4வது மாதமாக வளர்ச்சி பாதையில் இந்திய தொழிற்துறை.. அக்டோபர் மாதத்தில் PMI 55,9 ஆக அதிகரிப்பு..!

டெல்லி : இந்தியாவில் உற்பத்தி துறை சார்ந்த பிஎம்ஐ குறியீடு ((Purchasing Managers' Index) கடந்த அக்டோபர் மாதத்தில், தொடர்ச்சியாக நான்காவது மாதமாக 55.9 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.

இது கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த விகிதமானது 53.7 ஆக வளர்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஹெச்.எஸ் மார்கிட் இந்தியா அமைப்பு வெளியிட்ட உற்பத்தி குறித்தான பிஎம்ஐ குறியீடு, தொடர்ச்சியாக நான்காவது மாதமாக 55.9 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.

வலுவான வளர்ச்சி

வலுவான வளர்ச்சி

இது கடந்த பிப்ரவரி முதல் கொண்டு ஒட்டுமொத்த செயல்பாடுகளும் வலுவான முன்னேற்றத்தை காட்டியுள்ளதயே இந்த குறிகாட்டிகள் சுட்டிக் காட்டியுள்ளது.
தற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கம் பற்றிய கவலைகள் இருந்தாலும், தடுப்பூசிகளும் அதிகளவில் போடப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் தற்போது தொழிற்துறையானது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

தேவை மீள்ச்சி

தேவை மீள்ச்சி

குறிப்பாக கடந்த அக்டோபர் மாதத்தில் நிறுவனங்கள் உற்பத்தியினை அதிகரித்துள்ளன. தற்போது லாக்டவுனில் இருந்து மீண்டுள்ள தொழிற்துறையானது, தேவையும் அதிகரிப்பினையும் கண்டு வருகின்றன. இதனால் உற்பத்தி விகிதமும் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் தான் 4வது மாதமாக வளர்ச்சி விகிதமானது அதிகரித்துள்ளது.

புதிய ஆர்டர்கள் அதிகரிப்பு

புதிய ஆர்டர்கள் அதிகரிப்பு

மேலும் தற்போது சந்தையில் மேம்பட்ட நம்பிக்கை, வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தேவை மற்றும் வெற்றிகரமான சந்தைபடுத்துதல் உள்ளிட்ட பலவற்றிற்கும் மத்தியில், புதிய ஆர்டர்கள் வரத்தும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த ஏற்றமானது ஏழு மாதங்களில் மிக வேகமாக உள்ளதாகவும் இந்த அறிக்கையானது சுட்டிக் காட்டுகின்றது.

உற்பத்தியிலும் வளர்ச்சி

உற்பத்தியிலும் வளர்ச்சி

இதோடு தொழிற்சாலைகளின் உற்பத்தி விகிதத்திலும் கணிசமான வளர்ச்சி காணப்படுகின்றது. குறிப்பாக கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு இது கணிசமான வளர்ச்சி விகிதமாகும்.
அதே நேரம் புதிய ஆர்டர்களும் உயர்ந்துள்ளன. குறிப்பாக உற்பத்தி மற்றும் விற்பனையானது மூன்று பரந்த பகுதிகளில் வளர்ச்சியினை கண்டுள்ளன. குறிப்பாக உற்பத்தி துறை, இடை நிலைப் பொருட்கள், விலை அதிகரிப்பு உள்ளிட்ட வளர்ச்சியினை கண்டுள்ளன.

ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிப்பு

ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிப்பு

இந்தியாவில் ஆர்டர்கள் அதிகரித்துள்ளதுடன், சர்வதேச அளவிலும் இந்திய பொருட்களுக்கான தேவையானது கணிசமாக அதிகரிதுள்ளது. புதிய ஏற்றுமதி பணிகள் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு வேகமாக அதிகரித்துள்ளன.
எனினும் மூலதன பொருட்களின் விலை அதிகரிப்பால், உற்பத்தி விலையும் அதிகரித்துள்ளன.

மூலதன பொருட்கள் பணவீக்கம்

மூலதன பொருட்கள் பணவீக்கம்

மூலதன பொருட்களுக்கான விலை அதிகரிப்புக்கு மத்தியில் உள்ளீட்டு பணிவீக்க விகிதமானது 92 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.

உதாரணத்திற்கு கெமிக்கல்ஸ், துணி, உலோகம், எலக்ட் ரானிக் உதிரி பாகங்கள், எண்ணெய், பிளாஸ்டிக் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதை இந்த குறியீடானது சுட்டிக் காட்டுகின்றது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+