உலக வரலாற்றில் இவரைபோல் யாருமில்லை.. ஆப்பிரிக்க பேரரசர் மான்ஸா மூசா..!

தினசரி ஏதாவது ஒரு செய்தியில் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை கேட்டிருக்கலாம். ஆனால் உண்மையில் உலக வரலாற்றுக் குப்பைகளை குடைந்து பார்த்தோமென்றால் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பெரும் செல்வந்தர்கள் உலகில் வாழ்ந்து மறைந்திருக்கின்றார்கள் என்று அறியும்போது ஆச்சரியமாக இருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு உலக மகா பணக்காரர்தான் ஆப்பிரிக்காவில் 14ஆவது நூற்றாண்டில் அரசராக இருந்த மான்ஸா மூசா. இதுவரை உலகில் வாழ்ந்த மிகப் பெரும் பணக்காரர் இவர்.கி மு 1280 ஆண்டில் பிறந்த மான்ஸா மூசா மேற்கு ஆப்பிரிக்காவின் மாலி பேரரசை ஆண்டார்.

உலக வரலாற்றில் இவரைபோல் யாருமில்லை.. ஆப்பிரிக்க பேரரசர் மான்ஸா மூசா..!

கி மு 1321இல் மன்னராகப் பட்டம் சூடிய மான்ஸா மூசாவின் அப்போதைய சொத்து மதிப்பு 400 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. பணவீக்கத்தை ஒப்பிட்டுக் கழித்தாலும் மிச்சமிருக்கும் தொகை எலான் மஸ்க், ஜெப் பெசோஸைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாகும்.

அவரது சொத்துக்கு அடிப்படையாக இருந்தது இயற்கை வளம் ஆகும். தெற்கில் அமைந்த பாம்பூக், வாங்காரா, புரே, கலம், டாக்ஜா தங்க சுரங்கங்கள் மற்றும் வடக்கு பகுதியில் விளையும் உப்பு. ஐவரி கோஸ்ட், செனகல், மாலி, பர்கினா பாஸோ ஆகிய நாடுகளையும் மூஸா ஆட்சி செய்தார். அவரது அரசின் தலைநகர் டிம்புக்டு.

கருணைக்கும் கொடைக்கும் பெயர் போனவர் மான்ஸா மூசா. மாலியன் தங்கத்தை அவர் தானம் செய்ததால் வெறுப்படைந்த மாலி கவிஞர்கள் எப்போதும் மான்ஸாவை போற்றி பாடுவதில்லை. உள்ளூர் சொத்துக்களையெல்லாம் பிறருக்கு வாரி இறைப்பதாக கோபம் கொண்டிருந்தனர்.

1324 ஆம் ஆண்டில் மெக்காவுக்கு ஹஜ் புனித யாத்திரை சென்ற மான்ஸா மூசா அவரது வாகனத்தில் ஏராளமான தங்கத்தை கொண்டு சென்றுள்ளார். அவருடன் 100 ஒட்டகங்கள், 12 ஆயிரம் பணியாட்கள், 60 ஆயிரம் அடிமைகள் உடன் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஹஜ் புனித பயணத்தின்போது அவர் தன்னுடன் 18 ஆயிரம் கிலோ தங்கத்தை எடுத்துச் சென்றதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டில் அதன் மதிப்பு 957 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+