அக்டோபர் 15-ஆம் தேதியான செவ்வாய்க்கிழமை, காலை முதல் பெங்களூரில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் பல பயணிகள் அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் கேப் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் அதுவும் பெரிய பிரச்சினையாகியுள்ளது. பெங்களூரை சேர்ந்த ஒரு பயணி அதிக கட்டணம் வசூலிக்காத ஒரு ஆட்டோக்காரரை சந்தித்த சம்பவத்தை தனது ரெட்டிட் பதிவில் போஸ்ட் செய்துள்ளார்
திங்கட்கிழமை இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அலுவலகத்திற்கு செல்பவர்கள் மாணவ மாணவியர்கள் என பலருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக பொதுப் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போய் உள்ளது. ஓலா, உபர், ராப்பிடோ போன்ற எந்தவித சேவையும் அவைலபிலாக இல்லை. இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் குறுகிய தூரத்திற்கு செல்வதற்கும் 300 ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.

இந்தப் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் ஒரு பயணி உள்ளூர் ஆட்டோ டிரைவரை நிறுத்தியுள்ளார். அடுத்ததாக நடந்தது அந்தப் பயணியை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. ஏனெனில் அந்தப் பயணி அந்த ஆட்டோ டிரைவரிடம் தான் இறங்கும் இடத்தை கூறியுள்ளார் அதற்கு அந்த ஆட்டோ டிரைவர் புன்னகைத்துக் கொண்டே 250 ரூபாய் ஆகும் என்று கூறி இருக்கிறார். மேலும் அந்த பயணியை பாதுகாப்பாக இறக்கி விட்டதோடு எந்த வித கூடுதல் டிப்சையும் அந்த ஆட்டோ டிரைவர் வாங்கவில்லையாம். கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் கூடுதல் தொகை எதுவும் வாங்காமல் தன்னை பாதுகாப்பாக இறக்கிவிட்ட அந்த மனிதர் குறித்து தனது ரெட்டிட் பதிவில் பகிர்ந்துள்ளார்.
சுற்றியிருக்கும் எல்லா எதிர்மறையான விஷயங்களுக்கு இடையில், இந்த ஆட்டோ அண்ணா தான் பெங்களூரை நான் ஏன் நேசிக்கிறேன் என்பதை காட்டினார்" என்று அவர் பதிவிட்டிருந்தார்.
கடுமையாக மழை பெய்யும் நாட்களில் பொதுவாக ஆட்டோ கட்டணங்கள் உயரும். ஆனால் அதிகமாக பணம் கொடுத்ததையும் வாங்க மறுத்த ஆட்டோக்காரருக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூரில் ஒரே இரவில் கனமழை பெய்தது. அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு இடைவிடாத மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கடந்த 24 மணி நேரத்தில் 3.3 மிமீ மழை பதிவாகியுள்ளது. செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மஞ்சள் எச்சரிக்கையும், உடுப்பி மற்றும் தட்சிண கன்னடா உள்ளிட்ட கடலோர கர்நாடகா முழுவதும் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எதிர்பார்ப்பதால், பெங்களூரு வாசிகள் வரும் நாட்களில் அதிக மழைக்கு தயாராகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications