ஆன்லைன் மோசடிகளின் அதிகரிப்பு சில காலமாக தொடர்கதையாகியுள்ளது. நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 செய்திகள் ஆன்லைன் மோசடிகளில் ஏமாறும் நபர்கள் குறித்து வெளியாகிறது. அந்த வகையில் இன்று மங்களூருவைச் சேர்ந்த ஒருவர் பழைய நாணயங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய முயற்சிக்கையில் ரூ. 58.26 லட்சத்தை இழந்துள்ளார். இந்தச் சம்பவம் எப்படி நடந்தது? இனி வரும் நாட்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பார்ப்போம்.
பாதிக்கப்பட்ட நபர், நவம்பர் 25-ஆம் தேதி அன்று பேஸ்புக்கில் ஸ்க்ரோல் செய்து கொண்டிருக்கும்போது பழைய நாணயங்களை அதிக விலைக்கு வாங்குவதாக கூறும் ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். விரைவாக லாபம் ஈட்டுவதற்காக அந்த நபரும் விளம்பரத்தை கிளிக் செய்துள்ளார். அவர் அந்த லிங்கை கிளிக் செய்ததைத் தொடர்ந்து ஒரு கட்டண தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதில் ரூ. 750 ஆரம்ப கட்டணம் செலுத்துமாறு கொடுக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட நபரும் இந்த கட்டணத்தை செலுத்தி இணையதளத்தில் இணைய முடிவெடுத்தார். பணம் செலுத்திய சிறிது நேரத்திலேயே பாதிக்கப்பட்டவருக்கு நாணயம் வாங்கும் தளத்தின் அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக்கொண்ட தெரியாத நபர்களிடமிருந்து மெசேஜ் வந்துள்ளது.

அதன் பிறகு பணம் செலுத்திய சிறிது நேரத்திலேயே, அந்த நபர்கள் பாதிக்கப்பட்டவரிடம் ஜிஎஸ்டி, செயலாக்கக் கட்டணம், காப்பீடு, டிடிஎஸ், ஜிபிஎஸ் கட்டணங்கள், ஐடிஆர் கட்டணங்கள் மற்றும் விற்பனையை தொடர ஆர்பிஐ கட்டணங்கள் என பல்வேறு சாக்குப் போக்குகளின் கீழ் கூடுதல் பணம் செலுத்துமாறு கூறியுள்ளனர். பாதிக்கப்பட்டவரும் இந்த நபர்களின் வார்த்தைகளை நம்பி பரிவர்த்தனையை முடிக்க இந்த பணம் அவசியம் என்று நினைத்து RTGS, NEFT மற்றும் UPI வழியாக பணத்தை மாற்ற தொடங்கியுள்ளார். காலப்போக்கில் அனுப்பிய பணம் லட்சங்களை எட்டியது.
டிசம்பர் 15-ஆம் தேதி, மும்பை சைபர் போலீஸ் கமிஷனர் என்று கூறப்படும் கௌரவ் சிவாஜி ராவ் ஷிண்டே என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவரிடமிருந்து பாதிக்கப்பட்டவருக்கு அழைப்பு வந்தது. மேலும் பாதிக்கப்பட்டவரிடம் அவருடைய முந்தைய பரிவர்த்தனைகள் காரணமாக ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியதாகவும் கைது நடவடிக்கைகளில் இருந்து மீள கூடுதலாக ரூ.12.55 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.
சட்ட ரீதியான விளைவுகளைப் பற்றி நினைத்து பயந்து போன அந்த நபர் டிசம்பர் 17-ஆம் தேதி அன்று ரூ.9 லட்சத்தை டிசிபி வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். ஆனால் பணம் அனுப்பும்படி கோரிக்கைகள் தொடர்ந்து வந்ததால் பாதிக்கப்பட்டவருக்கு பணத்தை அனுப்பிய பிறகு தான் சந்தேகம் ஏற்பட தொடங்கியுள்ளது. அதன் பின்னர் பாதிக்கப்பட்டவர் சில கேள்விகளை கேட்டுள்ளார். உடனே மோசடி செய்பவர்கள் ஆக்ரோஷமாகி பணம் செலுத்தும் படி அவரை மிரட்ட தொடங்கினர். அப்போதுதான் இது மோசடி என்பதை பாதிக்கப்பட்டவர் உணர்ந்தார். இதன் மூலம் மொத்தமாக ரூ.58.26 லட்சத்தை இழந்துள்ளார்.
ஆன்லைனில் பழைய நாணயங்களை மாற்றி பணம் சம்பாதிக்கலாம் என கூறி மோசடி செய்யும் சம்பவங்கள் தற்போது அதிக அளவில் நடைபெறுகிறது. பழைய பணத்திற்கு அதிக பணம் தருவதாக கூறும் விஷயங்களை ஆர்பிஐ ஆதரிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். எனவே ஆன்லைனில் உங்கள் பழைய நோட்டுகளை விற்பனை செய்யும் போது ஜாக்கிரதையாக இருங்கள். அதிக ரிட்டன்ஸ் கொடுப்பதாக கூறும் எந்த ஒரு விஷயத்தையும் சந்தேக கண்ணோட்டத்துடன் பாருங்கள். இன்றெல்லாம் உறவினர்களே 50 ரூபாய் தர யோசிக்கும் நிலையில்.. யாரோ ஒருவர் உங்களுக்கு எப்படி அதிக ரிட்டன்ஸ் வழங்குவார் என்பதை சிந்தித்தாலே போதும்.. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications