பானியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு அவரது வாழ்க்கையைப் பற்றி முழுமையாக தெரியாது. இதேபோல் நீதா அம்பானியின் குடும்பம் குறித்தும் அதிகம் தெரியாது.
மம்தா தலால், நீதா அம்பானியின் சகோதரி. மம்தா தலால் தனது சகோதரியை போல் வர்த்தக உலகில் பரபலம் இல்லை.
மம்தா தலால் யார்?: மம்தா தலால், ஒரு மிடில் கிளாஸ் குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர், ரவீந்திரபாய் தலால் மற்றும் பூர்ணிமா தலால் ஆகியோருக்குப் பிறந்த தலால் குடும்பத்தில் இளைய மகள்.

மம்தா தலால்-க்கும், நீதா அம்பானிக்கும் இடையே நான்கு வருட வயது இடைவெளி உள்ளது. மம்தா ஒரு கல்வியாளராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது, திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக உள்ளார். மேலும் அப்பள்ளியின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.
பணக்காரர்கள் வீட்டு பிள்ளைகள், பிரபலங்களின் பிள்ளைகள் என செலிப்ரிட்டிகளுக்காகவே இந்த திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளி இயங்கி வருகிறது.
ஷாருக்கானின் மகள் சுஹானா கானுக்கும், சச்சின் டெண்டுல்கரின் குழந்தைகளுக்கும் மம்தா தலால் பாடம் எடுத்துள்ளார். குஷி கபூர், ஜான்வி கபூர், சாரா அலி கான், இப்ராகிம் அலி கான், சுஹானா கான் போன்ற பல பிரபலங்களின் குழந்தைகள் திருபாய் அம்பானி பள்ளிகளில் படித்திருக்கிறார்கள்.
Story Written by: I.Jayachandran
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications