சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் நிங்போ நகரில் 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஒரு நிறுவன விழாவில், ஒரு சீன குடிமகன் 6 மில்லியன் யுவான் மதிப்புள்ள லாட்டரி பரிசை வென்றார். இது இந்திய மதிப்புக்கு தோராயமாக 7.8 கோடியாகும். ஆனால் அந்த பரிசை அனைத்து பங்கேற்பாளர்களுடனும் பகிர்ந்து கொள்ளுமாறு திருப்பித் தர நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
பல நிறுவனங்கள் இது போன்ற விழாக்களை நடத்தி வருகின்றன. அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகின்றன. ஆனால் 2019-ஆம் ஆண்டில் நடந்த இந்த சம்பவம் மீண்டும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. சிலர் லாட்டரி டிக்கெட் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் இந்த கதை மீண்டும் வெளியிடப்படுவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சீனாவில் நடந்த இந்த சம்பவத்தில் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக உள்ளூரில் உள்ள கடையிலிருந்து 500க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகளை நிறுவனம் வாங்கியது. ஒவ்வொரு ஊழியருக்கும் ஒரு டிக்கெட் வழங்கப்பட்டது. அப்போது தான் பெயர் குறிப்பிடப்படாத ஒரு வெற்றியாளர் லாட்டரி பரிசை வென்றார். இவருடைய வெற்றி ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல ஊழியர்கள் சமூக ஊடகங்களில் செய்திகளை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர்.
ஆனால் வெற்றியாளரிடம் நிறுவனம் வெற்றி பெற்ற பரிசை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டது., ஆனால் அதற்கு வெற்றி பெற்ற அந்த ஊழியர் மறுப்பு தெரிவித்தார். இதனால் தகராறு தீவிரம் அடைந்து, தீர்வுக்காக சீனாவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகாரளித்தனர். காவல்துறை அதிகாரிகள் இந்த பிரச்சனையை நிவர்த்தி செய்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் இது ஒரு சிவில் தகராறு என்றும் தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கைகள் எடுத்து தீர்வு காண வேண்டும் என்றும் இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இதில் சுவாரசியம் என்னவென்றால் டிக்கெட்டுகள் வழங்கப்படுவதற்கு 2 நாட்கள் முன்னதாகவே டிக்கெட் குலுக்கல் நடைபெற்றது பிப்ரவரி 28ஆம் தேதி அன்று லாட்டரி குலுக்கல் நடைபெற்று முடிந்தது. அதன் பிறகு மார்ச் 2-ஆம் தேதி தான் டிக்கெட் விநியோகிக்கப்பட்டது. வெற்றி பெற்ற டிக்கெட்கள் யார் கையிலும் கிடைக்காதவாறு பிரித்து எடுக்கச் சொல்லி நிறுவனத்தின் தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் ஏதோ ஒரு கவனக்குறைவின் காரணமாக ஒரு ஊழியரின் கையில் டிக்கெட் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.
பரிசாக லாட்டரி டிக்கெட்களை வழங்கிவிட்டு மீண்டும் வெற்றியாளரிடமிருந்து பரிசை கேட்பது எந்த விதத்தில் நியாயமா? என்று சோசியல் மீடியா பயனர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications