இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம், பலருக்கும் ஆடம்பர வாழ்க்கை முறையை அடையத் தூண்டுகிறது. இதில் ஆடம்பர கார்கள் ஒரு முக்கியமான அம்சமாகும். ரோல்ஸ்-ராய்ஸ், உலகின் பிரபலமான மற்றும் ஆடம்பரமான கார் பிராண்டுகளில் ஒன்றாகும். இந்தியாவில், ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளன. இதற்கான காரணங்களில் ஒன்று, அவற்றின் உயர்ந்த விலை. இன்று பணக்காரராக இருக்கும் ஒருவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க சென்று அங்குள்ள விற்பனையாளரால் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்தை தற்போது யூடியூபில் பகிர்ந்து உள்ளார்.
தற்பொழுதும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இந்தியாவில் அரிதாக தான் பார்க்க முடிகிறது. அப்படியானால் 2000 ஆண்டுகளில் சற்று யோசித்துப் பாருங்கள்! இன்னும் அரிதாக தான் இருந்திருக்கும் அல்லவா?. 2000 ஆண்டில் ஜோயாலுகாஸ் குரூப்பின் உரிமையாளரான ஜோய் ஆலுக்காஸ் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க சென்றுள்ளார்.

அப்போது ஒரு விற்பனையாளரால் இந்த காரை வாங்க அவர் தகுதியற்றவர் என்று கூறி திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இன்று இவருடைய நிகர சொத்து மதிப்பு 4.4 பில்லியன் டாலர்கள். இந்தியாவில் 50-வது மிகப்பெரிய பணக்காரராக ஜோய் ஆலுக்காஸ் இருக்கிறார்.
இந்தியாவின் மிக முக்கியமான நகை பிராண்டுகளில் ஒன்றான ஜோயாலுக்காஸ் குழுமத்தை நடத்தும் 67 வயதான இவர், சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில் "நான் ரோல்ஸ்-ராய்ஸ் காரை பார்க்க கடைக்குச் சென்றேன். அங்குள்ள விற்பனையாளர் கார் இல்லை என்றும், நீங்கள் வேறு இடத்திற்கு சென்று கார் வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறினார். கடைக்காரரின் இந்த நடத்தை எனக்கு வெட்கமாக இருந்தது. அப்போதுதான் இதே காரை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன் பின்பு அதே காரை நான் வாங்கினேன் என்று கூறியுள்ளார்.
ஜோயாலுக்காஸ் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கினாலும் மிக விரைவில் தனக்கு அந்த கார் தேவை இல்லை என்பதை உணர்ந்துள்ளார். இதனால் UAE-இல் 500 AED மதிப்புள்ள தங்கத்தை வாங்கும் முதல் நம்பருக்கு அந்தக் காரை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளார். இவரின் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் முதல்முறையாக ரோல்ஸ்-ராய்ஸ் கார் இவ்வளவு மலிவான விலையில் வழங்கப்பட்டது.
இந்த சம்பவத்தினால் ஜோயாலுக்காஸ் ஜுவல்லரி ஆசியாவிலேயே மிகச் சிறந்த தங்கநகை விற்பனையாளராக மாறியது. இதன் மூலம் ஜோயாலுக்காஸ் அதிக லாபம் ஈட்டினார். இந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.6 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் என்ற சொகுசு காரை வாங்கியுள்ளார்.
ஜோயாலுக்காஸ் குழுமம் 1956-ஆம் ஆண்டில் கேரளாவில் உள்ள திருச்சூரில் ஒரு சிறிய நகைக்கடையில் தொடங்கப்பட்டது. 1976-ஆம் ஆண்டில் இந்த கடை அலுக்கா ஜோசப் வர்கீஸ் என்பவரால் தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1976-ஆம் ஆண்டில் அலுக்கா ஜோசப் வர்கீஸ் மகன் வணிகத்தில் சேர்ந்தார்.
காலப்போக்கில் இது இந்தியா முழுவதும் 60-க்கும் மேற்பட்ட பெரிய ஷோரூம்களாகவும், வெளிநாடுகளிலும் விரிவடைந்தது. தென் இந்திய நகை கடைகளில் தற்போது முன்னணியில் உள்ளது. 1987-ஆம் ஆண்டு அபுதாபியில் தனது முதல் வெளிநாட்டு கடையைத் திறந்தது.
ஜோய் ஆலுக்காஸ், ரோல்ஸ்-ராய்ஸ் காரை விற்க மறுத்த விற்பனையாளருக்கு பதிலடி கொடுத்து, தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்துள்ளார். ஜோயாலுக்காஸ் குரூப்பை ஒரு முன்னணி நிறுவனமாக மாற்றியுள்ளார். அவரது கதை, தன்னம்பிக்கை மற்றும் உறுதியான முயற்சிகள் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நிரூபிக்கிறது.


Click it and Unblock the Notifications