இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படும் ஆதார் கார்டு, அரசாங்கத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது முதல் அடையாள அட்டைகளைப் பெறுவது வரை அரசு தொடர்பான அனைத்து பணிகளுக்கும் இன்றியமையாத ஒன்று. இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களின் விவரங்களையும் உள்ளடக்கி வைத்திருப்பதால் ஆதார் கார்டில் அனைத்து தகவல்களும் சரியானதாக இருப்பது அவசியம். இது பெரியவர்களுக்கு மட்டும் கிடையாது.. குழந்தைகளுக்கும் பொருந்தும். உங்கள் குழந்தைக்கு நீங்கள் ப்ளூ ஆதார் கார்டு பெற்றிருந்தால் அவற்றை இருமுறை புதுப்பிக்க வேண்டி இருக்கும்.
2018-ஆம் ஆண்டு இந்த ப்ளூ ஆதார் கார்டை அரசு பிறந்த குழந்தைகள் முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வரை கொண்டுவர முடிவு செய்தது. அதன் பேரில் தற்போது பால்ய ஆதார் அல்லது ப்ளு ஆதார் என்ற பெயரில் ஆதார் கார்டு குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆதார் கார்டை 2 முறை புதுப்பிக்க வேண்டும். ஒன்று குழந்தையின் 5-வது வயதில் மற்றொன்று குழந்தைக்கு 15 வயது ஆகும்போது என இரு முறை புதுப்பிக்க வேண்டி இருக்கும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் ஆதார் அட்டையை எந்த ஆதார் சேவா கேந்திராவிலும் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். இரண்டு கட்டாய பயோமெட்ரிக் அப்டேட்-கள் 2 முக்கிய கட்டங்களில் முடிக்கப்பட வேண்டும். எனவே குழந்தைக்கு 5 வயதாகும் போது ஒரு முறை மற்றும் 15 வயதாகும்போது ஒருமுறை என 2 முறை புதுப்பிக்க வேண்டும். ஒரு குழந்தை வளரும்போது, அவர்களின் கைரேகைகள், கருவிழிகள் மற்றும் பிற பயோமெட்ரிக் விவரங்கள் மாறுவதால், இந்தப் புதுப்பிப்புகள் அவசியம்.
ப்ளூ ஆதார் கார்டைப் பெறுவது எப்படி?: ப்ளூ ஆதார் பெற அந்தந்த குழந்தைகளின் பெற்றோர் விண்ணப்பிக்கலாம். இந்த ஆதார் கார்டை பெற பெரிதாக ஆவணம் ஒன்றும் தேவையில்லை. பிறப்புச் சான்றிதழ் அல்லது மருத்துவமனையில் பெற்றோர்கள் பயன்படுத்திய டிஸ்சார்ஜ் சீட் போதுமானது. மேலும் அதற்கு பதிலாக குழந்தைகள் பள்ளியில் சேர்த்திருந்தால் அந்த ஐடி கார்டை கூட பயன்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு பால்ய ஆதார் கார்டு பெற்றிருக்கும் பெற்றோர்கள் கண்டிப்பாக 2 முறை அவர்களுடைய கைரேகை விவரங்கள், கருவிழி விவரங்களோடு புகைப்படத்தையும் மாற்றி அமைத்து அப்டேட் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் சரியான விவரங்களுடன் ஆதார் கார்டு இருக்கும்.
குழந்தைகளின் வளர்ச்சியின் போது சில மாறுதல்கள் ஏற்படக்கூடும். இதனால் தான் இரண்டு முறை புதுப்பிக்க UIDAI பரிந்துரைக்கிறது. இந்த விவரங்களை அப்டேட் செய்யத் தவறினால் சில சேவைகளைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.


Click it and Unblock the Notifications