ஹரியானா: அமெரிக்கா செல்வதற்காக 35 லட்சம் ரூபாயை செலவு செய்த இந்திய இளைஞர் அமெரிக்கா சென்று 20 நாட்களிலேயே நாடு கடத்தப்பட்ட சோகம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் எந்தவித ஆவணங்களும் இன்றி முறைகேடாக நுழைந்து தங்கி இருந்த இந்தியர்கள் கைது செய்யப்பட்டு மீண்டும் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மூன்று விமானங்கள் இதுவரை இந்தியர்களை அழைத்துக் கொண்டு தாயகம் வந்துள்ளது . இவர்கள் அனைவருமே அமெரிக்காவிற்கு முறைப்படி விசா பெற்று சென்றவர்கள் கிடையாது. போலியான முகவர்களிடம் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை செலுத்தி பல்வேறு நாடுகள் வழியாக அமெரிக்க எல்லைக்குள் நுழைந்தவர்கள். இவர்களைத்தான் அமெரிக்க அரசு பிடித்து வைத்திருந்து தற்போது இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.

அப்படி ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு நபர் 35 லட்சம் செலவு செய்து 220 நாட்கள் போராடி அமெரிக்காவிற்குள் நுழைந்தார் .ஆனால் 20 நாட்களில் அவர் மீண்டும் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். போலி முகவர்களிடம் சிக்கிக் கொண்ட இந்த நபர் 10 நாடுகளைக் கடந்து காடுகளில் எல்லாம் பயணம் செய்து சுவர் ஏறி குதித்து அமெரிக்காவிற்குள் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ரவிக்கு எப்படியாவது அமெரிக்காவிற்கு சென்று வேலை வாங்கி செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. எனவே ரவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் இதற்காக முயற்சி செய்துள்ளனர். அப்போது தீபக் மாலிக், ரஜித் மோர் மற்றும் மனிஷ் பண்டிட் ஆகிய மூன்று முகவர்கள் இவர்களை தொடர்பு கொண்டுள்ளனர். இந்த மூவரும் 29 லட்சம் ரூபாயை வாங்கிவிட்டு ரவியை இந்தியாவில் இருந்து அனுப்பினர்.
இவ்வாறு கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து புறப்பட்ட ரவி 220 நாட்கள் பயணம் செய்து அமெரிக்காவில் நுழைந்திருக்கிறார். முதலில் இங்கிருந்து துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் பல மாதங்கள் அங்கேயே தங்கியிருந்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து ஆபத்தான வழித்தடங்களில் அடுத்தடுத்த நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார். இவ்வாறு பத்து நாடுகளுக்கு அவர் பயணம் செய்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இவர் பனாமாவுக்கு சென்று அடர்ந்த வனப் பகுதி வழியாக உணவு, குடிநீர் கூட இல்லாமல் நீண்ட நாட்கள் படாத பாடுபட்டதாக கூறுகிறார். பனாமாவில் திடீரென சிலர் இவரை பிடித்து வைத்துக்கொண்டு குடும்பத்தினரை தொடர்புகொண்டு ஆறு லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே விடுவிப்போம் என கூறினார்கள்.
உடனடியாக ரவியின் குடும்பத்தினர் தங்களுக்கு சொந்தமாக இருந்த நிலத்தை விற்பனை செய்து ஆறு லட்சம் ரூபாயை கொடுத்துள்ளனர். இதனை அடுத்து பனாமாவில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் எல்லைக்கு சென்று சுவர் ஏறி குதித்து அமெரிக்காவினுள் நுழைந்தாராம்.
220 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு அமெரிக்காவிற்கு சென்ற அவர் இருபதே நாட்களில் அமெரிக்க காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு எந்தவித ஆவணமும் இல்லாததால் மீண்டும் இந்தியாவிற்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தற்போது ரவியின் குடும்பம் அனைத்தையும் இழந்து அமெரிக்க கனவையும் இழந்து அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறது.
அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும் அங்கே செட்டிலாக வேண்டும் என எண்ணும் நபர்கள் முறைப்படி அங்கீகாரம் பெற்ற முகவர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் முறையான விசா பெற்று மட்டுமே அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும் என்றும் காவல்துறையினர் மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications