மறைந்த டாக்டர் மன்மோகன் சிங் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் தலைவராகவும், நிதியமைச்சராகவும் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். குறிப்பாக அவர் நிதியமைச்சராக இருந்த காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் திருப்புமுனையாக இருந்த தாராளமயமாக்கல் கொள்கையை நடைமுறைபடுத்திய மிக முக்கியமானதாக இருந்தாலும், இதை தாண்டி 3 முக்கிய திட்டங்கள் அவர் பிரதமராக இருந்த போது நடைமுறைப்படுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பல்வேறு முக்கிய திட்டங்களை நிறைவேற்றி, நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (MGNREGA), தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் ஆகும்.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி சட்டம் (MGNREGA): தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் MGNREGA திட்டம், 2005-ம் ஆண்டு டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசால் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டமாகும். இந்திய கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினர்கள் தானாக முன்வந்து பணி செய்ய முன்வந்தால், குறைந்தபட்சம் 100 நாட்கள் திறமையற்ற கைத்தொழில் வேலைவாய்ப்பை வழங்க உத்தரவாதம் அளிக்கும் திட்டமாக கொண்டு வரப்பட்டது.
இந்தியாவில் மிகப்பெரிய பொது திட்டங்களில் ஒன்றான இது, கிராமப்புற திறமையற்ற தொழிலாளர்களுக்கு 100 நாட்கள் உத்தரவாத்துடன் வேலைவாய்ப்பை வழங்கியது. இன்று வரையில் இத்திட்டம் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு கிராமபுற மேம்பாட்டுக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 2005-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம், இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த சட்டத்தின்படி, எந்தவொரு இந்திய குடிமகனும் அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களிலிருந்து தகவல் கோரலாம். அந்தந்த நிறுவனங்கள் 30 நாட்களுக்குள் தகவலை வழங்க வேண்டும்.
மனுதாரரின் வாழ்க்கை அல்லது சுதந்திரத்தைப் பாதிக்கும் தகவல்கள் 48 மணி நேரத்திற்குள் வழங்கப்பட வேண்டும் என்ற முக்கிய கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம், அரசுத் தொடர்பான முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம்: "123 ஒப்பந்தம்" என்றும் அழைக்கப்படும் இந்த அமெரிக்கா-இந்தியா அணுசக்தி ஒப்பந்தம், 2008 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியா தனது அணுசக்தி வசதிகளை ராணுவ திட்டங்களுக்கும், மக்களின் நலனுக்கான பயன்பாடுகள் என பிரித்து நிர்வகிக்க ஒப்புக்கொண்டது. இதில் மக்களின் நலனுக்கான பயன்பாடுகளை IAEA அமைப்பின் பாதுகாப்பின் கீழ் இயக்கவும், இதற்கு பதிலாக அமெரிக்கா இந்தியாவின் அணுசக்தி விஷயத்தில் ஒத்துழைப்பு கொடுக்கவும் ஒப்புக்கொண்டது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications