உருளைக்கிழங்கு வந்த இடத்தில் ஐபோன்14.. அடித்தது ஜாக்பாட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்கள் சமீபத்தில் மிகப்பெரிய ஷாப்பித் திருவிழா நடத்தியது.

 

இந்த அதிரடி தள்ளுபடி விற்பனையில் இந்திய மக்கள் பெரும்பாலானவர்கள் அதிகளவில் பொருட்களை வாங்கிக் குவித்தாலும் பலருக்கு பெரிய ஏமாற்றம் நடந்தது. குறிப்பாக டிரோன் ஆர்டர் செய்தவர்களுக்கு உருளைக்கிழங்கும், லேப்டாப் ஆர்டர் செய்தவர்களுக்குச் சோப்பும் கிடைத்தது பெரும் ஏமாற்றமாக இருந்தது.

இந்த நிலையில் இதே ஆன்லைன் ஷாப்பிங்-ல் ஜாக்பாட் அடித்துள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங்

ஆன்லைன் ஷாப்பிங்

மக்கள் மத்தியில் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது ஆர்டர் செய்த பொருட்கள் சரியா வந்துவிட்டால் போதும் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில், ஒருவருக்கு ஆர்டர் செய்யப்பட்ட பொருளை காட்டிலும் சூப்பரான பொருள் வந்துள்ளது.

ஐபோன்

ஐபோன்

டிவிட்டரில் அஸ்வின் ஹெக்டே என்பவர் பகிர்ந்துள்ள போட்டோ படி, தனது நண்பர் ஒருவர் பிளிப்கார்ட் தளத்தில் ஆப்பிள் ஐபோன் 13 மாடல் 128 ஜிபி போன் ஆர்டர் செய்துள்ளார், ஆனால் அவருக்கு வந்ததோ ஐபோன் 14 போன். மேலும் அஸ்வின் ஹெக்டே ஆர்டர் விபரத்தையும், ஐபோன் 14-ஐயும் போட்டோவாகப் பகிர்ந்துள்ளார்.

ஐபோன் 13-க்குப் பதில் ஐபோன் 14
 

ஐபோன் 13-க்குப் பதில் ஐபோன் 14

ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களே சரியாக வராமல் இருக்கும் இந்த வேளையில் குறிப்பாகப் பிளிப்கார்ட் நிறுவனத்தில் அதிகப்படியான குளறுபடிகள் நடக்கும் வேளையில் இந்த ஐபோன் 13-க்கு பதிலாக ஐபோன் 14 வந்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தையும், சிலருக்கு பொறாமையும் ஏற்படுத்தியுள்ளது.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 13 போனை வெறும் 50000 ரூபாய்க்கு அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சர்ப்ரைஸ் அளிக்கும் ஐபோன் 14 மீண்டும் பிளிப்கார்ட்-ஐ மக்கள் மத்தியில் பிரபலமாக்கியுள்ளது.

பண்டிகை காலம்

பண்டிகை காலம்

2 வருடத்திற்குப் பின்பும் எவ்விதமான லாக்டவுன் கட்டுப்பாடுகள் இல்லாமல் நடக்கும் பண்டிகை காலம் என்பதால் அனைத்துத் தரப்பு மக்களும் பெரிய அளவில் கொண்டாட முடிவு செய்துள்ளனர். இந்தப் பண்டிகை காலத்தில் இந்திய குடும்பங்கள் குறைந்தது 10000 ரூபாய் செலவு செய்யும எனச் சந்தை ஆய்வுகள் கூறுகிறது. இதில் பெரிய பங்கை தற்போது ஈகாமர்ஸ் நிறுவனங்கள் எடுத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Man Orders iPhone 13, Receives iPhone 14 Instead; Flipkart surprises again

Man Orders iPhone 13 but Receive iPhone 14 in Flipkart. Ecommerce company flipkart surprises again in good way
Story first published: Saturday, October 8, 2022, 18:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X