பேஸ்புக் பார்த்தா செவுலேயே அடிக்கணும்.. இதுதான் வேலை, இதுக்கு சம்பளம் வேற இருக்குப்பா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் நம்மை அடிமைப் படுத்துகிறது என்பது அனைவருக்கும் தெரியும், ஆனாலும் தொடர்ந்து இதை கைவிடாமல் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்தப் பிரச்சனையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்திய அமெரிக்கரான மனிஷ் சேத்தி என்பவர் ஒரு சிறப்பான சம்பவத்தைச் செய்துள்ளார்.

 

இவரின் செயல் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்-ன் ட்வீ ட் மூலம் தற்போது உலகளவில் டிரென்ட் ஆகியுள்ளது.

 மனீஷ் சேத்தி

மனீஷ் சேத்தி

இந்திய அமெரிக்கரான மனீஷ் சேத்தி, Pavlok என்ற வியரிபிள் கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தின் நிறுவனராக உள்ளார். இவரும் பல கோடி மக்களைப் போல் அதிக நேரம் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தி வந்த நிலையில், இதை மாற்றப் பல முயற்சிகள் எடுத்துத் தோல்வி அடைந்தார்.

 8 டாலர் சம்பளம்

8 டாலர் சம்பளம்

இந்நிலையில் தான், ஒவ்வொரு முறையும் பேஸ்புக் பார்க்கும் போது தன்னைச் செவுலேயே அடிக்க Craigslist தளத்தில் இருந்து ஒருவரை நியமித்துள்ளார். இவருக்கு ஒரு மணிநேரத்திற்கு 8 டாலர் சம்பளம். இந்நிலையில் மனீஷ் சேத்தி எங்குச் சென்றாலும் அவருடன் சென்று அவருடைய கம்ப்யூட்டர் ஸ்கிரீன்-ஐ கண்காணிக்க வேண்டும்.

 98% வரை உயர்வு
 

98% வரை உயர்வு

பொதுவாக மனீஷ் சேத்தி-யின் வேலை திறன் ஒரு நாளில் சுமார் 35 முதல் 40 சதவீதம் வரையில் மட்டுமே இருக்கும். கண்ணத்தில் அறைவதற்காகச் சாரா-வை நியமிக்கப்பட்ட பின்பு தன்னுடைய வேலை திறன் 98 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது என மனீஷ் தெரிவித்துள்ளார்.

 9 ஆண்டுக்குப் பின்

9 ஆண்டுக்குப் பின்

மனீஷ் சேத்தி 2012ல் இதேபோன்று செய்த நிலையில் 9 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் இதேபோன்ற பணியைச் செய்துள்ளார். இதன் மூலம் வேலை அதிகமானாலும் சரி, வயதானாலும் சரி பேஸ்புக் அடிமை பழக்கம் அனைத்துத் தரப்பினர்கள் மத்தியிலும் உள்ளது என்பதைக் காட்டுகிறது.

 எலான் மஸ்க் ட்வீ ட்

எலான் மஸ்க் ட்வீ ட்

ஆனால் மனீஷ் சேத்தி இந்த வருடம் சாரா-வை கண்ணத்தில் அறைவதற்காக நியமிக்கப்பட்ட செய்தி டிவிட்டரில் டிரெண்டான நிலையில், எலான் மஸ்க் இந்தச் செய்தி குறித்த டிவீட்டுக்கு இரண்டு நெருப்பு எமோஜியை பதிவிட்டு உள்ளார். இதற்கு மனீஷ் சேத்தியும் ஆச்சரியத்தில் வியந்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Maneesh Sethi hired sara to slap him every time he used Facebook; Elon Musk's reaction made him viral

Maneesh Sethi hired sara to slap him every time he used Facebook; Elon Musk's reaction made him viral
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X