"நான் யார்? நீ ஒரு கொலைக்காரன்"!. ChatGPT-ன் பதிலால் அதிர்ச்சியடைந்த நபர்!. OpenAI மீது வழக்கு!

தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஒரு புயலைப் போல வீசிக் கொண்டிருக்கிறது. சாட்ஜிபிடி போன்ற பிரபல AI கருவிகள் நம் வாழ்வில் ஆழமாக ஊடுருவி, பல பணிகளை எளிதாக்கி வருகின்றன. இதுவரை எட்ட முடியாத சாத்தியங்களை தொட்டுள்ளது. மனிதர்களால் செய்யக்கூடியவை என்று கூறப்பட்ட வேலைகளை தற்போது செயற்கை நுண்ணறிவு கருவியான சாட்ஜிபிடி (ChatGPT) செய்கிறது.

சாட்ஜிபிடி, அமெரிக்காவைச் சேர்ந்த ஓபன் ஏஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இது, விரைவாகப் பயனர்களின் விருப்பமான AI கருவியாக மாறியது. சாட்ஜிபிடி, கதை எழுதுதல், நகைச்சுவை கூறுதல் போன்ற படைப்பு சார்ந்த பணிகளில் சிறந்து விளங்குகிறது. இருப்பினும், சில நேரங்களில் தவறான தகவல்களை வழங்கி வருவதாகவும் பலரும் புகார் அளித்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது சாட்ஜிபிடி மீண்டும் பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது, நார்வே நாட்டை சேர்ந்த ஒருவர், தவறான தகவலை அளித்ததாக, சாட்ஜிபிடிக்கு எதிராக வழக்குப் தொடர்ந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன், நார்வே நாட்டை சேர்ந்த Arbe Yalmar Holmen என்பவர், சாட்ஜிபிடி-யிடம் , நான் யார்? என்று கேட்டுள்ளார். அதற்கு "நீ உன் மகன்கள் இருவரை கொன்ற கொலைகாரன்" என்று பதிலளித்துள்ளது. அதாவது, கடந்த 24ம் தேதி வெளியான செய்தியின்படி, நார்வே நாட்டில் வசிக்கும் Arbe Yalmar Holmen என்பவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ChatGPT-யை பயன்படுத்தி, "Who is Arbe Yalmar Holmen?" (Arbe Yalmar Holmen யார்?) என்று கேட்டுள்ளார்.

இதற்கு ChatGPT இரண்டு சிறு குழந்தைகளின் தந்தை (வயது 7 & 10), அவர்கள் 2020 டிசம்பரில் நார்வேயின் Troheim பகுதியில் உள்ள ஒரு குளத்தில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர்." மேலும் தனது குழந்தைகளை கொலை செய்த குற்றத்திற்காக 21 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்" என்று பொய்யான தகவல் வழங்கியுள்ளது. அவரது பெயர் மற்றும் அவரது குழந்தைகளின் எண்ணிக்கை போன்ற சில விவரங்கள் துல்லியமாக இருந்தாலும், கொலைக் கூற்று முற்றிலும் தவறானது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, தன்னை பற்றி தவறான தகவலை சாட்ஜிபிடி வழங்கியதற்காக நார்வே தரவு பாதுகாப்பு ஆணையத்திடம் ஹோல்மென் புகார் அளித்துள்ளார். அதில் சாட்ஜிபிடியின் தவறான தகவல்கள் தனது வாழ்க்கையை அழிக்கக்கூடும் என்றும் நீதி கோரி, டிஜிட்டல் உரிமைகளுக்காக வாதிடும் ஒரு குழுவான Noyb-ஐ அணுகி, இந்த அவதூறுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், ChatGPT-ஐ உருவாக்கியவர்களிடமிருந்து இழப்பீடு கோரவும் கோரினார்.

Take a Poll

இதற்கிடையில், ChatGPT-ஐ உருவாக்கிய நிறுவனமான OpenAI, சாட்போட்டின் பதில்களின் துல்லியத்தை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றி வருவதாகக் கூறி பதிலளித்தது. மேலும், "சாட்ஜிபிடியின் பழைய பதிப்பில் இந்த பிழை ஏற்பட்டது. எங்கள் மாடல்களை தொடர்ந்து மேம்படுத்தி, தவறுகளை சரிசெய்ய முயற்சி செய்கிறோம்" என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

FAQs
Chatgpt உருவாக்கியவர் யார்?

ChatGPT-யை OpenAI என்ற நிறுவனம் உருவாக்கியது. OpenAI என்பது Deep Learning மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் ஆகும். OpenAI-யை Elon Musk, Sam Altman, Greg Brockman, Ilya Sutskever, John Schulman மற்றும் பலர் இணைந்து 2015 ஆம் ஆண்டு நிறுவினர். எனினும், இப்போது Elon Musk OpenAI-யில் இல்லை. தற்போதைய CEO Sam Altman ஆவார்.

ChatGPT-உடனான உரையாடல் பாதுகாப்பானதா?

ஆமாம், ChatGPT-உடன் உரையாடல் பொதுவாக பாதுகாப்பானது, ஆனால் தனிப்பட்ட தகவல்களை பகிருவது உள்ளிட்ட சில முக்கிய அம்சங்களில் கவனம் கொள்வது நல்லது

செயற்கை நுண்ணறிவு எவ்வாறு சிறந்தது?

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) பல துறைகளில் மிகவும் பயனுள்ளதாகவும், திறமையாகவும் வளர்ந்து வருகிறது. இது மனிதர்களுக்கு வேலை செய்யும் முறைமைகளை எளிதாக்கி, வேகமாக முடிக்க உதவுகிறது.

ChatGPT-ஐ வணிக நோக்கங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகப் பயன்படுத்தலாமா?.

இது தானியங்கும் (automation), திறன் மேம்பாடு, வாடிக்கையாளர் சேவை, சந்தைப்படுத்தல் (marketing) போன்ற பல்வேறு தொழில்துறைகளில் உதவக்கூடியது.

GoodReturns Finance

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+