மும்பை: இந்தியாவில் 100 ஆண்டுகளுக்கு மேலாக தொழில் செய்து வரும் குழுமங்களை நாம் விரல் விட்டு எண்ணி விட முடியும். அவற்றில் முக்கியமானவை டாடா மற்றும் கிர்லோஸ்கர் (Kirloskar) நிறுவனங்கள். இந்த இரண்டு நிறுவனங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் பெண்ணாக இருக்கிறார் மானசி கிர்லோஸ்கர்.
மானசி க்ரிலோஸ்கர் டாடா தற்போது கிர்லோஸ்கர் குழுமத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார். 1990 ஆம் ஆண்டு பிறந்த மானசி , கிர்லோஸ்கர் ஜாயிண்ட் வென்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் (Kirloskar Joint Venture Private Limited) தலைவராக கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார்.

இவர் விக்ரம் கிர்லோஸ்கரின் மகள். கடந்த 2022 ஆம் ஆண்டு திடீரென விக்ரம் கிர்லோஸ்கர் மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து மானசி அந்த பொறுப்பை ஏற்கும் நிலை உண்டானது. கிர்லோஸ்கர் குழுமம் இந்தியாவில் கிட்டத்தட்ட 130 ஆண்டுகால தொழில் வரலாற்றினை கொண்டிருக்கிறது.
இந்த குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு 13844 கோடி ரூபாயாக இருக்கிறது. மானசி கிர்லோஸ்கர் ஜாயிண்ட் வென்சர் லிமிடெட் நிறுவனத்தில் தலைமை பொறுப்பை ஏற்றது முதலே பல்வேறு புதுமைகளை நிறுவனத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார். குறிப்பாக டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் உடன் இணைந்து கிர்லோஸ்கர் குழுமம் இந்தியாவில் இரண்டாவது ஹைபிரிட் வாகனத்தை வெளியிட்டுள்ளது இதில் குறிப்பிடத்தக்கது.
இது தவிர Toyota Engine India Limited, Kirloskar Toyota Textile Private Limited, Deno Kirloskar Industries Private Limited உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களையும் மானசி தான் கவனித்துக் கொள்கிறார். மானசி சுற்றச்சூழலை பாதுகாக்கும் நடைமுறைகளை தொழிலில் கொண்டு வந்ததற்கு பெயர் போனவர். அந்த வகையில் ஐநா இவருக்கு Sustainable Development Goals பிரிவில் சிறந்த இளம் தொழிலதிபர் என்ற பட்டத்தை வழங்கியுள்ளது.
இவர் 2019 ஆம் ஆண்டு திருமண பந்தத்தின் மூலம் டாடா குடும்பத்திலும் இணைந்தார். ரத்தன் டாடாவின் சகோதரரான நோயல் டாடாவின் மகன் நெவில் டாடாவை இவர் திருமணம் செய்து கொண்டார். கிர்லோஸ்கர் குடும்பத்தில் ஐந்தாம் தலைமுறை தொழிலதிபராக தொழில் உலகத்தில் படிப்படியாக ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறார் மானசி.
தொழில் மட்டுமில்லாமல் கலை மற்றும் விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்டவர். இவர் மலைஏறுவது மற்றும் ஆழ்கடல் நீச்சல் மற்றும் பிற நீர் சார்ந்த விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.
மேலும் இவரது கலைப்படைப்புகள் பல்வேறு நாடுகளிலும் காட்சிப்படுத்தப்பட்டு பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது. இவர் ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி அதன் மூலம் கர்நாடக மாநிலத்தில் மூன்று மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளை தத்தெடுத்து அந்த அரசு பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கிறார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications