ஒருவரின் நிதியியல் முடிவுகள் எப்போதும் சரியானதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்க வேண்டும், இல்லையெனில் பெரிய சிக்கலில் மாடிக்கொள்வார்கள். இதேபோல் கடன் வாங்குவது தவறில்லை வாங்கிய கடனை வைத்து கூடுதல் வருமானம் பெரும் வகையிலோ, அல்லது நீண்ட கால அடிப்படையில் சொத்துக்களை சேர்ப்பதில் முதலீடு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
இப்படி நாம் பொறுப்பாக இருந்தாலும் ஈகாமர்ஸ் தளத்தில் அளிக்கப்படும் ஆஃபர்களும், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் ஒரு நாளுக்கு குறைந்தது 2 முறையாவது போனில் அழைத்து சார் பர்சனல் லோன் வேணுமா என கேட்டும் சும்மா இருப்பவர்களையும் டெம்ப்ட் ஏத்தி செலவு செய்ய வைப்பார்கள். குறிப்பாக அப்போது டிவி, மொபைல், லேப்டாப், ஹோம் தியேட்டர், ஸ்பீக்கர் என அனைத்திற்கும் ஈஎம்ஐ சேவை அளிக்கப்படுகிறது.

இன்னும் சில நாளில் மளிகை கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு கூட கடன் சேவை அளிக்கப்படலாம், இதை தான் ரிஸையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் வாயிலாக முயற்சிக்கிறது. நாம விஷயத்திற்கு போவோம் வாங்க.. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து லோன்-க்காக வரும் அழைப்புகளில் கடுப்பான நபர் செய்த வேலை தான் தற்போது டிரெண்டாகியுள்ளது.
தினமும் அவசியம் இல்லாமல் வரும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் கஸ்டமர் கேர் காலில் கடுப்பான ஒருவர், நிஷா என பெயர் கொண்ட வங்கி ஊழியர் இந்த நபரிடம் உங்களுக்கு ஏதேனும் லோன் வேணுமா என கேட்க. ஆமா ரயில் வாங்க 300 கோடி ரூபாய் கடன் வேணும் என கேட்டுள்ளார், இதில் ஷாக்கான நிஷா...
ஒரு சிறிய கேப் விட்டு, இதற்கு முன்பு நீங்கள் ஏதேனும் கடன் வாங்கி இருக்கிறீர்களா என கேட்ட போது, அதற்கு அந்த நபர் ஹீரோ சைக்கிள் வாங்க 1600 ரூபாய் கடன் பெற்றுள்ளேன் என கூற, கடுப்பாகி வங்கி ஊழியரான நிஷா கால்-ஐ கட் செய்துள்ளார். இந்த பிராங்க் ஆடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது, இந்த பதிவுக்கு சுமார் 1 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications