கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு தங்கள் தொழிலுக்காக நகரத்திற்கு இடம் பெயரும் சூழ்நிலை உருவாகிறது. அந்தவகையில், சமீபகாலமாக பெங்களூரு உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் ரியல் எஸ்டேட் விலைகள் விண்ணை எட்டி வருகின்றன. ஏனெனில் பெங்களூரு முக்கிய தொழில் மையமாக உள்ளது. இது நிறைய Startups, அற்புதமான காலநிலை, மற்றும் கடுமையான போக்குவரத்துக்கு பிரபலமான நகரமாகவும் உள்ளது.

குறிப்பாக ஐடி பார்க்குகளுக்கு அருகில் உள்ள இடங்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது. பெரும்பாலான வீடுகள் புரோக்கர்கள் மூலமாகவே கிடைக்கும். இருப்பினும், பெங்களூருவில் ஒரு நல்ல அடுக்குமாடி குடியிருப்பை வாங்குவது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால், ஒருவர் இதை சாதித்திருக்கிறார், புரோக்கர் இல்லாமல் பெங்களூரில் அடுக்குமாடி வீடு ஒன்றை நபர் ஒருவர் வாடகைக்கு எடுத்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ஒரு அரிதான சம்பவம் என்பதால், நெட்டிசன்களிடையே பேசுப்பொருளாக மாறியுள்ளது.
சைதன்யா என்ற X பயனர், தன்னுடைய புதிய புரோக்கர் கட்டணமில்லாத வீட்டின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கூடுதல் செலவில்லாமல் வீடு பெற்றுவிட்டேன் என்றும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள் ஆச்சரியத்துடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். பலரும் "இது எப்படி சாத்தியம்?" என சைதன்யாவிடம் கேள்விகள் எழுப்பினார்கள். அதற்கு ஒரு குறிப்பிட்ட இணையதளம் மூலம் தான் இந்த வீட்டைக் கண்டுபிடித்தேன் என்றும் அது "மிகவும் நியாயமான" விலையில் ஒரு ஒப்பந்தத்தைப் பெற உதவியது என்றும் சைதன்யா பகிர்ந்துள்ளார்.
இதற்கு பயனர்கள், "இது மிகவும் அழகாக இருக்கிறது,", "நீங்கள் எப்படி நல்ல அடுக்குமாடி குடியிருப்புகளைக் கண்டுபிடித்தீர்கள்?. எனது புரோக்கர்கள் வாடகை ரூ.60,000-ன்னு சொல்றாங்க என்று வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார். மற்றொரு பயனர் வாழ்த்துகள் கூறி, இந்த பதிவு ஒரு Fancy 'I got this figured' Vibe கொடுக்குது!" என்று கூறி, தனது நிலைமையை வேதனையாக பகிர்ந்துள்ளார். மேலும் சிலர், இந்த மாதிரியான அபார்ட்மெண்ட்கள் பெரும்பாலும் புரோக்கர் நெட்வொர்க்கு வெளியே கிடைக்கும் என்றும், "வீட்டு உரிமையாளர் ஒரு power socket-ஐ வழங்கியிருப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. அது WiFi Router / Repeater-க்காக இருக்கலாம்." அந்த மாதிரியான சிறப்பான விவரங்களில் பலர் கவனம் செலுத்த மாட்டார்கள் என்பது உள்ளிட்ட கலவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications