பிரதமர் நரேந்திர மோடி அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில், உற்பத்தித் துறை முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளில் ஒன்றாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 17 சதவீத பங்களிப்பையும், அதிகளவிலான வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவதன் மூலம், இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் இத்துறைக்கு பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்புகள் வர வாய்ப்பு உள்ளது..
“Make in India” திட்டம் மூலமாகவும், உற்பத்தி இணைப்பு ஊக்கத்தொகை (Production Linked Incentive - PLI) திட்டம் மூலமாகவும் இந்திய அரசு எடுத்த முயற்சிகள் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் உலகிலேயே வேகமாக வளர்ச்சி பெறும் நாடாக இந்தியாவை உருவாக்கியுள்ளது.

இந்திய பொருளாதாரம் சேவை துறையை மட்டுமே நம்பியிருந்த வேளையில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த நாடாக மாற வேண்டும் என்ற முக்கிய இலக்கிற்கு மேக் இன் இந்தியா மற்றும் PLI திட்டம் வலு சேர்த்தது. இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் வேளையில், இந்த வேகத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், இந்தியாவை சுயசார்பு (Atma Nirbhar) நாடாக மாற்றுவதற்கும், இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அதிரடியான திட்டங்களை தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
இதற்காக தொழில்துறையினர் முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று, PLI திட்டத்தின் கீழ் புதிய துறைகளைச் சேர்த்து மொத்தமாக விரிவுபடுத்துவது. குறிப்பாக, அதிகளவிலான தொழிலாளர்கள் தேவைப்படும் துறைகளுக்கும், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுடன் அதிகப்படியான இணைப்பு கொண்ட துறைகளுக்கும் இந்தத் PLI திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொழில்துறையினர் முன்வைக்கின்றனர்.
உதாரணமாக, விளையாட்டுப் பொருட்கள், காலணிகள், மரச்சாமான்கள், மின்சார சைக்கிள், நகைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் ஆகிய துறைகளுக்கு இந்த PLI திட்டத்தை விரிவுபடுத்துவது இந்திய உற்பத்தியை மேம்படுத்தும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் சாத்தியமாகுமா என்பது பட்ஜெட் அறிவிப்பில் தான் தெரிய வரும்.
PLI திட்டத்திற்கு கூடுதலாக, வரிச் சலுகைகள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் எளிதான வணிகச் சூழலை உருவாக்குதல் ஆகிய நடவடிக்கைகளையும் தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர். இதன் மூலம், உற்பத்திச் செலவைக் குறைத்து, உலகளாவிய சந்தையில் போட்டித்திறனுடன் செயல்பட முடியும் எனவும் தொழிற்துறையினர் கூறுகின்றனர்.
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உற்பத்தித் துறை வலுப்பெறுவது அவசியம். இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் உற்பத்தி துறைக்கு மத்திய அரசு எவ்வாறான திட்டங்களை அறிவிக்கும் என்பதை பொறுத்தே பார்க்க முடியும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications