முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் அவர்கள் டிசம்பர் 26ஆம் தேதி டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில், தனது 92-வது வயதில் காலமானார். சுமார் 33 ஆண்டுகள் அரசியல் உலகில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பங்காற்றிய மன்மோகன் சிங் இந்திய பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர் என்றுதான் சொல்ல வேண்டும். நிதித்துறை அமைச்சர், இந்திய பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கி ஆளுநர் என பல்வேறு முக்கிய பதவிகளில் பணிபுரிந்தவர் மன்மோகன் சிங்.
இந்திய அரசியலில் தலைசிறந்த நபராக விளங்கிய மன்மோகன் சிங் 2004-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலும், அதன் பிறகு மீண்டும் 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலும் சுமார் 2 முறை பிரதமராக பணியாற்றியவர். அவருடைய பதவி காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை என்னென்ன பாதைகளில் எல்லாம் வலுப்படுத்தலாமோ? அதற்கெல்லாம் முக்கிய பங்காற்றினார். இவர் பிரதமராக இருந்த காலத்திற்கு முன்பு பி.வி நரசிம்மராவ் அரசாங்கத்தில் நிதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

மன்மோகன் சிங்கின் நிகர மதிப்பு: 2018-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ராஜ்ய சபா பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது அவருடைய சொத்துக்கள் சார்ந்த விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மன்மோகன் சிங்கின் மொத்த சொத்து மதிப்பு ரூ.15.77 கோடி என தெரிவிக்கப்பட்டிருந்தது. டெல்லி, சண்டிகர் ஆகிய 2 நகரங்களிலும் அவருக்கு சொந்தமாக வீடுகள் இருப்பதும் இதன் வாயிலாக தெரியவந்துள்ளது. கூடுதலாக மன்மோகன் சிங் எந்த கடனிலும் இல்லை. இது அவருடைய நேர்த்தியான நிதி மேலாண்மையை கடன் இல்லாமல் இருப்பது வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
அதோடு 2018-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மன்மோகன் சிங்கின் மொத்த வருமானம் ரூ. 90 லட்சம் என்றும் கூறப்படுகிறது. அவரது குடியிருப்பு சொத்துக்கள் மற்றும் பிக்சட் டெபாசிட்களைத் தவிர டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மதிப்பு 11 ஆண்டுகளுக்கு முன்பே ரூ. 7.27 கோடியாக இருந்தது.
ஆனால் தற்போதைய மதிப்பு குறித்த விவரங்கள் தெரியவில்லை. 2013-ஆம் ஆண்டில் அவர் தனது எஸ்பிஐ கணக்கில் மொத்தமாக ரூ.3.46 கோடி டெபாசிட் செய்திருந்தார். மேலும் மன்மோகன் சிங்குக்கு எந்த கடன்களும் இல்லை என்பதும் அவர் தாக்கல் செய்த அப்பிடவிட்டில் தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் 30 ஆயிரம் ரூபாய் 3.86 லட்சம் மதிப்புள்ள நகைகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 2013-ஆம் ஆண்டு தபால் சேமிப்புத் திட்டத்தில் 12,76,000 ரூபாயையும் மன்மோகன் சிங் வைத்திருந்தார்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications