இந்தியாவில் கோடை காலம் என்றாலே வெயிலுக்கு அடுத்ததாக மாம்பழங்கள் தான் நினைவுக்கு வரும். மாம்பழத்தின் ருசிக்கே ஒட்டு மொத்த இந்தியாவே அடிமை என கூறலாம். இதனால் வெளிநாடுகளிலும் இந்திய மாம்பழ வகைகள் பல கோடிக்கு விற்கப்படுகின்றன.
மாம்பழ சாகுபடி ஒரு தொழிலாக இருந்தாலும் அதிலும் புதுமையை புகுத்தி சாதனை படைத்திருக்கிறார் ஒரு இந்தியர். அவரை செல்லமாக இந்தியாவின் மாம்பழ மனிதர் என அனைவரும் அழைக்கின்றனர். இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள மலிஹாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஹாஜி கலிமுல்லா கான். 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், 'இந்தியாவின் மாம்பழ மனிதர்' (Mango Man of India) என அன்போடு அழைக்கப்படுகிறார்.

இவர் ஒரே ஒரு மாமரத்தில் 350-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகை மாம்பழங்களை வளர்த்து காட்டியுள்ளார். மலிஹாபாத் பகுதி இந்தியாவின் மாம்பழ் தலைநகரம் என அழைக்கப்படுகிறது. இங்கே பிறந்து வளர்ந்த கானுக்கு மாம்பழ சாகுபடியில் புதுனை செய்ய வேண்டும் என ஆர்வம் பிறந்தது. இதனால் 1987 ஆம் ஆண்டில் ஒரு மாமரத்தில் தனது பரிசோதனைகளைத் தொடங்கினார். 'ஒட்டுதல்' (Grafting) என்ற பழமையான விவசாய நுட்பத்தை மிக நுணுக்கமாகக் கையாண்டு, ஒரே மரத்தில் பல வகை மாம்பழங்களை சாகுபடி செய்து சாதித்துள்ளார். ஒரு மரத்தின் கிளையில் மற்றொரு வகை மா மரத்தின் கிளையை இணைப்பதன் மூலம், ஒரே மரத்தில் பல்வேறு சுவை, நிறம் மற்றும் மணம் கொண்ட மாம்பழங்களை விளைவிக்க முடியும் என்பதை இவர் சாதித்த் காட்டியுள்ளார்.
அல்போன்சா, கேசர் போன்ற பாரம்பரிய ரகங்கள் மட்டுமல்லாமல், இவரே சொந்தமாக உருவாக்கிய புதிய மாம்பழ ரகங்களும் இந்த மரத்தில் விளைகின்றன. ஒரே மரம் ஆனால் இனிப்பு, புளிப்பு என பல்சுவைகளிலும், பச்சை , மஞ்சள் என பல நிறங்களிலும் மாம்பழம் விளைகிறது. இவர் தான் உருவாக்கிய புதிய ரகங்களுக்கு ஐஸ்வர்யா ராய், சச்சின் டெண்டுல்கர், அமிதாப்பச்சன், நரேந்திர மோடி போன்ற பிரபலங்களின் பெயர்களைச் சூட்டியுள்ளார்.
80 வயதைக் கடந்த நிலையிலும், கலிமுல்லா கான் தினமும் தனது தோட்டத்தை பராமரிக்கிறார். தனது வாழ்நாள் முழுவதையும் இந்த மாம்பழ வளர்ப்பு மற்றும் அதற்கான ஆய்விற்காகவே அர்ப்பணித்துள்ளார். கலிமுல்லா கானின் செயலை பாராட்டி மத்திய அரசு 2008 ஆம் ஆண்டு அவருக்கு உயரிய சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது. பல வெளிநாட்டினர் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இவருடைய நுட்பத்தைக் கற்றுக்கொள்ள மலிஹாபாத் தேடி வருகிறார்கள். லிம்கா சாதனை புத்தகத்திலும் அவர் இடம்பிடித்துள்ளார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

