இந்தியாவின் பெரிய உற்பத்தி மையமாக தமிழ்நாடு படிப்படியாக மாறி வருகிறது. இருசக்கர வாகன உற்பத்தி , கார்கள் உற்பத்தி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, காலணி என தொடர்ச்சியாக பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு தேசிய அளவில் முன்னிலையில் தான் இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதே இதற்கு முக்கிய காரணம். மனித வளம் ,அரசு வழங்கக்கூடிய சலுகைகள் , ஏற்றுமதி இறக்குமதிக்கு தேவையான வசதிகள் என பலவும் நிரம்பி இருப்பதால் பல்வேறு நிறுவனங்களும் ஓடி வந்து தமிழ்நாட்டில் முதலீடு செய்து வருகின்றன . தமிழ்நாடு அரசும் முதலீடு சென்னை நகரத்துடன் நின்று விடக்கூடாது மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும் பரவலாக வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக தான் அனைத்து மாவட்டங்களிலும் டைடல் பார்க்குள் , தொழில் பூங்காக்கள் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு ஒருபுறம் தீவிரப்படுத்தி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலினும் கூட அண்மையில் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு பல ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து வந்தார்.
இந்த சூழலில் தான் பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படக்கூடிய பல்வேறு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படக்கூடிய நான்கு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.
ஜெட்வெர்க் (Zetwerk ) என்ற நிறுவனம் பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது . எலக்ட்ரானிக்ஸ், டிஃபென்ஸ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்றவற்றுக்கான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தருகிறது இந்த நிறுவனம். கூடிய விரைவில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தன்னுடைய உற்பத்தி ஆலையை நிறுவ இருக்கிறது. 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் சோலார் செல் ஆலையை இந்த நிறுவனம் அமைக்க இருக்கிறது . இதன் மூலம் தமிழ்நாட்டில் 3 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகப்பட இருக்கின்றன.
அதேபோல ஹை க்யூ (HiQ) எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது . இந்த நிறுவனமும் தமிழ்நாட்டில் 425 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது. தங்களுடைய பிஜிபி உற்பத்தி ஆலையை ஓசூரில் அமைக்க இருக்கிறது . இதன் மூலம் சுமார் 400 வேலை வாய்ப்புகள் ஓசூரில் உருவாக இருக்கின்றன.
ஏஎஸ்எம் (ASM) டெக்னாலஜிஸ் என்ற நிறுவனமும் தமிழ்நாட்டில் குறிப்பாக ஓசூரில் தங்களுடைய எல்இடி எக்யூப்மென்ட் டிசைன் மற்றும் உற்பத்தி ஆலையை நிறுவ இருக்கிறது. 250 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் இந்த ஆலையில் 1100 வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. அதேபோல டொயோட்டா (Toyota Boshoku) நிறுவனம் 450 கோடி ரூபாய் முதலீட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே உற்பத்தி ஆலை அமைக்க முன் வந்திருக்கிறது.
பெங்களூருவுக்கு மிக அருகிலேயே இருப்பதால் இந்த நிறுவனங்கள் ஓசுரில் உற்பத்தி ஆலை அமைப்பது தங்களுக்கு சௌகரியமாக இருக்கும் என கருதுகின்றன. இவை ஓசூருக்கு பொருளாதார ரீதியான வளர்ச்சியை கொடுக்கும். இது தவிர வேலைவாய்ப்புகளையும் பெருக்க உள்ளன.
More From GoodReturns

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications