மன்மோகன் சிங் இந்தியாவின் 14-வது பிரதமராவார். இவர் பஞ்சாபில் பிறந்தவர். அதோடு தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். 2004-ஆம் ஆண்டின், மே 22-ஆம் தேதி அன்று இந்திய பிரதமராக முதல்முறையாக பதவியேற்றார். இவர் ஒரு சீக்கியர். இந்து சமயத்தை சாராத முதல் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆவார். இவருடைய அரசியல் பயணத்தில் இவர் ஆற்றிய பங்களிப்புகள் பற்பல.
பிறப்பு: மன்மோகன் சிங் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கிராமத்தில், 1932-ஆம் ஆண்டு, செப்டம்பர் 26-ஆம் தேதி பிறந்தார். 1948-ஆம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேஷன் தேர்வை எழுதி முடித்தார்.

அரசியல் வாழ்க்கை: மன்மோகன் சிங் 1991-ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினரானார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ராஜ்யசபாவில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்தார். 33 ஆண்டுகளுக்கு மேல் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தவர் மன்மோகன் சிங். இவர் பல சர்வதேச மாநாடுகளிலும், சர்வதேச அமைப்புகளிலும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
1993-ஆம் ஆண்டில் சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டிற்கும், அதே ஆண்டில் வியன்னா நகரில் நடைபெற்ற உலக மனித உரிமைகள் மாநாட்டிற்கும் இந்தியாவை அவர் வழிநடத்தினார். பிரதமராக மன்மோகன் சிங் எடுத்த முக்கிய முடிவுகளில் ஒன்று 100 நாட்கள் கூலி வேலை வாய்ப்பை உறுதி செய்யும் "மகாத்மா காந்தி நேஷனல் ரூரல் எம்பிளாய்மெண்ட் கேரண்டி ஆக்ட்" ஆகும். இதன் மூலம் பல்வேறு நபர்கள் பலனடைந்தனர்.
இவருடைய அரசாங்கத்தில் 2005-ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. 2013-ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் அவர்களின் அரசாங்கம் இந்தியாவின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்குவதற்காக தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகம் செய்தது.
கல்வி: மன்மோகன் சிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு படிக்கச் சென்றார். அங்கு பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். 1962-ஆம் ஆண்டு நஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரியில் பொருளாதாரத்தில் D. Phil பட்டம் பெற்றார். அவரது புத்தகமான "இந்தியாஸ் எக்ஸ்போர்ட் ட்ரெண்ட்ஸ் அண்ட் ப்ராஸ்பெக்ட்ஸ் ஃபார் செல்ஃப் கிரௌத்" இந்தியாவின் வர்த்தகக் கொள்கையின் ஆரம்பகால வளர்ச்சிக்கு வித்திட்டது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications