கோட்டாக் மஹிந்திரா வங்கியில் சேர்ந்து 9 மாதத்தில் சிஇஓ.. யார் இந்த அனுப் குமார்..?

இந்தியாவின் முன்னணி வங்கிகளின் தலைமை மாற்றம் அடுத்தடுத்த நடக்க இருக்கும் வேளையில் கோட்டாக் மஹிந்திரா வங்கி தனது புதிய சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனரை அறிவித்துள்ளது.

தற்போது சிஇஓ-வாக இருக்கும் அசோக் வஸ்வானி-யின் பதவிக் காலம் டிசம்பர் 31 உடன் முடியும் வேளையில், தனது தனிப்பட்ட காரணத்தால் மீண்டும் பதவி நீட்டிப்பு வேண்டாம் என அறிவித்த காரணத்தால் புதிய சிஇஓ தேடும் நிலை உருவானது. இந்த நிலையில் பல மாதங்களாக கோட்டாக் மஹிந்திரா வங்கி நிர்வாகம் உள்நிர்வாக அதிகாரிகள் முதல் வெளியில் இருந்தும் பலரை ஆய்வு செய்ததில் அனுப் குமார் சாஹாவை தேர்வு செய்தது.

கோட்டாக் மஹிந்திரா வங்கியில் சேர்ந்து 9 மாதத்தில் சிஇஓ.. யார் இந்த அனுப் குமார்..?

பொதுவாக வங்கிகளின் தலைவர்களை நியமிக்கும் போது வங்கி நிர்வாகம் நேரடியாக நியமித்துவிட முடியாது, தனது தேர்வை ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்ற பின்பே உறுதியாகும். அப்படி அனுப் குமார் சாஹாவின் நியமனம் குறித்துச் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆர்பிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் அனுப் குமார் சாஹா ஜனவரி 1, 2027 முதல் 3 ஆண்டுக் காலம் கோட்டாக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அனுப் குமார் சாஹா புதிய நபர் இல்லை, இவர் இவ்வங்கியின் எக்ஸ்கியூட்டிவ் டைரெக்டராக பணியாற்றி வருகிறார், வங்கித்துறை, நிதியியல் துறையில் சுமார் 32 வருடம் அனுபவம் கொண்டுள்ளார். இதில் முக்கியமக NBFC மற்றும் வங்கி பிரிவில் மட்டும் சுமார் 25 வருடம் பணியாற்றி வருகிறார்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் தான் அனுப் குமார் சாஹா கோட்டாக் மஹிந்திராவில் இணைந்து தற்போது புதிய சிஇஓ-வாக உயர்ந்துள்ளார். மார்ச் 2026 முதல் கோட்டாக் மஹிந்திரா வங்கியின் ரீடைல் வங்கி, அரசு வர்த்தகம், டேட்டா அனலிட்டிக்ஸ், மார்க்கெட்டிங் பிரிவு பணிகளை மொத்தமாக கவனித்து வந்தார்.

அனுப் குமார் சாஹா கோட்டாகில் சேர்வதற்கு முன்பு 2017 - ஜனவரி 2026 வரையில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஆரம்பத்தில் கன்ஸ்யூமர் பைனான்ஸ் பிரிவின் தலைவராகச் சேர்ந்த இவர் ஏப்ரல் 2025ல் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்தார்.

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்கு முன்பு ஐசிஐசிஐ வங்கியில் சுமார் 14 வருடம் பணியாற்றி அனுப் குமார் சாஹா ஐஐடி கார்க்பூரில் பி.டெக், ஐஐஎம் லக்னோ-வில் எம்பிஏ பட்டம் பெற்றார்.

கோட்டாக் மஹிந்திரா வங்கியைத் தொடர்ந்து அடுத்தாக ஹெச்டிஎப்சி வங்கி தனது புதிய சிஇஓ-வை அறிவிக்க உள்ளது. தற்போது சிஇஓ-வாக இருக்கும் சசிதர் ஜகதீஷனின் பதவி காலம் அக்டோபர் 26ஆம் தேதி உடன் முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+