ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் FMCG பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL) தமிழ்நாட்டின் பிரபல ஆரோக்கிய உணவு பிராண்டான மண்ணா பிராண்டின் தாய் நிறுவனமான சதர்ன் ஹெல்த் ஃபுட்ஸை (Southern Health Foods) முழுமையாக கையகப்படுத்தியுள்ளது. இந்த கைப்பற்றல் மூலம் ரிலையன்ஸ் ஆரோக்கியம் மற்றும் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்த தயாராகும்.
மண்ணா பிராண்டு கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் வலுவான வாடிக்கையாளர் பட்டாளத்தை கொண்டுள்ளது. மேலும் குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரையில் அனைத்து தரப்பினரையும் முக்கிய வாடிக்கையாளராக வைத்துள்ளது மண்ணா பிராண்டு.

ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் பிராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL)
டிசம்பர் மாதம் தான் உயர்தர பருப்பு வகைகளுக்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த உதயம் ஆக்ரோ ஃபுட்ஸ் நிறுவனத்தில் பெரும்பங்கை வாங்கியது. வெறும் 2 மாத இடைவெளியில் தற்போது சத்துமாவுக்கு பெயர்போன மண்ணா பிராண்டின் தாய் நிறுவனமான சதர்ன் ஹெல்த் ஃபுட்ஸை வாங்கியுள்ளது.
ரிலையன்ஸ் தமிழ்நாட்டில் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நிறுவனத்தை 2020ஆம் ஆண்டு வாங்கி அதன் மொத்த வர்த்தகத்தை தனது ஸ்மார்ட் பஜார் உடன் இணைத்தது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து இதுவரையில் 3 பெரிய மற்றும் பிரபலமான பிராண்டுகளை முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார்.
இந்நிறுவனம் சிறு தாணியம் அடிப்படையிலான உணவுகள், மல்டிகிரெயின் பொருட்கள், ஆரோக்கியத்தை மையப்படுத்திய உணவுகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றது. ரிலையன்ஸ் ஏற்கனவே உதயம், இண்டிபெண்டன்ஸ், சில் போன்ற பிரபல பிராண்டுகளின் கீழ் உணவு பொருட்களை இந்தியா முழுவதும் விற்பனை செய்து வரும் வேளையில் தற்போது மண்ணா நிறுவனத்தை கைப்பற்றியதன் மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பிரிவை மேலும் விரிவாக்குகிறது.
இந்தியாவில் மக்களின் வாழ்க்கை முறை வேகமாக மாறி வருகிறது. ஆரோக்கியமான உணவு, சத்து நிறைந்த பொருட்கள், functional foods ஆகியவற்றுக்கு சமீப காலமாக தேவை அதிகரித்துள்ளது. இந்த வளரும் சந்தையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ரிலையன்ஸ் தொடர்ச்சியாக தனது வர்த்தக முதலீடுகளை செய்து வருகிறது.
மலிவு விலையில் தரமான ஆரோக்கிய உணவுகளை பெரிய அளவில் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்க முகேஷ் அம்பானியின் ரிலையைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டமிட்டு உள்ளது. இந்த இலக்கை அடைய மண்ணா முக்கியமான வளர்ச்சி இன்ஜின் ஆக இருக்கும்.
மேலும் ஐடிசி, நெஸ்லே முதல் அனைத்து FMCG நிறுவனங்களும் தற்போது ஆரோக்கியமான உணவு பொருட்களின் வர்த்தகத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இல்லையெனில் இப்பிரிவில் இருக்கும் நிறுவனங்களை வாங்கி வருகிறது.
மண்ணா பிராண்டின் உள்ளூர் பிரபலம் மற்றும் தரமான உற்பத்தி ரிலையன்ஸின் தேசிய அளவிலான விநியோக வலையமைப்புடன் இணைந்து தென்னிந்திய சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications