கிரெடிட் கார்டு என்றாலே பலருக்கும் ஒருவித பயம் இருக்கும். கடன் சுமை, அதிக வட்டி, நிதி சிக்கல்கள் போன்ற பிரச்சனைகள் வரும். ஆனால், இந்த பொதுவான கருத்தை முற்றிலும் மாற்றியமைத்துள்ளார் ஹைதராபாத்தை சேர்ந்த மனீஷ் தமேஜா. கிரெடிட் கார்டுகள் கடன் வாங்கும் கருவி அல்ல என்றும் அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால் அதிக சலுகைகளையும் தரும் ஒரு நிதி சாதனம் என்பதை அவர் உலகிற்கே நிரூபித்து காட்டியுள்ளார். தற்போது அவர் வைத்திருக்கும் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கைக்காகவே கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
மனீஷ் தமேஜா தற்போது உலகில் அதிக எண்ணிக்கையிலான செல்லுபடியாகும் கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கும் நபராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அவரிடம் மொத்தம் 1,638 கிரெடிட் கார்டுகள் உள்ளன. இந்த எண்ணிக்கை வெறும் காட்சிப் பொருளுக்காகவோ அல்லது ஆடம்பர செலவுகளுக்காகவோ அல்ல. ஒவ்வொரு கார்டையும் அவர் மிகுந்த நுணுக்கத்துடனும், நிதி அறிவோடும் பயன்படுத்தி வருகிறார்.

சாதாரண மக்கள் ஒன்று அல்லது இரண்டு கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பதே பெரிய விஷயமாக பார்க்கும்போது, மனீஷ் இத்தனை கார்டுகளை வைத்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், இவரது நோக்கமே கடன் வாங்காமல், சலுகைகளை மட்டுமே பயன்படுத்துவதான்.
மனீஷ் தமேஜா, தனது 1,638 கிரெடிட் கார்டுகள் மூலம் ஒருபோதும் கடனில் சிக்கியதில்லை. அதாவது, எந்த கார்டில் கேஷ்பேக் கிடைக்கும், எந்த கார்டில் சிறந்த பயண சலுகைகள் உள்ளன? அல்லது எந்த கார்டு மூலம் ஹோட்டல்களில் அதிக ரிவார்டுகளை பெறலாம் என்று கணக்கிட்டு மட்டுமே அவர் பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்.
உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட வங்கியின் கார்டில் எரிபொருளுக்கு அதிக தள்ளுபடி கிடைத்தால், அதற்காக மட்டுமே அந்த கார்டை பயன்படுத்துவார். ஒரு கார்டில் விமானப் பயணங்களுக்கான லாயல்டி பாயிண்டுகள் அதிகம் கிடைத்தால், அந்த கார்டை விமானப் பயணங்களுக்குப் பயன்படுத்துவார். இவ்வாறு ஒவ்வொரு கார்டின் பலனையும் துல்லியமாக பயன்படுத்தியதால், மனீஷ் இன்று எந்தவிதமான கடன் சுமையும் இல்லாமல், மன அழுத்தமும் இல்லாமல் ஸ்மார்ட்டான நிதி நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து மனீஷ் கூறுகையில், என் வாழ்க்கை கிரெடிட் கார்டுகள் இல்லாமல் முழுமையடையாது என்று நினைக்கிறேன். எனக்கு கிரெடிட் கார்டுகள் என்றால் மிகவும் பிடிக்கும். கடந்த 2016ஆம் ஆண்டில் மத்திய அரசு திடீரென ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது.
அந்த நேரத்தில் நாடு முழுவதும் ஒரு பெரிய பதட்டம் நிலவியது. புதிய ரூபாய் நோட்டுகளுக்காக வங்கிகள் முன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால், அப்போது கிரெடிட் கார்டுகள் என் வாழ்க்கையில் ஒரு முக்கியப் பங்கு வகித்தன. நான் பணத்திற்காக வங்கிக்கு அலைய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. கிரெடிட் கார்டுகள் மூலம் நான் டிஜிட்டல் பரிமாற்றம் செய்து மகிழ்ந்தேன்" என்று கூறியுள்ளார்.
கிரெடிட் கார்டு என்பது நீங்கள் வைத்திருக்கும் எண்ணிக்கையில் இல்லை. அதை எவ்வளவு புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது. பெரும்பாலானோர் கிரெடிட் கார்டை ஒரு ஆபத்தாக கருதும் வேளையில், மனீஷ் அதை ஒரு சாதனமாகவும், செல்வத்தை ஈட்டும் வழியாகவும் மாற்றியுள்ளார். இவரது இந்த கின்னஸ் சாதனை, கிரெடிட் கார்டு பயன்பாட்டை பற்றி மக்களுக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தை அளித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications