வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் சில நேரங்களில் தொழில் முனைவோராக மாற வேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது வந்து போவது வழக்கம்தான். அதிலும் குறிப்பாக சில தொழில்களை தொடங்கலாம் என்று நாம் சிந்தித்திருப்போம். இன்று நாம் பார்க்க இருக்கும் ஒரு நபர் வித்தியாசமான ஒரு தொழிலை செய்து ஆண்டுக்கு ரூ.55 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறார். அவர் அப்படி என்ன செய்கிறார்? எப்படி இவ்வளவு வருமானம் கிடைக்கிறது? என்பதைப் பார்ப்போம்.
ராஜஸ்தானை சேர்ந்த கவுரவ் பச்சௌரி, சுமார் நான்கு ஆண்டுகளாக அரசு தேர்வு எழுதி அரசாங்க ஊழியராக வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார். ஆனால் அவருடைய முயற்சிகள் எதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை. ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இரண்டு வழிகள் மட்டுமே இருந்துள்ளது. ஒன்று அரசாங்க தேர்வுகளுக்கு தொடர்ந்து பாடுபடுவது அல்லது ஒரு விவசாயியாக மாறுவது.

2017-ஆம் ஆண்டில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்த பிறகு கௌரவ் அவரது நண்பர்களைப் போலவே ராஜஸ்தானில் அரசாங்க வேலைக்கு செல்வதற்காக தயாராக தொடங்கியுள்ளார். தேர்வுகளுக்காக படிப்பதற்கு டெல்லி சென்றுள்ளார். அங்கு தொடர்ந்து முயற்சித்துள்ளார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. அதனால் அரசாங்க தேர்வுகள் தனக்கானது அல்ல என்று நம்ப ஆரம்பித்துள்ளார். தனித்துவமான ஒன்றைச் செய்யும் முயற்சியில் கௌரவ் நன்னீர் முத்து வளர்ப்பில் இறங்கினார்.
கௌரவ் இதற்காக தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துள்ளார். அதில் எப்படி விவசாயம் செய்து லாபம் ஈட்டுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டுள்ளார். முத்துக்களை விற்பதன் மூலம் ஒருவர் நன்றாக சம்பாதிக்க முடியும் என்பதைத் தெரிந்து கொண்ட கௌரவ் நன்னீர் முத்து வளர்ப்பில் இறங்கியுள்ளார். முத்து விவசாயத்தை மேற்கொள்வதில் உள்ள அபாயத்தை விட இந்த ஐடியாவை எப்படி தனது குடும்பத்திடம் சொல்வது என்று கௌரவ் பயந்திருக்கிறார்.
இது குறித்து கௌரவ் கூறுகையில், "நான் என் பெற்றோரிடம் இந்த யோசனையை பகிர்ந்து கொள்ளும் போது அவர்கள் என்னை நம்பவே இல்லை. எனது குடும்பம் கோதுமை, திணை, கடுகு போன்ற பாரம்பரிய பயிர்களை பயிரிட்டு வந்தது. ஆனால் எங்கள் வயல்களில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க நான் இதுவரை சென்றதே இல்லை. ஏர் கண்டிஷனர்களில் வசதியாக இருப்பதையே நான் விரும்பினேன். இது எங்களுக்கு ஒரு புதிய வகையான விவசாயம் என்று கருதி என் பெற்றோர்கள் என்னை சந்தேகத்துடன் பார்த்தனர்.
விவசாயம் செய்வதற்கு பதிலாக எனக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்து என்னை படிக்க சொல்லி வற்புறுத்தினர். ஆனால் நான் ரிஸ்க் எடுக்க விரும்பினேன். ஒருமுறை அனைவரும் தெரிந்து கொண்டால் அதன் பிறகு என்னை எல்லோரும் நம்புவார்கள் என்ற நம்பிக்கையில் விவசாயத்தில் இறங்கினேன்" என்று கூறியுள்ளார்.
2022-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், கௌரவ் தனது குடும்பத்தினரை சமாதானப்படுத்தி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள முத்து வளர்ப்புக்கான குளங்களைப் பார்க்கச் சென்றார். ஒடிசாவில் உள்ள நன்னீர் மீன் வளர்ப்புக்கான மத்திய நிறுவனத்தில் (CIFA) 5 நாள் பயிற்சியிலும் கலந்து கொண்டார்.
மூலப்பொருளை எவ்வாறு பெறுவது, மஸ்ஸல்களை எவ்வாறு அணுக்கருவாக்கம் செய்வது, மஸ்ஸல்களுக்கு என்ன உணவு வழங்குவது மற்றும் அவற்றின் சிகிச்சை முறைகள் மற்றும் முத்துக்களை எவ்வாறு தயாரிப்பது என்பதைக் கற்றுக்கொண்டுள்ளார் கௌரவ். 8,000 ரூபாய் செலவாகும் இந்தப் பயிற்சியின் மூலம், அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. முத்து வளர்ப்பு செய்வதற்கான சான்றிதழும் பெற்றுள்ளார் கௌரவ்.
செப்டம்பர் 2022 வாக்கில், பாரத்பூர் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்தில் 150 x 80 அடி அளவில் ஒரு குளத்தை தயார் செய்து, 1.15 லட்சம் மஸ்ஸல்களை அந்த குளத்தில் சேர்த்தார் கௌரவ். சுவாரஸ்யமாக, அவர் திட்டங்களில் மற்ற சிறு விவசாயிகளையும் சேர்த்துக் கொண்டார்.
ஆரம்பத்தில் சிறிய அளவில் முதலீட்டை தொடங்க நினைத்துள்ளார். ஆனால் இது குறித்து மேலும் பல விவசாயிகளிடம் பேசியபோது அவர்களும் முத்து வளர்ப்பில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளனர். இதனால் 1.15 லட்சம் மஸ்ஸல்களில், 50,000 தனிப்பட்டதாக கௌரவ் மட்டும் முதலீடு செய்த மஸ்ஸல்களாகும். கௌரவ் முத்து விவசாயத்தை ரூ.21 லட்சம் முதலீட்டில் தொடங்கினார். அதில் ரூ.8 லட்சம் குளத்தை அமைப்பதற்காக செலவிடப்பட்டது.
மஸ்ஸல் அணுக்கருவாக்கிய பிறகு அவற்றை சிறிய வயல்களில் போட்டு அதன் பிறகு குளத்திற்கு மாற்றியுள்ளனர். இந்த செயல்முறைக்கு சுமார் ஒன்றரை மாதங்கள் வரை எடுத்ததாம். ஆனால் அதன் பிறகு குளத்தை பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் மஸ்ஸல்கள் உயிர் வாழ்வதற்காக குளத்தில் தீவனம் சேர்த்து ஆக்ஸிஜனையும் பராமரித்தோம் என்று கூறுகிறார் கௌரவ்.
அதன் பிறகு மஸ்ஸல்கள் முத்துகளாக மாறும் வரை 21 மாதங்கள் காத்திருந்துள்ளார். இறுதியில் கௌரவவின் விடாமுயற்சிக்கு பலன் கிடைத்தது. ஒரு முத்து 110 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் 1.25 கோடி கோடி விற்பனை செய்து ரூ.80 லட்சம் லாபம் ஈட்டினோம். இந்த லாபத்தை பெறுவது எங்களுக்கு மிகப்பெரிய விஷயம். 200 கிராமங்களில் உள்ள விவசாயிகள் கூட்டாக கோதுமை பயிரிட்டாலும் இவ்வளவு சம்பாதிக்க முடியாது என்கிறார் கௌரவ். இதில் தனிப்பட்ட முறையில் கௌரவிற்க்கு ரூ.21 லட்சம் முதலீட்டுக்கு ரூ.55 லட்சம் கிடைத்துள்ளது.
ஆனால் இந்த சாதனை அவ்வளவு எளிதாக இல்லை. "நன்னீர் முத்து வளர்ப்பில் உள்ள சவால்களில் ஒன்று வானிலை நிலைமைகளை நிர்வகிப்பது. ராஜஸ்தானில் வெப்பமான வானிலை இருப்பதால், ஒடிசாவில் இருந்து மஸ்ஸல்களை வரவழைக்க இரண்டு நாட்கள் எடுக்கும். இந்த செயல்பாட்டில், நீண்ட காலமாக தண்ணீர் இல்லாமல் இருந்ததால், மஸ்ஸல்கள் மிகவும் பலவீனமடைந்தது.
ராஜஸ்தானில் வானிலை இன்னும் சூடாக இருக்கும். எனவே செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்குப் பதிலாக ஜனவரி மாத தீவிர குளிர்காலத்தில் முத்து வளர்ப்பைத் தொடங்க முடிவு செய்தேன். 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நான் மஸ்ஸல்களை வாங்கியபோது, இறப்பு விகிதம் வெறும் 30 சதவீதமாக இருந்தது," என்று அவர் பகிர்ந்துள்ளார்.
இப்போது இரண்டாவது குளத்தையும் தயார் செய்து அதிலும் முத்து வளர்ப்பை செய்து வருகிறார். இதன் மூலம் நல்ல லாபம் ஈட்டி வருகிறார். விடாமுயற்சியும் பொறுமையும் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்பதற்கு இவருடைய கதை ஒரு சிறந்த உதாரணம்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications