மன்மோகன் சிங் செய்த தரமான சம்பவம்.. இந்தியாவே தலைகீழாக மாறியது..!!

இந்திய பொருளாதாரம் பல வருடங்களாக வெறும் 3.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை மட்டுமே எட்டி வந்த நிலையில், இந்திய அரசு சில முக்கியமான முடிவுகளை எடுத்து இந்தியர்களின் வாழ்வையும், இந்தியாவின் வளர்ச்சி பாதை மொத்தமாக மாறியது. இதற்கு முக்கியமான காரணம் 31 வருடங்களுக்கு முன்பு முன்னாள் நிதியமைச்சரும், பிரதமருமான மன்மோகன் சிங் தாக்கல் செய்த "அந்த" ஒரு பட்ஜெட் தான்.

ராஜீவ் காந்தி ஆட்சியில் பொருளாதார கொள்கையில் முக்கியமாக சில மாற்றத்தை காட்டிலும், முன்னுதாரணம் அளிக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் போக்கை மாற்றும் அளவுக்கு அதிரடியான சீர்திருத்தத்தை கொண்டு வந்தது நரசிம்ம ராவ் அவர்களின் அரசு தான். நரசிம்ம ராவ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், இந்தியப் பொருளாதாரத்தின் அடையாளமாக இருந்த லைசென்ஸ் ராஜ்-ன் பாதையில் இருந்து மாற்றுப் பாதைக்கு இந்தியாவை அழைத்துச் சென்றார்.

மன்மோகன் சிங் செய்த தரமான சம்பவம்.. இந்தியாவே தலைகீழாக மாறியது..!!

ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோர் சமதர்மவாதிகள், தேசியமயமாக்கல் கொள்கையில் உறுதியாக இருந்தவர்கள். ஜவஹர்லால் நேரு பொதுத்துறை நிறுவனங்களை 'நவீன இந்தியாவின் கோவில்கள்' என்றும் அழைத்தவர். நரசிம்ம ராவ் அரசுக்கு முன் இருந்த முக்கிய சவால்களில் ஒன்று வளர்ந்து வரும் நிதிப் பற்றாக்குறை தான்.

1991 க்கு முன்பு, பல அரசுகள் பொருளாதாரத்தை தாராளமயமாக்க முயற்சி செய்தன, ஆனால் அது அனைத்தும் IMF மற்றும் உலக வங்கியிடம் கடன் வாங்குவதற்கான அளவுகோல்களை சந்திக்கவே மாற்றங்கள் செய்யப்பட்டது. 1991 ஆம் ஆண்டில் தாக்கல்ல செய்யப்பட்ட பட்ஜெட் மூலம் நரசிம்ம ராவ் ஆட்சியில், நிதியமைச்சர் மன்மோகன் சிங் தான் இந்தியா பொருளாதாரத்தின் வளர்ச்சியை புதிய பாதைக்கு இழுத்து சென்றது.

ஜூலை 24, 1991 இந்திய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நாள் என்று சொன்னால் மிகையில்லை. இந்த நாளில், அப்போதைய நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையில் பல அதிரடியான மாற்றங்களை கொண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனாலேயே இந்த பட்ஜெட் அறிக்கையின் பெயர் "Manmohanomics" பட்ஜெட் என்று அழைக்கப்பட்டது.

இந்தியப் பொருளாதாரத்தை தாராளமயமாக்குவதையும், இந்தியாவின் போட்டித்தன்மையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பல பொருளாதார சீர்திருத்தங்களை மன்மோகன் சிங் 1991 ஆம் ஆண்டு பட்ஜெட் அறிக்கையில் அறிமுகப்படுத்தினார். இந்த பட்ஜெட் அறிக்கையில் மன்மோகன் சிங் அறிவித்திருந்த முக்கியமான விஷயங்கள் சில..

  • ரூபாயின் மதிப்பை 11 சதவீதம் குறைப்பது
  • இறக்குமதி வரியை குறைப்பது
  • இந்திய பொருளாதாரத்தில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி
  • அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குவது போன்ற முக்கியமான சில அறிவிப்புகளை மன்மோகன் சிங் 1991 பட்ஜெட் அறிக்கையில் வெளியிட்டார்.

இந்த அறிவிப்புகள் கலவையான விமர்சனங்களை பெற்றது, பலர் இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த மாற்றங்கள் கட்டாயம் தேவை என சில இன்றுவரையில் பாராட்டினாலும், பலர் இதை கடுமையாக மறுக்கின்றனர். குறிப்பாக ரூபாய் மதிப்பீட்டை குறைத்தது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

1991 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் இந்தியா சர்வதேச பொருளாதாரதில் முக்கிய இடத்தை எட்டியிருப்பது மட்டும் அல்லாமல் தனிநபர் வருமானம் கிட்டதட்ட இரட்டிப்பு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மறுப்புறம் சமத்துவமின்மை அதிகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு போன்ற பிரச்சனைகளும் உருவானது.

மன்மோகன் சிங் 1991 பட்ஜெட் அறிக்கைக்கு பின்பு நடந்த சாதகமான மாற்றங்கள்...

  • 1991 முன்பு பல தசாப்தங்களாக 3.5 சதவீத வளர்ச்சியில் இருந்து இந்திய பொருளாதாரம் 1991 முதல் 2008 வரையில் 7 சதவீதமாக இருந்தது.
  • வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி அளித்த மூலம் பல புதிய வர்த்தகத்திற்கு நிதியளித்து மட்டும் அல்லாமல் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது.
  • 1991 தாராளமயமாக்கல்-க்கு பின்பு உலக நாடுகள் உடனான இந்தியாவின் வர்த்தகம் வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. இதனால் இந்திய பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி அடையவும் இது உதவியாக இருந்தது.

மன்மோகன் சிங் 1991 பட்ஜெட் அறிக்கைக்கு பின்பு நடந்த மோசமாக மாற்றங்கள்...

  • 1991 பட்ஜெட் அறிவிப்புக்கு பின்பு இந்தியாவில் ஏழை மற்றும் பணக்காரர்கள் மத்தியிலான வித்தியாசம் பெரிய அளவில் அதிகரித்தது. இதனால் நாட்டில் சமத்துவமின்மை அதிகரித்தது.1991 பட்ஜெட் அறிவிப்புகள் எழைகளை காட்டிலும் பணக்காரர்களுக்கு பெரிய அளவில் பலன் அளித்து.
  • 1991 பட்ஜெட் அறிவிப்புக்கு பின்பு பொருளாதார வளர்ச்சிக்காக
  • இந்தியாவில் சுற்றுச்சூழல் சீரழிவு அதிகரித்து, இதனால் இந்தியாவில் மாசுப்பாடு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 1991 பட்ஜெட் அறிவிப்பு தான் இந்தியாவின் சிறப்பான பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது, இந்த அறிவிப்புகள் சில பின்னடைவை உருவாக்கியிருந்தாலும் இந்த பட்ஜெட் தான் பெஸ்ட். இதனாலேயே இந்த பட்ஜெட் அறிக்கையின் பெயர் "Manmohanomics" பட்ஜெட் என்று அழைக்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+