வெயில் காலம் வந்துவிட்டாலே மாம்பழம், மாங்காய், நொங்கு, இளநீர் என மக்கள் தேட துவங்கிவிடுவார்கள். இந்த திடீர் டிமாண்ட் காரணமாக இதன் விலை அனைத்தும் உயர்ந்துவிட்ட நிலையில் மாம்பழம் வாங்குவோர் எண்ணிக்கை குறைவதை உணர்ந்த சில விற்பனையாளர் மாம்பழங்களை ஈஎம்ஐ-யில் விற்பனை செய்ய துவங்கியுள்ளனர்.

இந்தியாவில் Buy Now Pay Later சேவை பெரிய அளவில் பிரபலமடைந்துள்ள நிலையில், இப்பிரிவு சேவைகளை முறைப்படுத்த மத்திய அரசும் சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மாம்பழத்திற்கு கூட Buy Now Pay Later சேவையின் கீழ் ஈஎம்ஐ முறையில் பேமெண்ட் என்பது பவருக்கும் வியப்பு அளித்துள்ளது. சொல்லப்போனால் இந்த ஈஎம்ஐ சேவை அறிவித்த விற்பனையாளரின் ஐடியா கண்டு பல கார்ப்பரேட் நிறுவனங்கள் வியந்துள்ளது.

அல்போன்சா மாம்பழங்களின் விலை கண்ணீர் வரவைக்கும் வகையில் உயர்ந்துள்ள நிலையில், புனே நகரைச் சேர்ந்த வியாபாரி ஒருவர், மாதத் தவணை அல்லது இஎம்ஐ-யில் பழங்களின் ராஜாவான மாம்பழங்களை வழங்குகிறார். இது இந்திய வர்த்தக சந்தைக்கு புதிதாக இருந்தாலும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பிரிட்ஜ், போன், ஏசி ஆகியவைற்றை தவணை முறையில் வாங்கலாம் என்றால், ஏன் மாம்பழங்கள் வாங்கக்கூடாது என குருகிருபா டிரேடர்ஸ் மற்றும் பழ கடையின் உரிமையாளர் கௌரவ் சனாஸ் கூறுகிறார். எவ்வளவோ சேவைகளுக்கு டிஜிட்டல் நிதி சேவைகள் அளிக்கப்படும் வரும் வேளையில் உணவு பொருட்களுக்கு ஏன் வழங்க கூடாது என்ற கேள்வியை தான் கௌரவ் சனாஸ் முன் வைக்கிறார்.

தேவகாட் மற்றும் ரத்னகிரியில் இருந்து வரும் அல்போன்சா மாம்பழங்கள் தான் சுவையில் உச்சம் என கூறப்படும் நிலையில், தற்போது அல்போன்சா மாம்பழங்கள் சில்லறை விற்பனை சந்தையில் ஒரு டஜன் 800 முதல் 1300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் மாம்பழத்தை வாங்கி சுவைக்க கூடிய வாய்ப்பை இழக்கக்கூடும்.
இந்த நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய கௌரவ் சனாஸ், தனது குடும்பத்தின் கடை தான் இந்தியாவில் முதன்முதலில் இஎம்ஐ-யில் மாம்பழங்களை விற்பனை செய்வதாகக் கூறினார். மாம்பழகங்களின் சீசனின் தொடக்கத்தில் விலை எப்போதும் அதிகமாக இருக்கும். குளிர்சாதனப் பெட்டிகள், ஏசிகள் மற்றும் பிற உபகரணங்களை EMI இல் வாங்கலாம் என்றால், ஏன் மாம்பழங்களை வாங்கக்கூடாது? எல்லோரும் மாம்பழங்களை வாங்கலாம் என்று கௌரவ் சனாஸ் கூறியுள்ளார்.

பெரிய கடையில் எப்படி தவணை முறையில் மொபைல் போன்களை வாங்குகிறோமோ, அதே போன்றே நடைமுறையில் தான் பழங்களை இஎம்ஐ-யில் கௌரவ் சனாஸ் கடையில் விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர் கிரெடிட் கார்டைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் பர்சேஸ் தொகையை 3, 6 அல்லது 12 மாதங்களுக்கான EMI-களாக மாற்றப்படும். ஆனால் இந்தத் திட்டம் குறைந்தபட்சம் 5,000 ரூபாய்க்கு மேல் வாங்குபவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications