சீனாவில் விசித்திரமான ஒரு போட்டியில் பங்கேற்று கடும் ஏமாற்றத்தையும், கடன் சுமையையும் சந்தித்து, தற்போது ஒரு இளைஞர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சிக்கு இலட்சக்கணக்கான ரூபாய் பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதை கண்டிப்பாக வென்று விட வேண்டும் என்ற நம்பிக்கையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, அதற்கான பதிவு கட்டணத்தையும் செலுத்தி 3 முறை தோல்வி அடைந்த பிறகு தற்போது போட்டியை அறிவித்த நிறுவனத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட இளைஞர் புகார் அளித்திருக்கிறார்.
சீனாவைச் சேர்ந்த ஜாங் என்ற குடும்பப் பெயரைக் கொண்ட இளைஞர் "செல்ஃப் டிசிப்ளின் சேலஞ்ச்" என்ற நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக பதிவு கட்டணமாக ரூ.2.3 லட்ச ரூபாயை செலவழித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற 3 முறை பதிவு செய்து தோல்வியடைந்த பிறகு நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த நபர் ரூ. 11 கோடி ரூபாய் முதல் பரிசை வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் 3 முறையும் கடன் வாங்கி பதிவு செய்துள்ளார்.

ஆனால் வெறும் ஏமாற்றம் மட்டுமே அந்த இளைஞருக்கு மிஞ்சியுள்ளது. சீனாவில் உள்ள Xian "Mulin Culture Communication" என்ற நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், பங்கேற்பாளர் கண்காணிப்பு கேமராக்களுடன் ஒரு அறையில் தங்கியிருக்க வேண்டும். அப்போது கடுமையான சில விதிகளையும் கடைபிடிக்க வேண்டும். பங்கேற்பாளர்கள் ஜெயித்து விட்டால் அவர்களுக்கு பரிசுத் தொகையாக 1.1 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதற்காக அந்த இளைஞர் செப்டம்பர் மாதம் பதிவு செய்தார்.
இந்த போட்டியில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் சில கடுமையான விதிகளைப் பின்பற்ற வேண்டும். தினமும் காலை 6 மணிக்கு முன் ஒருமுறை மட்டுமே விளக்கை ஆன் மற்றும் ஆப் செய்ய வேண்டும். கேமராக்களை நகர்த்தாமல் மற்றும் மறைக்காமல் இருக்க வேண்டும். அவர்களின் முகம் எல்லா நேரங்களிலும் கேமராவில் தெரிவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் ஒரு வேலை கேமராவில் பங்கேற்பாளர்களின் முகம் மறைந்தாலும் 3 வினாடிகளுக்குள் மீண்டும் காண்பிக்கப்பட வேண்டும். அதோடு கூடுதல் விதிகளாக அறையில் இருக்கும் பங்கேற்பாளர்கள் பீர் மற்றும் இதர டிரிங்ஸ்களை குடிக்கக்கூடாது, அதோடு அவற்றை மறைத்தும் வைக்க கூடாது.
இந்தப் போட்டியைப் பொறுத்தவரையில் வெவ்வேறு நிலையிலும் வெவ்வேறு பரிசு தொகைகள் வழங்கப்டுகிறது. உதாரணமாக 3 நாட்கள் வெற்றிகரமாக தங்கியிருந்தால் 6,800 யுவான், அதாவது இந்திய மதிப்புக்கு தோராயமாக 79,000 ரூபாய். அதேபோல 6 நாட்கள் தங்கி இருந்தால் 28,000 யுவான். இந்திய மதிப்புக்கு 3,26,000 ரூபாய். இதுபோல வெகுமதிகள் தங்கி இருக்கும் நாட்களை பொறுத்து ரூ.1.1 கோடி ரூபாய் வரை இருக்கும்.
ஜாங் முதல் முறை பதிவு செய்த போது 24 மணி நேரத்திற்குள் முகத்தை மூடியதாக கூறி வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு மீண்டும் மறுநாள் பதிவுக் கட்டணம் செலுத்தி நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது தன்னுடைய படுக்கையை சரி செய்தபோது அவருடைய முதுகே தற்செயலாக கேமராவை மறைத்ததாக கூறி வெளியேற்றப்பட்டார்.
அதன் பிறகு 3-வது முறை ஜாங் தன் நண்பரிடம் கடன் வாங்கி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த முறை 10 நாட்கள் அறையில் தங்கியிருந்தார். அப்போது பீர்பாட்டில்களை மூடி வைத்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஜாங் உறவினார்கள் இவர் மோசடிக்கு பலியாகி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் ஜாங் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் விசாரணை தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
இது போன்ற போட்டிகள் சீனாவில் பிரபலம் அடைந்து வருகின்றன. கடந்த மாதம் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள நீதிமன்றம் இதே போன்ற சவாலில் பங்கு பெற்று பதிவுக் கட்டணமாக 6000 யுவான் செலுத்திய பங்கேற்பாளருக்கு 5,400 யுவான் திருப்பி தருமாறு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. தூங்கும் போது முகத்தை மறைக்க தலையணையை பயன்படுத்தியதாக அந்த நபர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications