வியாழக்கிழமை இரவு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு நாடே துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், மத்திய அரசு 7 நாள் தேசிய துக்கம் அனுசரித்துள்ளது. இந்த 7 நாளில், அனைத்து அதிகாரப்பூர்வ அரசாங்க நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் அனைத்து அரசாங்க கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். இதேபோல் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடி இரங்கல் கூட்டமும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் காங்கிரஸ் கட்சி அதன் பவுண்டேஷன் தின விழா உள்ளிட்ட அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளையும் அடுத்த ஏழு நாட்களுக்கு ரத்துள்ளதாகவும், 7 நாள் துக்கம் அனுசரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 27 வெள்ளிக்கிழமை வங்கி செயல்பாடுகளின் நிலை குறித்து பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசு அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ள நிலையில், இந்த கேள்வி எழுந்துள்ளது. ஆனால் வங்கிகளை மூடுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வெளியாகவில்லை. இதேபோல் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக எந்த அறிவிப்பும் வரவில்லை.
தெலுங்கானா, கர்நாடகா: முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தெலுங்கானா மற்றும் கர்நாடகா அரசுகள் டிசம்பர் 27-ம் தேதியை பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளன. ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் இன்று மூடப்படும். மேலும், முன்னாள் பிரதமரின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், கர்நாடகா முதல்வர் சித்தரமய்யா ஏழு நாள் துக்க காலத்தை அறிவித்துள்ளார்.
இந்தியாவில் வங்கி விடுமுறைகள் ஒவ்வொரு மாநிலத்திற்கு வேறுபடுகின்றன, சில விடுமுறைகள் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கூடுதலாக, வங்கிகள் பொதுவாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்.
இருப்பினும், வங்கி விடுமுறை நாட்களிலும், டிஜிட்டல் வங்கி சேவைகள் அணுகக்கூடியதாக இருக்கும் என்பதால் மக்களின் அடிப்படை வங்கி சேவைகள் இதன் வாயிலாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஏற்றார் போல் வங்கிகளும் விடுமுறை நாட்களுக்கு ஏற்ப ஏடிஎம்-களில் அதிக பணத்தை லோடு செய்வது, டிஜிட்டல் வங்கி சேவை பாதிக்க கூடாது என்பதற்காக சர்வர்-ஐ கணிகாணிப்பை அதிகரிப்பது போன்ற அடிப்படை நடவடிக்கைகளை எடுக்கும்.
வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பேங்கிங் பிளாட்ஃபார்ம்கள், மொபைல் பேங்கிங் ஆப்ஸ் மற்றும் டிஜிட்டல் பேமெண்ட் முறைகளான UPI, IMPS, NEFT மற்றும் நெட் பேங்கிங் போன்ற பல்வேறு நிதி பரிவர்த்தனைகளுக்கு பில் பேமெண்ட்கள், பணப் பரிமாற்றங்கள் மற்றும் ஆன்லைன் பர்ச்சேஸ்கள் போன்றவற்றை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
தேசிய துக்கத்தின் போது வங்கி செயல்பாடுகளில் ஏதேனும் தடை இருந்தால், இது தொடர்பான கூடுதல் விவரங்களை உரிய நேரத்தில் மத்திய மாநில அரசுகள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications