சுமார் 33 ஆண்டுகள் அரசியல் உலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்த மன்மோகன் சிங் இந்திய பொருளாதாரத்திற்கு நன்மை அளிக்கும் பல்வேறு விஷயங்களில் முக்கிய பங்காற்றியவர். பிரதமர், நிதியமைச்சர், பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் என பல்வேறு முக்கிய பதிவுகளில் பணிபுரிந்த இவருக்கு ஒரு நாள் நள்ளிரவில் ஒரு போன் கால் வந்தது. அந்த போன் காலில் தான் இவருடைய வாழ்க்கை மாறியது.
அது ஒரு அழகிய விடுமுறை மாதம். ஆம் 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த சம்பவம் தான் இது. மன்மோகன் சிங் நெதர்லாந்தில் நடந்த ஒரு மாநாட்டிற்கு சென்று கலந்து கொண்டு அதன் பிறகு டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அன்று இரவு மன்மோகன் சிங்கின் மருமகனான விஜய் தங்கா தனது மாமனாருக்கு வந்த ஒரு போன் காலை எடுத்துள்ளார். அப்போது அந்த காலில் அழைப்பு விடுத்தவர் பி.வி.நரசிம்மராவின் நம்பிக்கைக்குரிய நபரான பி.சி.அலெக்சாண்டர்.

அலெக்சாண்டர், விஜயிடம் மன்மோகன் சிங்கை எழுப்பும்படி கூறியுள்ளார். அதன் பிறகு சில மணி நேரங்களில் மன்மோகன் மற்றும் அலெக்ஸாண்டர் ஆகியோர் சந்தித்துள்ளனர்.அப்போதுதான் நரசிம்மராவ், மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராக நியமிக்கும் திட்டத்தில் இருக்கிறார் என்று அலெக்சாண்டர் தெரிவித்திருக்கிறார்.
யுஜிசி தலைவராக இருந்த மன்மோகன் சிங் அப்போது அரசியலில் இல்லை. இதனால் அலெக்சாண்டரின் பேச்சைப் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நரசிம்மராவ் மன்மோகன் சிங்கை கண்டிப்பாக நிதியமைச்சராக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருந்துள்ளார். அதோடு ஜூன் 21-ஆம் தேதி அன்று தனது யூஜிசி அலுவலகத்தில் இருந்த மன்மோகன் சிங்கை வீட்டிற்குச் சென்று ஆடை எல்லாம் மாற்றிவிட்டு பதவி ஏற்பு விழாவிற்கு வரச் சொல்லியிருக்கிறார்.
இவருடைய நியமனம் தான் இந்தியாவின் பொருளாதார போக்கை மாற்ற தொடங்கியது. குறைந்த வளர்ச்சி கொண்ட நாடாக இருந்த இந்தியாவை உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக மாற்ற வழி வகுத்தது. நரசிம்ம ராவுடன் சேர்ந்து மன்மோகன் சிங் 1991-ஆம் ஆண்டு பல்வேறு முக்கிய சீர்திருத்தங்களின் சிற்பியாக மாறினார்.
அந்த சமயத்தில் பொருளாதாரம் நலிவடைந்து இருந்தது. அன்னிய செலவாணி கையிருப்பு 2500 கோடியாக குறைந்தது. பணவீக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. எனவே நடக்கவிருக்கும் பிரச்சினைகள் குறித்து முன்பே அறிந்திருந்த மன்மோகன் சிங் ஒரு மாதத்திற்கு பிறகு தனது பட்ஜெட் உரையில் அதை அடிக்கோடிட்டு காட்டினார். ஜூலை 24-ஆம் தேதி அன்று தனது முதல் பட்ஜெட் உரையை தாக்கல் செய்தார்.
அவருடைய பட்ஜெட்டின் மூலம் செபி நிறுவப்பட்டது. அதோடு நிதித்துறைக்கான புதிய கட்டமைப்பை உருவாக்க ஆர்பிஐ கவர்னர் எம் நரசிம்மனின் கீழ் ஒரு புதிய குழுவும் உருவாக்கப்பட்டது. வரவு செலவு திட்டத்தை சீரமைத்து தேவையற்ற செலவுகளை குறைத்து கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதாரம் முன்னேற தொடங்கியது..
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications