இந்திய உற்பத்தி துறை 2023-24 நிதியாண்டைச் சிறப்பான செயல்பாடுகளுடன் நிறைவு செய்துள்ளதாகத் தனியார் நிறுவனமான எச்எஸ்பிசி இந்திய உற்பத்தி துறை PMI நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் உற்பத்தி துறையை முதன்மையாகக் கொண்டு மாறி வரும் வேளையில், நாட்டின் உற்பத்தி மற்றும் புதிய ஆர்டர்களில் வலுவான வளர்ச்சி காரணமாக, நிறுவனங்கள் பணியாளரை அதிகளவில் சேர்க்கப்பட்ட முக்கியமான சம்பவங்கள் மார்ச் மாதத்தில் நடந்துள்ளது.

எச்எஸ்பிசி இந்திய உற்பத்தி துறை PMI (பர்சேசிங் மேனேஜர்ஸ் இண்டெக்ஸ்) குறியீடு எப்போதும் இல்லாமல் மார்ச் மாதத்தில் 16 ஆண்டு கால உயர்வான 59.1 ஆக உயர்ந்தது புதிய சாதனை படைத்துள்ளது. பிப்ரவரி மாதம் இதன் அளவீடு 56.9 ஆக இருந்தது, 2008 பிப்ரவரிக்குப் பிறகு இதுவே மிக உயர்ந்த அளவீடாகும்.
ஆனால் எச்எஸ்பிசி மார்ச் மாதத்தின் இந்தியாவின் PMI குறியீட்டில் ஆரம்ப மதிப்பீடான 59.2 அளவை காட்டிலும் குறைவாக இருந்தது. பொதுவாக PMI குறியீடு என்பது 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் வளர்ச்சிப் பாதையில் இருப்பதாகப் பொருள், 50 புள்ளிகளுக்குக் கீழ் இருந்தால் நாட்டின் உற்பத்தி சரிவு பாதைக்குச் செல்வதாகப் பொருள்.
இந்தியாவின் உற்பத்தி துறை தொடர்ந்து 33வது மாதமாக மார்ச் மாதத்திலும் உயர்வைக் கண்டுள்ளது. இந்த தொடர் உயர்வுக்கு முக்கியமான காரணம் நுகர்பொருட்கள், இடைநிலை பொருட்கள் மற்றும் முதலீட்டுப் பொருட்கள் துறைகளில் ஏற்பட்ட வேகம் வளர்ச்சி தான்.
மார்ச் மாதத்தில் நாட்டின் உற்பத்தி மற்றும் புதிய ஆர்டர்களில் 2020 அக்டோபர் மாதத்திற்குப் பிறகு மிக வலுவான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இதேபோல் வரலாற்றில் இரண்டாவது உயர்வான மூலப்பொருள் இருப்புகளில் அதிகரித்துள்ளது என்று HSBC நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உற்பத்தி அதிகரிப்பது மட்டும் அல்லாமல், புதிய ஆர்டர்களை அதிகரிப்பது மூலம் நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து உற்பத்தி செய்வதற்கான ஆதாரம் உறுதி செய்யப்படும்.
இதன் வாயிலாகத் தனியார் நிறுவனங்கள் உற்பத்தி, விநியோகத்திற்கு அதிகப்படியான முதலீட்டையும், அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுத்துள்ளது. இதன் மூலம் நாட்டின் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை குறையும்.


Click it and Unblock the Notifications