முயற்சி திருவினையாக்கும் என்பது எல்லாருக்கும் எப்போதும் பொருந்தக்கூடிய பொன்மொழியாகும். அது பீகாரை சேர்ந்த மனோஜ்குமார் ராய்க்கு சாலப் பொருந்தியுள்ளது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இன்றைக்கு சமூகத்தில் மிகப் பெரும் அந்தஸ்தில் உள்ள அதிகாரியாக இருக்கிறார்.
வறுமையும், தோல்விகளும், மொழிப்பிரச்னைகளும் அவரது வாழ்க்கையில் பல அழுந்தங்களைத் தந்தபோதும் அயராது பாடுபட்டு படிப்பில் கவனம் செலுத்தி ஐஏஎஸ் தேர்வு எழுதினார். அதில் அவர் அகில இந்திய அளவில் 870ஆவது ரேங்கைப் பெற்று இன்றைக்கு அரசு உயர் அதிகாரியாகப் பதவி வகிக்கிறார்.

பிகார் மாநிலத்தின் சுபால் என்ற குக்கிராமத்தில் மனோஜ்குமார் ராய் பிறந்தார். அவரது குடும்பம் பஞ்சத்தில் அடிபட்டு படாதபாடு பட்டு வந்தது. இதைக் கண்டு பொறுக்காத ராய் எப்படியும் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்ற உறுதியைப் பூண்டார்.
1996 ஆம் ஆண்டில் அவர் தில்லிக்கு குடிபெயர்ந்தார், கிராமவாசியான ராய்க்கு டெல்லியின் உல்லாச வாழ்க்கை முறை சற்றும் பொருந்தவில்லை. பிழைப்புக்காக பல்வேறு வேலைகளை செய்தார். ஒருகட்டத்தில் தள்ளுவண்டி வைத்து முட்டை, காய்கறிகளை தெருத்தெருவாகக் கொண்டு சென்று விற்றார்.
பல அலுவலகங்களில் துப்புரவுப் பணிகளைச் செய்தார். பின்னர் புகழ்பெற்ற ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்குப் பொருட்களை சப்ளை செய்யும் வேலை பார்த்தார். இந்த நேரத்தில் அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் உதவி செய்ய சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தன்னைத் தயார்படுத்தத் தொடங்கினார்.
கிடைத்த பணத்தை வைத்து தில்லியில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் கல்லூரியில் மாலைநேர பட்டப்படிப்பை 2000 ஆம் ஆண்டில் முடித்தார். காலை நேரத்தில் வழக்கம் போல தள்ளுவண்டியில் வியாபாரம் தொடர்ந்தது. 2001இல் அவர் முழுமூச்சாக சிவில் சர்வீஸஸ் தேர்வுக்காக படிக்கத் தொடங்கினார். மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தபோதிலும் ஓர் அரசு அதிகாரியாக வேண்டும் என்ற வெறி அதைத் தடுத்துவிட்டது என்கிறார் ராய்.
தில்லியிலிருந்து பாட்னாவுக்கு சென்று அங்கு ராஷ் பிகாரி பிரசாத் சிங் என்பவரிடம் பயிற்சியைத் தொடங்கினார். ஆப்ஷனல் பாடமாக ஜியாகிரபியைத் தேர்வு செய்தார்.
மூன்றாண்டுகள் கஷ்டப்பட்டு 2005இல் முதல்முறையாக சிவில் சர்வீஸஸ் தேர்வை எழுதினார். செலவை சமாளிக்க பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தார். அவரும் ஒரு யுபிஎஸ்சி கோச்சிங் சென்டரில் சேர்ந்து படித்தார்.
முதல் தடவை தேர்வில் அவர் தேர்ச்சி பெறவில்லை. இரண்டாவது முயற்சியின்போது அவருக்கு ஆங்கில மொழி பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது. யுபிஎஸ்சி தேர்வில் ஆங்கிலத்திலும் ஏதாவது ஒரு பிராந்திய மொழியிலும் தேர்வாக வேண்டும். இதில் தேர்ச்சி பெறாவிட்டால் ஜெனரல் ஸ்டடீஸ் மற்றும் ஆப்ஷனல் சப்ஜெக்ட் பேப்பர்கள் திருத்தப்படாது.
இறுதி மதிப்பெண் பட்டியலுக்கு மொழியியல் பாடங்கள் அத்தியாவசிமாக இருந்தன. இரண்டாவது முயற்சியில் ஆங்கிலத்தில் தோற்றதால் அவரது ஓராண்டு முயற்சியும் வீணானது. மூன்றாவது முயற்சியில் அவரால் மெயின்ஸ் மற்றும் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை.இருப்பினும் விடாமல் முயற்சி செய்தார். அவரது 30ஆவது வயதில் தனது கற்கும் முறையை மாற்றிக் கொண்டு நான்காவது முயற்சிக்குத் தயாரானார்.
என்சிஆர்டி-யின் 6-12 வகுப்புப் பாடப் புத்தகங்களை முழுக்க முழுக்க மனனம் செய்தார். இதன் மூலம் தனது பிரிலிம்ஸ் தேர்வுக்கு 80 சதவீதம் தயாரானதாக ராவ் கூறுகிறார். ஒருவழியாக அவர் 2010 ஆம் ஆண்டில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் 870ஆவது ரேங்கை பெற்றார்.
அவரது முதல் போஸ்டிங் பீகாரின் நாளந்தாவில் உள்ள ராஜ்கிர் ராணுவ தளவாட பேக்டரியின் அட்மினிஸ்ட்ரேடிவ் அதிகாரி. தனது உழைப்பின் பெருமையை உணர்ந்த ராவ், தன்னைப் போலவே ஏழ்மையான மாணவர்களுக்கு இலவசமாக சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சியை அளிக்க விரும்பினார். இதற்காக வார இறுதியில் நாளந்தாவில் இருந்து பாட்னாவுக்கு 110 கி.மீ. பயணம் செய்து பயற்சியை அளித்து வந்தார். இன்றைக்கு அவரது கோச்சிங் மையம் சிறப்பாகச் செயல்படுகிறது.
தற்போது கொல்கத்தாவில் உள்ள ஐஓஎப்எஸ் அலுவலகத்தில் உதவிக் கமிஷனராக மனோஜ்குமார் ராய் பணியாற்றி வருகிறார். எப்படிப்பட்ட ஏழ்மையான சூழலிலும் மனம் தளராது உழைத்தால் நிச்சயம் ஒரு நாள் சமூகத்தில் பெரிய அந்தஸ்துக்கு வர முடியும் என்பதற்கு ராயின் வாழ்க்கையே சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications